ஒரு
பூகம்பம் உண்டாகிவிடும்;
அதன்பின்
நதி ஏரி குள தண்ணிரெல்லாம்
கெட்டுவிடும்; அதை
குடிக்கும் மக்கள் பைத்தியமாகி
விடுவார்கள் என்று ஒரு கடவுள்
மக்களிடம் சொன்னார்.
யாரும் அதை
பொருட்படுத்தவில்லை.
இறைதூதர்
மட்டும் நம்பினார். ஒரு
மலைக்குகையில் தன் வாழ்நாளுக்கும்
தேவையான நீரை சேமித்தார்.
பூகம்பம்
வந்தது. நீர்நிலைகள்
வற்றி பின் புதிய நீரால்
நிறைந்தன. அந்த
நீரை குடித்து எல்லாரும்
பைத்தியமானார்கள்.
சில
மாதங்கள் கழித்து இறைத்தூதர்
இறங்கி வந்தார். மக்கள்
எல்லோரும் பைத்தியமாக
இருந்தார்கள். இவர்
மட்டும் வித்தியாசமாக இருந்ததால்
இவரை பைத்தியம் என்று கருதி
தாக்கினார்கள்.
மலைக்கு
திரும்பி ஓடி வந்த இறைத்தூதர்
தண்ணீரை சேமித்தோமே என்று
சந்தோஷப்பட்டுக் கொண்டார்.
சில மாதங்கள்
சென்றன. தனிமையை
தாங்க முடியவில்லை.
மீண்டும்
கீழே இறங்கி வந்தார்.
மக்கள் இவர்
வித்தியாசமாக இருக்கிறார்
என்று வெறுத்து ஒதுக்கினார்கள்.
தாள முடியவில்லை.
புதிய தண்ணீரை
குடித்தார். தானும்
பைத்தியமானார். அவர்களுடன்
ஐக்கியமானார்.
உண்மையை
தேடப்போனால் அந்த வழி தனி
வழிதான். தனியாகத்தான்
நடக்க வேண்டும்.
No comments:
Post a Comment