மடாலயங்களில்
குறைந்த பட்சம் பத்து வருடங்கள்
குருவுடன் சீடனாக இருந்தால்தான்
மற்றவர்களுக்கு உபதேசிக்கும்
தகுதி உள்ளதாக கொள்ளலாம்.
'டென்னோ'
பத்து வருடம்
முடித்ததால் அவனை ஆசிரியனாக
அறிவித்தார்கள்.
டென்னோ
'நான்
இன்' ஐ
சந்திக்க ஒரு நாள் போனார்.
மழைக்காலம்.
காலில்
மரச்செருப்புகள் அணிந்து
குடை ஒன்றையும் எடுத்துக்கொண்டு
போனார்.
அறைக்குள்
நுழைந்ததும் 'நான்
இன்' கேட்டார்:
“மரச்செருப்புகள்
அணிந்து குடையை ஏந்தி வந்தாய்
அல்லவா? அவற்றை
வெளியே விட்டுவிட்டாய்.
குடையை எங்கே
வைத்தாய்? செருப்புக்கு
வலது பக்கமா இடது பக்கமா?”
டென்னோ
விடை சொல்ல முடியாமல் தலை
குனிந்தார்.விழிப்புணர்வு
இன்னும் வளரவில்லை என்று
உணர்ந்தார். ஆகவே
அடுத்த பத்து வருடங்கள் நான்
இன் உடன் சீடனாக இருந்து தொடர்
விழிப்புணர்வு பெற்றார்.
எப்போதும்
விழிப்புணர்வுடன் இருப்பவர்,
எப்போதும்
அந்த கணத்திலேயே வாழ்பவர்
- இதோ
குரு இருக்கிறார்!
No comments:
Post a Comment