Pages

Monday, May 31, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 59




 

781. ஸத்₁தா₁மாத்₁ராய நமஇருப்பாக இருப்பவர்

782. பு₁ராத₁நாய நமபழமை காலமுதலே இருப்பவர்

783. போ₄க₃யோகி₃நே நமநுகர்வை (ஸத்விஷயத்தில் கட்டுப்படுத்தும்) யோகத்தை அளிப்பவர்

784. யோக₃போ₄கி₃நே நமயோகத்தையே தன் நுகரும் பொருளாக ஆக்கியவர்

785. பு₄வநாத்₁மநே நமஉலகங்களில் உள்ளுறைபவர்

786. வநேச₁ராய நம꞉ (விரும்பத்தக்க ஒரே பொருளாகையால்) வனம் (எனப்படும் ப்ரஹ்மத்தில் ஸஞ்சரிப்பவர்)

787. பூ₄தி₁க்₁ருʼதே₁ நம꞉ (ஸத்கார்யங்களை செய்வதற்கு வேண்டிய) செல்வத்தை உருவாக்குபவர்

788. பூ₄தி₁தா₃ய நம꞉ (அத்தகைய) செல்வத்தை (அத்தகைய காரியங்களுக்காக நமக்கு) தருபவர்

789. பூ₄தா₁ய நமஎங்கும் வ்யாபித்திருப்பவர்

790. பூ₄ரிஶாய நம꞉ (பக்தர்களுக்கு அருள) பலவிடங்களில் உறைபவர்

791. பூ₄த₁பா₄வுகா₁ய நமஇறைவனின் ஸ்ருஷ்டியை ரசிப்பவர்

792. ச₁க்₁ரப்₄ருʼதே₁ நம꞉ (உலகத்திற்கு க்ஷேமம் ஏற்படும் வகையில் காஞ்சீபுரத்தில்) ஶ்ரீசக்ரத்தை ஸ்தாபித்தவர்

793. ச₁க்₁ரராஜார்சா₁ ஸம்ப்₁ரதா₃ய ப்₁ரவர்த₁கா₁ய நம꞉ (அங்கு) ஶ்ரீசக்ர பூஜை அர்ச்சனை சம்பிரதாயத்தை செயல்படுத்தியவர்

794. ச₁க்₁ரிபூ₄ஷண பூ₄தா₁த்₁மநே நமபாம்புகளை அணிகலன்களாக்கிக் கொண்ட (சிவனார்) வடிவினர்

795. ச₁க்₁ரபா₁ணி நிஷேவிதா₁ய நம꞉ (சிவனார் வடிவில்) விஷ்ணுவினால் ஸேவிக்கப்பட்டவர்

796. ச₁க்₁ரவர்தி₁ ஶிரோ பூ₄ஷா ஶேஷாயித₁ நக₂ச்₁ச₂வயே நமசக்ரவர்த்திகளின் தலையணிகளில் அங்கமான நககாந்தியைக் கொண்டவர்

797. சா₁மீக₁ரீ க்₁ருʼதா₁மத்₁ர த₃ரித்₃ர ப்₃ராஹ்மணீ க்₃ருʼஹாய நமஏழை அந்தண பெண்மணியின் வீட்டில் உள்ள (மண்) கலயங்கள் அனைத்தும் தங்கமாக்கியவர்

798. ச₁து₁ரோதா₃ர க₃ம்பீ₄ர வாக்₁ய நிர்ப₄ர வாத₃க்₁ருʼதே₁ நம꞉ (யுக்தியால்) சாதுர்யமிக்கதும் (கருணையால்) பெருந்தன்மை மிக்கதும் (பொருளினால்) கம்பீரம் மிக்கதுமான வாக்யங்களால் வாதம் செய்பவர்

799. ச₁ஞ்ச₁லாய நமபயணித்துக்கொண்டே இருப்பவர்

800. ச₁ந்த்₃ரசூ₁டா₃த்₁மநே நமபிறைசூடி வடிவினர்


Sunday, May 30, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 58




 

761. ஸச்₁சி₁ந்மட₂ஸமாஶ்ரயாய நமஸச்சித் (ஸ்வரூபமே) மடமாகக் கொண்டவர்

762. நப₄ஸ்தீ₁ர்தா₂ய நமஆகாயமே தீர்த்தமாகக் கொண்டவர்

763. நபோ₄த₃ர்ஶிநே நமஆகாயம் (போன்று ஸூக்ஷ்மமாக உள்ள பரம்பொருளைப்) பார்த்தவர்

764. நப₄ஸே நமஆகாயம் (முதலிய சொற்களால் உபநிஷத்துகளில் சொல்லப்பட்ட பரம்பொருளானவர்)

765. சி₁ச்₁ச₂க்₁தி₁சி₁ந்த₁நாய நமசைதன்யம் மற்றும் அதன் ஶக்தி இவற்றை சிந்திப்பவர்

766. ப்₁ரணவ ப்₁ரணயிநே நமப்ரணவத்தில் அமிழ்ந்தவர்

767. நம்ரிணே நம꞉ (தமது குருமார்கள் விஷயத்தில்) வணங்கிய (உடலுறுப்பகளைக்) கொண்டவர்

768. நந்த₃கோ₃ப₁ஜபூ₁ஜகா₁ய நமநந்த கோப குமாரனை பூஜித்தவர்

769. பூ₄ம்நே நம꞉ (தன்னைக் காட்டிலும் பெரியது இல்லாத) பெரும்பொருளானவர்

770. ப்₃ரஹ்மாநந்த₃நாம்நே நமபிரமானந்தம் என்ற பெயர் கொண்ட (ஸ்வரூபத்தினர்)

