என்
கண்களை நம்பவே முடியவில்லை.
கடையின்
பெயர் 'உண்மைக்கடை'
என்று இருந்தது.
கடையில்
விற்பனை பெண்மணி இதமாக கேட்டார்
"உங்களுக்கு
எந்த மாதிரி உண்மை வேணும்?
பாதி உண்மையா,
முழு உண்மையா?”
"எனக்கு
முழு உண்மைத்தான் வேணும்.
நீர்த்துப்போனதோ
ஏமாற்றுவதோ முட்டுக்கொடுப்பதோ
தர்க்கரீதியானதோ இல்லை.
கலப்படமற்ற
வெறும் உண்மை.”
அந்த
பெண்மணி என்னை இன்னொரு நபருக்கு
கைக்காட்டினாள்.
அங்கிருந்த
நபர் விலைச்சீட்டை சுட்டிக்காட்டினார்:
“விலை ரொம்ப
அதிகம் சார்"
"அது
என்ன? என்ன
விலையானாலும் முழு உண்மையை
அடைந்தே தீருவேன்.”
“உங்கள்
பாதுகாப்புதான் விலை சார்"
கனத்த
இதயத்துடன் திரும்பிவிட்டேன்.
எனக்கு கேள்வி
கேட்காத நம்பிகைக்களின்
பாதுகாப்பு அவசியமாக இருக்கிறது.
(இந்திய
சிந்தனைகளில் ஊறிய ஆசிரியரை
சர்ச் அவ்வளவாக நல்லவிதமாக
நடத்தவில்லை என்று கேள்வி.)
No comments:
Post a Comment