ஜென்
மாஸ்டர் ஞானம் பெற்றார்!
பின் வரும்
வரிகளை எழுதி வைத்தார்.
“என்னே
அற்புதம்!
நான்
விறகு வெட்டுகிறேன்!
கிணற்றில்
இருந்து நீர் இறைக்கிறேன்!”
ஞானம்
பெற்றதும் உலகம் மாறுவதில்லை.
மரம் மரமாகவே
இருக்கிறது. மக்களும்
மக்களாகவே இருக்கிறார்கள்.
நீங்களும்
அப்படியேத்தான் இருக்கிறீர்கள்.
முன்னே
கோபக்காரனாக இருந்திருந்தால்
கோபக்காரனாக; சாந்தமாக
இருந்திருந்தால் சாந்தமாக;
புத்திசாலியாக
இருந்திருந்தால் புத்திசாலியாக;
முட்டாளாக
இருந்திருந்தால் முட்டாளாக.
ஒரே
வித்தியாசம் என்னவென்றால்
உங்கள் பார்வைக்கோணம்
மாறிவிட்டது.
நீங்கள்
எல்லாவற்றிலிருந்தும்
பற்றற்றுவிட்டீர்கள். இதயம்
ஆனந்தத்தில் நிரம்பி வழிகிறது.
பற்றற்றுவிட்டது
என்பதால் எல்லாவற்றிலிருந்தும்
விலகிவிடவில்லை. எதை
செய்கிறோமோ அதை த்யானமாகவே
செய்கிறோம். அந்த
கணத்தில் வேறு எதற்கும் அங்கே
இடமில்லை. அதனாலேயே
இன்னும் விறகு வெட்டுகிறோம்;
நீர் இறைக்கிறோம்.
எதை செய்தாலும்
ஆனந்தமே நிறைந்து இருக்கிறது.
சாதாரணமாக
காண்பதில் /செய்வதில்
- ஒரு
சித்திரமோ இயற்கை காட்சியோ-
இன்பம்
உண்டாகிறது. த்யானமாக
செய்வதில் பேரின்பம் உண்டாகிறது.
இப்படி
அமிழ்ந்து போவது சிறு
குழந்தைகளுக்கு இயற்கையாக
நிகழ்கிறது.
No comments:
Post a Comment