771. கூ₁ட₁ஸ்தா₂ய நம꞉ (ஸாக்ஷி ஸ்வரூபமாக) மாறாமல் உள்ளுறைபவர்

772. அக்ஷராய நமஅழிவில்லாதவர்

773. இஷ்ட₁தா₃ய நம꞉ (பக்தர்களின்) விருப்பத்தை நிறைவேற்றுபவர்

774. ப₁ராக்₁ப்₁ரத்₁யக₃பி₄ந்நாய நமஉள்ளும் வெளியும் தனித்தனியாக இல்லாதவர்

775. ஸக₁லாத்₁மநே நமஅனைத்திலும் உயிராக உறைபவர்

776. அக₁லாய நமபகுதிகளற்றவர்

777. பு₁ரவே நம꞉ (மாயையால்) பல (வடிவமாகத் தோன்றுபவர்)

778. பு₁ருஷாய நமஶரீரத்தில் வீற்றிருக்கும் (ஆத்ம ஸ்வரூபமானவர்)

779. பு₁ஷ்க₁லாய நமஸம்ருத்தியுடையவர்

780. பூ₁ர்ணாய நமநிறைவானவர்


Saturday, May 29, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 57




 

741. ஶ்ரீக₁ராய நமசெல்வத்தை உண்டு செய்பவர்

742. ஸம்ப்₁ரதா₃ய ப்₄ருʼதே₁ நமசம்பிரதாயங்களை (வகுத்தளித்தமையால்) தாங்கியவர்

743. வித்₃யாபீ₁ட₂ மஹா யோகி₃நே நமவித்யையை (ஶக்தியாகக் கொண்ட) பீடத்தின் மஹா யோகி

744. ப₁ரமாத்₁ம மடா₂ஶ்ரயாய நமபரமாத்மாவையே (பீடத்தின்) மடமாக ஆஶ்ரயித்தவர்

745. த்₁ரிபு₁டீ₁ தீ₁ர்த₂ விஹ்ருʼத₁யே நம꞉ (அறிவு அறிபவன் அறியப்படுவது என்னும்) த்ரிபுடியே (பீடத்தின்) தீர்த்தமாகக் கொண்டு அதில் நீராடியவர்

746. யோக₃ க்ஷேத்₁ரதி₃ வாக₁ராய நமயோகத்தையே (பீடத்தின்) க்ஷேத்ரமாகக் (கொண்டு அதனை ப்ரகாஶிக்க வைக்கும்) ஸூர்யனானவர்

747. ஶ்ரீவித்₃யா ஶக்₁தி₁ ஜப₁நாய நமஶ்ரீவித்யையை (பீடத்தின்) ஶக்தியாகக் (கொண்டு) ஜபத்தினால் (உபாஸித்தவர்)

748. மந்த்₁ரிணே நமமந்த்ரங்களின் (இருப்பிடமானவர்)

749. ஸந்தோ₁ஷநைக₃மிநே நம꞉ (தன்னில்) சந்தோஷித்து இருப்பதையே ஸம்ப்ரதாயமாகக் கொண்டவர்

750. ப₁ரஹம்ʼஸப₁ரிவ்ராஜே நமபரமஹம்ஸ (நிலையையே ஈஶ்வர ஸ்வரூபமாகக் கொண்ட அத்தகைய நான்காம் நிலையிலுள்ள) ஸந்ந்யாஸி

751. ஶ்ரீ ஸித்₃தா₄க்₂ய ப்₃ரஹ்மச₁ர்ய ப்₄ருʼதே₁ நமபொலிவுடன் தன்னில் நிலைபெற்ற ப்ரஹ்மசர்யத்தைக் கொண்டவர்

752. மாத்₁ருʼகை₁க₁ மஹாவாக்₁யாய நம꞉ (ஐம்பது) மாத்ருகா வர்ணங்களையும் ஒரே மஹாவாக்ய வடிவில் (பார்ப்பவர்)

753. க்ஷேத்₁ரஜ்ஞாய நமஉடலைப் பார்க்கும் ஸாக்ஷி சைதந்ய வடிவமான (ஆம்னாய பீடாதிபதியானவர்)

754. அக்ஷரத₁ப₁ராய நம꞉ (உலகில்) அழியாதவை (என்று ப்ரஸித்தமானவற்றைக்) காட்டிலும் பெரியவர்

755. நிஷ்க₁லாம்நாய நிரதா₁ய நம꞉ (எட்டாவது) நிஷ்கல ஆம்னாயத்தில் நிலைபெற்றவர்

756. ஶாந்தி₁தா₃ந்தி₁யுதா₁ய நமசாந்தமும் பொறுமையும் உடையவர்

757. சி₁த்₁யை நமசைதன்யத்தையே (சக்தியாகக் கொண்டவர்)

758. ஆநந்த₃பீ₁ட₂ ஸம்ʼவிஷ்டா₁ய நமஆனந்த பீடத்தில் உறைந்தவர்

759. ஸ்வாநுபூ₄தி₁ப₁தா₃ஶ்ரயாய நமசுய அனுபவமே க்ஷேத்ரமாகக் கொண்டவர்

760. ஶ்ரத்₃தா₄ மைத்₁ர்யாதி₃ நிர்ஜ்ஞேயாய நம꞉ (ஶாஸ்த்ரத்தில்) நம்பிக்கையாலும் (மற்றவர்களிடத்தில்) நட்பாலும் அறியத்தக்க (சொரூபத்தினர்)


Friday, May 28, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 56




 

721. தா₁ப₁த்₁ரயவிநிர்முக்₁தா₁ய நம꞉ (உடல், இயற்கை, பிராணிகள் ஆகிய) மூன்றாலும் ஏற்படும் இன்னல்கள் அற்றவர்

