டயோஜீன்ஸ்
ஒரு தத்துவ ஞானி. அவர்
ரொட்டியும் பயறும் சாப்பிட்டு
உயிர் வாழ்ந்தார்.
அரிஸ்டிபஸ்
மன்னரை போற்றி நல்ல நிலையில்
வாழ்ந்து வந்தார்.
அரிஸ்டிபஸ்
டயோஜீன்ஸை பார்த்தார்.
“மன்னரை
போற்றிக் கொண்டு இருந்தால்
பயறை உண்டு வாழ தேவையிருக்காது"
என்றார்.
டயோஜீன்ஸ்
சொன்னார் "பயறை
உண்டு வாழ தெரிந்திருந்தால்
மன்னரை போற்றி வாழ தேவையில்லை."
No comments:
Post a Comment