புத்தரை
யாரோ கேட்டார்கள். யார்
புனிதர்?
புத்தர்
சொன்னார் ஒவ்வொரு மணி நேரமும்
பல நொடிகள். அந்த
ஒவ்வொரு நொடியையும் பல கணமாக
பகுத்தால் ஒவ்வொரு கணத்திலும்
யாரால் முழுக்க வாழ முடிகிறதோ
அவரே புனிதர்.
ஒரு
ஜப்பானிய வீரனை சிறை
பிடித்துவிட்டார்கள்.
இரவாயிற்று.
அவனால் தூங்க
முடியவில்லை. நிச்சயம்
அடுத்த நாள் காலை தன்னை
துன்புறுத்தப்போகிறார்கள்
என்று பயந்தான். அப்போது
அவனது குரு சொன்னது நினைவுக்கு
வந்தது. “ நாளை
என்பது மாயை. உண்மையானது
இந்த தருணம் மட்டுமே!”
ஆகவே அவன்
அந்த தருணத்துக்கு மீண்டான்.
நிம்மதியாக
உறங்கினான்.
எதிர்காலம்
என்பது யார் மீது தன் பிடியை
விட்டுவிட்டதோ அவன் பறவைகள்
போல; வயலில்
பூத்த மலர்களைப்போல.
நாளை என்பது
குறித்த அச்சமே இல்லை.
தற்போதில்
இருப்பு! புனிதர்!
No comments:
Post a Comment