722. நலிநோக்₁தி₁நிராஸக்₁ருʼதே₁ நமமிருதுவான சொற்களால் (மாற்றுக்கருத்துகளை) நிராகரித்தவர்

723. அலங்க்₁ருʼதி₁நே நம꞉ (மனவடக்கம் மற்றும் புலனடக்கம் ஆகிய) அலங்காரங்களைக் கொண்டவர்

724. அதி₁மாந்யஶ்ரியை நம꞉ (உலக ரீதியில்) மிகவும் மதிக்கத்தக்கவர்களால் நாடப்பட்டவர்

725. ஆத்₁மவிதே₃ நம꞉ (தன் சொரூபமாகிய) ஆத்மாவை (உலகின் காரணமான ப்ரஹ்மமாக) அறிந்தவர்

726. ப்₃ரஹ்மவித்₁த₁மாய நமப்ரஹ்மமாகிய (உலகின் காரணத்தை தன் சொரூபமான ஆத்மாவாக) உணர்ந்தவர்களுள் சிறந்தவர்

727. ப்₃ரஹ்மண்யாய நமவேதத்திற்கு ஹிதமானவர்

728. ப்₃ரஹ்மபூ₄தா₁ய நமதாமே ப்ரஹ்மமாக ஆனவர்

729. ஸ்வாதி₄ஷ்டா₂நாஞ்சி₁த₁கா₁ஞ்சி₁கா₃ய நமதனது இருப்பிடமாக விரும்பிய (மதிக்கத்தக்க) காஞ்சியிலேயே நிலைத்தவர்

730. க்₁ருʼத₁பு₁ண்யஸ்த₂லீயாத்₁ராய நமபுண்ணிய தலங்களுக்கு யாத்திரை செய்தவர்

731. ஊர்த்₄வாம்நாயார்த₂த₁த்₁த்₁வவிதே₃ நம꞉ (ஆறாவது) ஊர்த்வ (மேலான) ஆம்னாயத்தின் தத்துவப் பொருளை உணர்ந்தவர்

732. கை₁வல்ய க்ஷேத்₁ர விஜயிநே நம꞉ (தானொன்றே இருப்பதாகிய) கைவல்யமெனும் க்ஷேத்ரத்திற்கு விஜயம் செய்தவர்

733. ஶுத்₃த₄மாநஸதீ₁ர்த₂கா₁ய நமசுத்தமான மனதையே தீர்த்தமாகக் கொண்டவர்

734. ஸுமேருமூலஸஞ்சா₁ரிணே நம꞉ (உலகிற்கு உச்சியான) மேருவின் அடியை (மடமாகக் கொண்டு) ஸஞ்சரித்தவர்

735. மாயாஶக்₁தி₁ விபா₄வநாய நமமாயையை (பீடத்தின்) ஶக்தியாக பூஜித்தவர்

736. ஸத்₁யஜ்ஞாநாபி₄தா₄ஹ்வாநிநே நம꞉ (இந்த்ர ஸரஸ்வதி முதலிய பட்டங்களுக்கு பதில்) ஸத்யம் ஞானம் என்ற பெயர்களாலேயே அழைக்கத்தக்கவர்

737. அக₂ண்டா₃நந்த₃மூர்தி₁மதே₁ நமஇடையறாத ஆனந்த மூர்த்தியானவர்

738. ஸோஹம்ʼஶிவோஹம்ʼவாக்₁ய ஶ்ரியை நமஸோஹம் (அதாவது) சிவனே நான் என்பதை (மஹா)வாக்யமான செல்வமாகக் கொண்டவர்

