ஒருவன்
கழுகின் முட்டையை கண்டெடுத்தான்.
அதை தன்
கோழியின் முட்டைகளுடன்
வைத்துவிட்டான். கோழி
அடை காத்தது. முட்டைகள்
பொரிந்து குஞ்சுகள் வெளி
வந்தன. கழுகுக்குஞ்சும்
வெளி வந்தது. அதுவும்
கோழிக்குஞ்சுகளைப் போலவே
நடந்து கொண்டது. க்ளக்
க்ளக் என்று சத்தமிட்டது.
நிலத்தை
கிளறி புழு பூச்சிகளை கொத்தி
தின்றது. இறக்கைகளை
அசைத்து சில அடிகள் பறந்தது.
சில
வாரங்கள் சென்றன. ஒரு
நாள் வானத்தில் தங்க நிற
இறகுகளை அசைத்தபடி வெகு
உயரத்தில் மிதந்து கொண்டு
இருந்த கழுகை கண்டது.
“யார் அது?” என்று கேட்டது.
"பறவைகளின்
அரசன்!” என்று
பதில் வந்தது. “அவர்
வானத்தில் வெகு உயரத்தில்
பறந்து அரசாளுவார்.
நாமெல்லாம்
வெறும் கோழிகள்"
"ஓஹோ"
அந்த
கழுகு கோழியாகவே வாழ்ந்து
இறந்தது. ஏனெனில்
அது தான் கோழி என்றே நினைத்தது!
No comments:
Post a Comment