வாழ்க்கை
மயக்கும் வைன் போல.
எல்லாரும்
லேபிளில் என்ன எழுதி இருக்கிறது
என்றே பார்க்கிறார்கள்.
பலரும்
சுவைப்பதில்லை!
புத்தர்
ஒரு மலரைக்காட்டி சீடர்களிடம்
அதைப்பற்றி சொல்லுமாறு
பணித்தார்.
ஒருவன்
அது குறித்து ஒரு சொற்பொழிவே
ஆற்றினான்.
இன்னொருவன்
அது கூறித்து ஒரு கவிதையை
சொன்னான்.
மற்றவன்
ஒரு குட்டிக்கதையை சொன்னான்.
எல்லாரும்
லேபிள் ஒட்டுகிறவர்கள்.
மஹா
கஷ்யப் அதை உள்ளபடி பார்த்தார்.
ஆகவே வாயை
திறக்கவே இல்லை!
என்னால்
மட்டும் ஒரு மலரை, பறவையை,
ஒரு மரத்தை...
சுவைக்க
முடியுமானால்..... ஹும்!
என்ன செய்ய?
என் நேரமும்
ஆற்றலும் முழுதும் லேபிலை
ஆரய்வதிலேயே போய்விடுகிறது.
No comments:
Post a Comment