739. ப்₁ரத்₁யகா₃ம்நாய வேத₃நாய நம꞉ (ஏழாவது) உள்ளிருக்கும் ஆம்னாயத்தை அறிந்தவர்

740. நிரஞ்ஜநேஶ்வரா ஸேவிநே நம꞉ (ஸம்ஸார) தோஷங்களற்ற ஈஶ்வரனை வழிபடுபவர்


Thursday, May 27, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 55





701. ஸ்தி₂தி₁ ஸீமா விபா₄க₃ஜ்ஞாய நம꞉    இருப்பின் எல்லைகளை பாகுபடுத்த தெரிந்தவர்
702.
ப்₁ரலயார்த₂ ப்₁ரகா₁ஶகா₁ய நம꞉    பிரளயத்தின் பொருளை தெளிவாக்கியவர்
703.
ஸம்ʼஸார த₁த்₁த்₁வ ஸங்க்₂யாவதே₁ நம꞉    சம்சாரத்தின் தத்துவத்தை அலசியவர்
704.
மாயாத₁த்₁த்₁வநிரூப₁ணாய நம꞉    மாயா தத்துவத்தை நிரூபணம் செய்தவர்
705.
ஸமூலா வித்₃ய கா₁த்₄யாரோபோ₁ந் மூலந விச₁க்ஷணாய நம꞉    அவித்யையால் ஏற்பட்ட பிரமையை அதன் காரணத்துடன் வேரறுப்பதில் வல்லுநர்
706.
ஸம்ʼஸாரதா₁ரணோபா₁ய ஸந்த₃ர்ஶந ப₁டி₁ஷ்ட₂ வாசே₁ நம꞉    ஸம்ஸாரத்தைத் தாண்டும் வழியைக் காட்டுவதில் மிகவும் திறமுள்ள வாக்கினர்
707.
ரஸிகா₁ஹ்லாத₃ ஜநக₁ மஹாவாக்₁ய ச₁மத்₁க்₁ருʼத₁யே நம꞉    (அத்வைத) ரஸிகர்களுக்கு உவகையளிக்கும்படி மஹாவாக்யங்களை செம்மையுற விளக்கியவர்
708.
த்₄வநி ப்₁ரதா₄நாமருக₁ ஶத₁ஶ்லோகீ₁ மஹாக₁வயே நம꞉    உள்ளர்த்தத்தை முக்கியமாகக் கொண்ட அமருக ஶத ஶ்லோகி என்ற நூலை இயற்றியவர்
709.
ப்₃ரஹ்மஸூத்₁ர ப்₃ரஹ்ம ஶிகா₂ கீ₃தா₁ ப்₁ரஸ்தா₂ந பா₄ஷ்யக்₁ருʼதே₁ நம꞉    ப்ரஹ்ம ஸூத்ரம், உபநிஷதம், கீதை ஆகிய ப்ரஸ்தானங்களுக்கு விரிவுரை எழுதியவர்
710.
ப்₁ரத்₁யக்₃ ப்₃ரஹ்மைக்₁ய போ₃தா₄த்₄வ த₃ர்ஶிநே நம꞉    உள்ளிருக்கும் பிரமத்துடன் ஐக்கியம் பெறும் வழியைக் காட்டியவர்
711.
மோக்ஷாத்₄வ த₃ர்ஶகா₁ய நம꞉    மோக்ஷத்தின் பாதையைக் காட்டியவர்
712.
நிரந்த₁ர க்₁ருʼதா₁ம்நாய ஶிரோ நிக₃த₃ ஶீலநாய நம꞉    எப்போதும் உபநிஷதங்களின் சொற்றொடர்களையே சிந்தித்து வந்தவர்
713.
வேதா₃ந்த₁ வநஹர்யக்ஷாய நம꞉    வேதாந்தமெனும் அரண்யத்தில் ஸிம்ஹம் போன்றவர்
714.
த₁த்₁த்₁வஜ்ஞாந மஹோத₃த₄யே நம꞉    தத்துவ ஞானத்தில் பரந்த சமுத்திரமனையவர்
715.
த₁ருணாய நம꞉    இளைஞர்
716.
த₁ருணீதூ₃ராய நம꞉    (ஆனால்) இளம் பெண்களிடம் ஈடுபாடில்லாதவர்
717.
தா₁ராப₁தி₁ஸமச்₁ச₂வயே நம꞉    சந்த்ரனைப் போன்ற பொலிவுடையவர்
718.
தா₁ரக₁ ப்₃ரஹ்ம த₁த்₁த்₁வஜ்ஞாய நம꞉    கடை தேற்றும் பிரம்ம தத்துவத்தை அறிந்தவர்
719.
த₁ப₁ஸ்விநே நம꞉    தவமியற்றியவர்
720.
தா₁ப₁ஸாநுகா₃ய நம꞉    தவசிகளைப் பின்பற்றுபவர் (அல்லது) தவசிகளான சீடர்களை உடையவர்



Wednesday, May 26, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 54





681. ஜக₃த்₃கு₃ரவே நம꞉    உலகிற்கே குரு
682. ஜக₃த்₃யோநயே நம꞉    (ஈசனார் வடிவில்) உலகின் பிறப்பு (இருப்பு மறைவுகளுக்கு) இடமானவர்
683. ஶாஸ்த்₁ரயோநயே நம꞉    (ஈசனார் வடிவில்) ஶாஸ்த்ரங்களின் பிறப்பிடம்
684. ஸமந்வயிநே நம꞉    (முரணாகத் தோன்றும் வேதாந்த வாக்யங்களை) ஒருங்கிணைத்தவர்
685. ஸ்ப₁ஷ்டா₁ஸ்ப₁ஷ்ட₁ ப்₃ரஹ்ம லிங்கி₃நே நம꞉    தெளிவாகவும் தெளிவின்றியும் பரம்பொருளைக் குறிப்பவற்றை (அறிந்தவர்)
686. ஸாங்க்₂ய யோக₃ விமர்ஶ க்₁ருʼதே₁ நம꞉    ஸாங்க்ய யோக (ஶாஸ்த்ரங்களை) பரிசீலித்தவர்
687. வையாக₁ரணதீ₄ஶோதி₄நே நம꞉    இலக்கணம் கூறுபவர்களின் கருத்தை பரிசோதித்தவர்
688. வஸிஷ்டா₂ய நம꞉    வசிஷ்டர் (போல் பிறரின் தாக்குதலை எளிதில் சமாளித்தவர்)
689. க₁கு₁ப₃ம்ப₃ராய நம꞉    (பரம்பொருள் வடிவில்) விண்ணை ஆடையாக கொண்டவர்
690. கௌ₃த₁மீய வசோ₁ முத்₃ரிணே நம꞉    ந்யாய ஶாஸ்த்ரத்தின் (குறைகொண்ட) வாதங்களை முடக்கியவர்
691. வைஶேஷிக₁மதா₃ப₁ஹாய நம꞉    வைசேஷிகர்களின் கருவத்தை அடக்கியவர்
692. ஶௌத்₃தோ₄த₃நிமதோ₃த்₁ஸாதி₃நே நம꞉    புத்த மதத்தினரின் செருக்கை சீர்குலைத்தவர்
693. ஜைமிநீய கு₁த்₃ருʼஷ்டி₁ ஹருʼதே₁ நம꞉    ஜைமினீயத்தின் குறுகிய பார்வையை முறியடித்தவர்
694. தி₃க₃ம்ப₃ர நயாந்த₁ க்₄நாய நம꞉    திகம்பரர்கள் கொண்டு வந்த கடைசி வாதங்களையும் அழித்தவர்
695. த்₄வஸ்த₁பா₁ஶு ப₁த₁ க்₁ரியாய நம꞉    பாசுபதர்களின் செயல்பாடுகளை சிதறடித்தவர்
696. ஶூந்யாத்₁ம வாத₃ நிர்ஹர்த்₁ரே நம꞉    ஆத்மா (இல்லை, அனைத்தும்) சூன்யமே என்னும் வாதத்தை வீழ்த்தியவர்
697. பி₄ந்ந பா₄க₃வதா₁ க₃மாய நம꞉    (ஸங்கர்ஷணன் முதலிய நான்கு வடிவங்களே இறைவனின் உண்மை வடிவம் என்ற) பாகவத மதத்தை வென்றவர்
698. விநோத₃ நிர்மித₁ ப்₁ரௌட₄ ந்யாய க₃ம்பீ₄ர பா₄ஷ்ய க்₁ருʼதே₁ நம꞉    வலுத்த ந்யாயங்களால் கம்பீரமாகவுள்ள பாஷ்யத்தை விளையாட்டாக இயற்றியவர்
699. வ்யாக்₂யாத₁ ஜீவ ச₁ரிதா₁ய நம꞉    ஜீவனின் சரிதத்தை விளக்கியவர்
700. விஶ்வ ஸ்ருʼஷ்டி₁ விஶாரதா₃ய நம꞉    பிரபஞ்சத்தின் தோற்றத்தை கற்றுணர்ந்தவர்

