அது
ஏதோ ஒரு புதிய மதம். ஹால்
வயதான கிழவிகளால் நிறைந்து
இருந்தது. இடுப்பில்
ஒரு துணியும் டர்பனும் மட்டும்
அணிந்து இருந்த ஒருவர் பேச
மேடை ஏறினார். மிகவும்
உணர்ச்சியுடன் மனம் உடலை
வயப்படுத்தும் என்று பேசினார்.
முடித்தபின்
எனக்கு எதிரில் இருந்த
தன்னிடத்துக்கு திரும்பினார்.
அவருக்கு
பக்கத்து சீட்டில் அமர்ந்து
இருந்த கிழவி கேட்டார்:
"நீங்க
நிஜமாத்தான் மனசு உடலை
வெல்லும்ன்னு சொன்னீங்களா?”
"ஆமாம்.”
"அப்ப
அந்த சீட்டை எனக்கு கொடுத்துட்டு
இங்கே உக்காந்துக்கறீங்களா?
இங்க குளுந்த
காத்து அடிக்குது!”
No comments:
Post a Comment