ஒரு
மீனவன் இருந்தான்.
திருமணமாகி
பல வருடங்களாக குழந்தை இல்லாமல்
இருந்து ஒரு வழியாக ஆண் குழந்தை
பிறந்தது. சில
வருடங்களுக்குப்பின் அது
நோய்வாய்ப்பட்டது.
எத்தனையோ
செலவழித்தும் பயனில்லாமல்
அது இறந்து போனது. மனைவி
குலுங்கி குலுங்கி அழுதாள்.
மீனவனோ
நிச்சலனமாக இருந்தான்.
மனைவி அவனை
கொஞ்சம் கூட துக்கப்படவில்லையே
என்று கடிந்து கொண்டாள்.
மீனவன்
சொன்னான்: “ நேத்திக்கு
ராத்திரி நான் ஒரு ராஜாவா
இருந்ததாகவும் எட்டு மகன்கள்
இருந்ததாவும் கனவு கண்டேன்.
அப்பறம்
திடீர்ன்னு முழிப்பு வந்துடுத்து.
இப்ப அந்த
எட்டு பேருக்கு வருத்தப்படறதா
இல்லை இந்த குழந்தைக்கு
வருத்தப்படறதான்னு தெரியாம
முழிக்கிறேன்!”
No comments:
Post a Comment