Tuesday, May 25, 2021

பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

பல நாட்களாக எழுத நினைத்தது இப்பொழுது எழுத வாய்த்து இருக்கிறது.

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இது எந்த குறிப்பிட்ட நபரைப்பற்றியும் இல்லை. நாட்டு நடப்பை சொல்கிறேன். அப்படி இல்லை என்றால் ரொம்ப சந்தோஷம்!

பல வருஷங்கள் முன்னே கடலூரில் ஒரு பலத்த புயல் வீசி எறிந்து சேதங்களிலிருந்து நீண்டு கொண்டிருந்த சமயம், சென்னையிலிருந்து குடும்பத்துடன் ஒரு நபர் வந்திருந்தார். புயல் நிவாஅணத்துக்கு உதவ வேண்டும் என்று சொன்னார். அவரை முன்னேயே பார்த்திருக்கிறேன். ஆசார வேஷத்துடன் இருந்த என்னை அவரும் பார்த்திருக்கிறார். அவர் ஒரு குரு பீடத்தின் சிஷ்யர் என்று பெயர் பெற்றிருந்தார். மனைவி ஒரு புரோபஷனல். மகள் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பதாக சொன்னார்.

இங்கே விஷயம் அவர் வந்த நோக்கத்தை நோக்கத்தைப் பற்றி இல்லை அது ஒருவாறு நடந்தேறி விட்டது. விஷயம் அந்த காலேஜ் பெண்ணைப்பற்றி. அவர் ஆசார குடும்பத்தில் பிறந்ததாக பெயர் பெற்று இருந்தாலும் மிகவும் டைட்டான ஜீன்ஸ் ஒன்றையும் மிக மிக இறுக்கமான பனியன் பாணி டி-ஷர்ட்டும் அணிந்து இருந்தார். மிகவே கண்ணை உறுத்தியது. சங்கடப்படுத்தியது. போகட்டும்.

சில வருடங்கள் கழித்து என்னுடைய சம்பந்தியின் 60 ஆண்டு பூர்த்தி விழா வுக்கு சென்றிருந்தேன். அங்கே சில பேர் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான் முழுக்க முழுக்க ஆச்சார வேஷத்திற்கு மாதிரி இருந்தேன் என்பதால் அதைப்பற்றி எல்லாம் பேச்சு வந்தது. ஒரு பெண்மணி - வேண்டுமென்று பேசினாரோ இல்லை என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசினாரோ, அறியேன் - அவர் "உங்களை மாதிரி ஒரு பெரியவர் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையை என்ன செய்தார் என்று தெரியுமா?” என்று ஆரம்பித்தார். மேலே பேச யோசித்துக்கொண்டு இருந்தார். பக்கத்தில் இருந்தவர் "அதற்கு காரணம் இருக்கிறது. இந்த காலத்து குழந்தைகளுக்கு பெரியவர்களிடம் எப்படி பேச வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. அதை நாம் கற்றுக் கொடுக்கவில்லை" என்று சொன்னார். இந்த விஷயம் உடனே மனதில் தைத்தது. உண்மைதானே! கொஞ்சம் பின்நோக்கி பார்த்து இங்கே முன் சொன்ன நிகழ்வு போல பல விஷயங்கள் பல சந்தர்ப்பங்களில் இந்த மாதிரி நடப்பதை நினைவுக்கு கொண்டுவர முடிந்தது. இவர் சொல்வதில் பெரிய உண்மை இருக்கிறது என்று தோன்றியது. ஒருகாலத்தில் மடத்துப் பெரியவர்களை எல்லாம் பார்க்கப் போனோம் என்றால் அன்றைக்காவது பஞ்சகச்சம் மடிசார் என்று உடை உடைத்துக் கொண்டு போவோம். மகா பெரியவர் நல்லா ஆசாரத்துடன் இல்லை என்றால் தரிசனம் கொடுக்க மாட்டார் என்று என்று கூட சொல்வார்கள். ஆனால் காலப்போக்கில் எப்படி வேண்டுமானாலும் உடை உடுத்துக் கொண்டு போகலாம் என்று ஆகிவிட்டது. இதில் வந்து இந்த ஜாதி அந்த ஜாதி என்றெல்லாம் விஷயமே இப்போதெல்லாம் காணோம். ஆச்சாரமான வைதீக குடும்பத்தின் திருமணத்தில் குழந்தைகள் இதுபோல் உடை உடுத்திக்கொண்டு திரிவதை பார்த்திருக்கிறேன். அதேபோல் கோவில் எதிரில் சிறுகதைகள் போட்டிருக்கும் குருக்கள் வீட்டு குழந்தைகளும் இதை போல திரிவதை பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி குழந்தைகளைப் பொறுத்தவரை நாம் 'குழந்தைகள்தானே! விருப்பப்படி உடுத்துக் கொள்ளட்டுமே!’ என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். அதேசமயம் சில பெண்களுக்கு - அம்மாக்களுக்கு - நாம் இப்படியெல்லாம் உடுத்திக் கொள்ள முடியாமல் சமூக உணர்வு தடுக்கிறதே என்று மனதிற்குள் ஒரு ஆதங்கம் இருக்கு இருக்கிறதோ என்னவோ! மொத்தத்தில் குழந்தைகளின் உடை விஷயத்தில் நாம் கவனம் செலுத்துவது இல்லை. நான் பாரம்பரிய உடையை ஆதரித்தாலும் நவீனகால உடைக்கு எதிரானவன் இல்லை. விஷயமே அதை எப்படி உடுத்துகிறார்கள். மொத்தத்தில் எந்த மாதிரி மற்றவர்கள் உணர்வை தூண்டுவதாக அமைகிறது என்பதே இங்கே விஷயம். சிலரைப் பார்த்தாலே லட்சுமிகரமாக இருக்கிறது என்று தோன்றி கையெடுத்து கும்பிடக் கூட தோன்றும். அதுவே சில பேரை....

காஞ்சி மகா பெரியவர் இந்த விஷயத்தில் மகா ஜாக்கிரதையாக இருந்திருக்கிறார் என்ற கேள்வி. அவருடைய இளம் வயதில் ஒரு பெண்மணி தனியாக பெரியவர்களுடன் பேசவேண்டும் என்று கேட்டதற்கு அனுமதித்த அவருடைய கிங்கரர்களை கடிந்து கொண்டிருந்திருக்கிறார். பின்னால் தவிர்க்க முடியாமல் ஒரு பெண்மணி அவசியம் தனியாகத்தான் பேசவேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டதன் பேரில் சுத்தமாக காது கேட்காத ஒரு நபரை அருகில் வைத்துக்கொண்டு அந்தப் பெண்மணியுடன் நிறைய பேசி இருக்கிறார். இந்த மாதிரி எச்சரிக்கையுடன் எல்லோரும் இருக்கிறார்களா என்றால் கிடையாது. இதுவேதான் பிரச்சினையாக அவர்களுக்கு சில சமயம் அமைந்துவிடுகிறது. தனியாக பேசிவிட்டு வந்தார்கள் என்ன நடந்ததோ யாருக்கு தெரியும் என்று வெளியே யாரும் புரளி கிளப்பி விட்டால் - அதற்குத் தான் நிறைய நபர்கள் இருக்கிறார்களே- சிலருக்கு சந்தேகம் எழத்தான் செய்யும். இந்த மாதிரி விஷயங்களில் ஆன்மீக முன்னேற்றத்தில் கவனம் கொண்டவர்கள் மகா ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

ஆன்மீகப் பெரியவர்கள் ஆக நானறிந்த குறைந்தபட்சம் இரண்டு பேர் இந்த ஜாக்கிரதை சமாசாரத்தை விட்டு விட்டு தம் வாழ்வை தொலத்து குப்புற விழுந்து தலைமறைவாகவோ சிறைச்சாலையிலோ இருக்கிறார்கள். இந்த அவல நிலை யாருக்கும் ஏற்படுவது அனாவசியம். ஆகவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நொச்சூரார் சொல்லுவார் "சன்னியாசி காவி உடை அணிவதுடைய விஷயமே அவன் மற்றவர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கைதான். நான் வேறு வழியில் இருக்கிறேன்; தயவு செய்து என்னை என் போக்கில் விட்டு விடுங்கள் என்பது!" இதை நினைவில் கொள்ள வேண்டும்.


இந்த விஷயத்தில் நாம் கவனம் செலுத்தாததன் பலன் என்ன ஆகிறது? பெரியவர்கள் என்றால் அவர்கள் அனைவரும் ஞானியர் இல்லை. ஞானி இந்த லோகத்திலேயே இருப்பதில்லை. அவன் ஏதோ ஒரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான் .எதிரே யாரோ வருகிறார்கள் பேசுகிறார்கள் போகிறார்கள் ... அதெல்லாம் அவனுக்கு பொருட்டே கிடையாது. அந்தந்த நேரத்துக்கு அவசியமான பேச்சு செய்கையுடன் முடித்துவிடுகிறான். அந்த நிலையை அடைந்துவிட்டவர்களுக்கு இதெல்லாம் விஷயமே இல்லை. ஆனால் பெரும்பாலான பெரியவர்கள் என்று போற்றப்படும் மனிதர்களின் விஷயம் என்ன? அவர்கள் ஞானத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கலாம். அதை அடைந்து விடவில்லை. ஞான நாட்டம் உள்ளவர்கள். அவ்வளவுதான். ஆகவே இந்த உலகத்தில் ஆசாபாசங்களுக்கு அவர்களும் பாதிக்கப்படக்கூடியவர்களே! இந்த விஷயத்தில்தான் நம் ஜாக்கிரதை அஜாக்கிரதை சிலசமயம் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. ஒரு ஆன்மிகப் பெரியவர் மீது இருக்கும் மரியாதை ஒரு அன்பு ஒரு காதலாக கூட மாறிவிடுகிறது. அந்த சமயத்தில் இந்த நபருடைய இந்த காதல் அவரை எப்படி பாதிக்கும் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. ஞான வழியில் இறங்கிவிட்டார்கள் என்றால் அம்பாள் ஏதோ ஒரு தருணத்தில் பரிட்சை வைப்பாள் என்று சொல்வார்கள். அந்தப் பரீட்சையில் பாஸ் பண்ணி விட்டாள் ஞான மார்க்கத்தில் மேலே போகலாம் .இதில்லாமல் இந்த பரிட்சையில் தோல்வியடைந்து அதலபாதாளத்தில் விழுபவர்கள் உண்டு. இதற்கெல்லாம் உதாரணம் சொல்ல வேண்டியதில்லை உங்களுக்கே தெரிந்து இருக்கும். 'அட இப்படிப்பட்டவரா! இந்த மாதிரி செய்தி வருகிறது இவரைப்பற்றி!’ என்றெல்லாம் நாம் நினைத்தது இல்லையா என்ன?

உன் பார்வையில்தான் தப்பு இருக்கிறது என்று குற்றம்சாட்டி பலன் இல்லை. தப்பு சரி எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். முக்கால்வாசி சாதாரண மனிதர்கள்தான். அவர்கள் இப்படி இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதில் அர்த்தம் இல்லை. அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று நாம்தான் யோசித்து உசிதம் போல நடந்து கொள்ள வேன்டும்.

ஆகவே நான் வேண்டிக் கொள்வது நம் வீட்டில் எப்படி இருக்கிறோமோ இல்லையோ அது அவரவர் இஷ்டம். பொதுவில் என்று வந்து விட்டாலே நாம் இந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டி இருக்கிறது. அது பள்ளிக்கூடம். காலேஜ், மடம் பஜனைக் கூடம் இன்ன பிற பல பொதுமக்கள் கூடும் இடங்கள் ... இங்கே எல்லாம் நாம் எங்கே செல்கிறோம், எதற்காக செல்கிறோம், யார் யார் எங்கே இருப்பார்கள், யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை பற்றியெல்லாம் நாமும் யோசித்து அதற்கு தக்க நடந்து கொள்ள நமது குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

ரைட்! அவ்ளோதான். உங்கள் பூச்செண்டு செங்கல் எல்லாவற்றையும் எறியலாம். பதில் சொல்லுவேன் என்ற எதிர்பார்ப்பு வேண்டாம். அதுவே நல்லது.

வந்தனம்.



ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 53




 

659. விப₄ண்ட₃கா₁தி₄ஷ்டா₂நஸ்த₂மலஹாநிக₁ரே ஶத்₃ருʼஶே நம꞉            விபண்டக முனிவரின் இருப்பிடத்தில் உள்ள மலஹானிகரேஶரை தரிசித்தவர்

660. விரூபா₁க்ஷ மஹாதே₃வ மஹநீய ப₁தா₃ஶ்ரயாய நம꞉            (அதே கர்ணாடகத்தில் ஹம்பியில்) விரூபாக்ஷ (க்ஷேத்ரத்தில் உள்ள) மஹாதேவரின் உயர்ந்த கோவிலை ஆஶ்ரயித்தவர்

661. மநீஷி மண்ட₃லீ மாந்யமௌலாம்நாய மஹாகு₃ரவே நம꞉            பண்டிதருலகு மதிக்கத்தக்க (ஐந்தாவது) மூல ஆம்னாயத்தின் (ஸ்தாபகரான) மஹாகுருவானவர்

662. ப்₁ராச்₁ய ப்₁ரதீ₁ச்₁யாவாச்₁யோதீ₃ச்₁யாம்நாயாதி₃ம தே₃ஶிகா₁ய நம꞉            கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு (ஆகிய மற்ற) ஆம்னாயங்களுக்கு முதல் ஆசானாகக் கருதப்படுபவர்

663. ப்₁ராச்₁யாம்நாய ஸுவிந்யஸ்த₁ ஹஸ்தா₁மலக₁ஸ ம்ʼஸ்து₁தா₁ய நம꞉            கிழக்கு ஆம்னாயத்தில் வைக்கப்பட்ட ஹஸ்தாமலகரால் நன்கு வணங்கப்பட்டவர்

664. ப்₁ரதீ₁ச்₁யாம்நாய ஸந்தே₃ஶநாநந்தி₃த₁ ஸநந்த₃நாய நம꞉            மேற்கு ஆம்னாயத்திற்கு உத்தரவிடப்பட்டதால் (பத்மபாதர் எனும்) சனந்தனரை சந்தோஷித்தவர்

665. அவாச்₁யாம்நாய நிக்ஷிப்₁த₁ ப்₁ருʼத்₂வீ த₄ரநதா₁ங்க்₄ரிகா₁ய நம꞉            தெற்கு ஆம்னாயத்தில் வைக்கப்பட்ட ப்ருத்வீதவரால் வணங்கப்பட்ட திருவடியினர்

666. உதீ₃ச்₁யாம்நாய ஜாநந்தா₃நந்த₃கி₃ர்யபி₄வ ந்தி₃தா₁ய நம꞉            வடக்கு ஆம்னாயத்தில் ஏற்படும் ஆனந்தத்துடன் ஆனந்தகிரியால் வணங்கப்பட்டவர்

667. கா₁மகோ₁டீ₁ பீ₁ட₂ப₁த₁யே நம꞉            காமகோடி பீடத்தின் அதிபதி

668. க₁ம்பா₁வேக₃வதீ₁ ச₁ராய நம꞉            கம்பா வேகவதீ நதிகளுக்கு இடையில் சஞ்சரித்தவர்
 
669. ஏகா₁ம்ரநாத₂ ச₁ரண ஸரோஜாத₁ மது₄வ்ரதா₁ய நம꞉"            ஏகாம்ரநாதரின் திருவடித்தாமரைகளை (மொய்க்கும்) தேனீ போன்றவர்

"670. கா₁மாக்ஷீ ச₁ரண த்₃வந்த்₃வ பா₁து₃கா₁ர்ச₁ந த₁த்₁ப₁ராய நம꞉"            காமாக்ஷியின் இரு திருவடி பாதுகைகளையும் அர்ச்சிப்பதில் ஈடுபாடுடையவர்

671. ருʼக்₃வேதா₃த்₁மநே நம꞉            ருக் வேத சொரூபமானவர்

672. ப₁ரப்₃ரஹ்ம வ்யவஸ்தா₂ப₁ந தீ₄ரதி₄யே நம꞉            பர ப்ரம்ஹத்தை (ஶாஸ்த்ரப்படி) நிறுவுவதில் பராக்ரமம் காட்டிய புத்தியுடையவர்

673. ஸத்₁யவ்ரத₁ ஸமாக்₂யாத₁ கா₁ஞ்ச்₁யந்த₁ரித₁ விக்₃ரஹாய நம꞉            ஸத்யவ்ரதம் எனப்படும் காஞ்சியில் (இறுதியில்) தன் உடலை மறைத்தவர்

674. ஸர்வஜ்ஞ பீ₁டா₂த்₄யாரோஹ லுப்₁த₁ ஸார்வஜ்ஞ்ய ஸம்ʼஶயாய நம꞉            ஸர்வஜ்ஞ பீடம் ஏறியதால் “இவர் அனைத்தையும் அறிந்தவரா?” என்ற ஐயத்தைத் தொலைத்தவர்

675. ஸுரேஶ்வராதி₃ ஸச்₁சா₂த்₁ர ஸமாராதி₄த₁ பா₁து₃கா₁ய நம꞉            ஸுரேஶ்வரர் முதலிய நல்மாணாக்கர்கள் வணங்கிய பாதுகையை உடையவர்

676. மீமாம்ʼஸாத்₃வயபா₁ரீணாய நம꞉            (பூர்வம் உத்தரம் ஆகிய) இரு மீமாம்ஸைகளில் கரைகண்டவர்

677. கா₁ணாதா₃க்ஷ ப₁தா₃த்₄வ விதே₃ நம꞉            வைஶேஷிகம் ந்யாயம் இரண்டின் பாதையையும் அறிந்தவர்

678. த்₃வாத்₁ரிம்ʼஶதா₃யு꞉ க₁லித₁ த்₁ரி꞉ப்₁ர த₃க்ஷிண பூ₄ த₁லாய நம꞉            முப்பத்திரண்டு வயதிற்குள் மும்முறை பூமியை (பாரதத்தை) ப்ரதக்ஷிணம் செய்தவர்

679. ஆஸேது₁ ஹிம ஶைலாந்த₁ த₄ர்ம ஸ்தா₂ப₁ந தே₃ஶிகா₁ய நம꞉            சேது முதல் இமாலயம் வரை தர்மத்தை நிலைநிறுத்திய ஆசிரியர்

680. வித்₃யாவஶீக்₁ருʼதா₁ஶேஷ தே₃ஶ வித்₃வஜ்ஜநார்சி₁தா₁ய நம꞉            தம் வித்யையால் பரவசமான அனைத்து தேசத்து அறிஞர்களாலும் பூஜிக்கப்பட்டவர்

Monday, May 24, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 52


 

 
638. ஜ்யோதி₁ர்மட₂க₁ராய நம꞉    (இரண்டாம் ஆம்னாயத்திற்கு) ஜ்யோதிர் மடத்தை நிறுவியவர்
639. ஜ்யோதி₁ஷ்மதீ₁ பீ₁ட₂ நிதே₃ஶக்₁ருʼதே₁ நம꞉    ஜ்யோதிஷ்மதீ பீடத்துக்கு வழிகாட்டியவர்
640. ப₃த₃ர்யாஶ்ரமஸம்ʼஸ்தா₂நாய நம꞉    பதரிகாஶ்ரமத்தை இருப்பிடமாகக் கொண்டவர்
641. அலக₁நந்தா₃வகா₃ஹநாய நம꞉    அலகாநந்தாவில் நீராடியவர்
642. ஆத₂ர்வணாங்கி₃ரோவேதி₃நே நம꞉    அதர்வாங்கிரஸ வேதத்தை அறிந்தவர்
643. ஶ்ரீபூ₁ர்ணாகி₃ரிஸேவகா₁ய நம꞉    ஶ்ரீ பூர்ணாகிரி (எனும் தேவியை) சேவித்தவர்
644. கோ₃வர்த₄ந மடீ₂நாதா₂ய நம꞉    (மூன்றாவது ஆம்னாயத்திற்கான) கோவர்த்தன மடத்தின் தலைவர்
645. கி₃ரியோக₃ப₁டா₁ஶ்ரயாய நம꞉    (தஶநாமிகளுள்) கிரி என்ற யோகபட்டத்தை (சில ஶிஷ்யர்களுக்கு) ஆஶ்ரயித்தவர்
646. பு₁ருஷோத்₁த₁ம ஸத்₁க்ஷேத்₁ரிணே நம꞉    புருஷோத்தமரின் நல்ல க்ஷேத்ரத்தில் இருந்தவர்
647. விமலாபீ₁ட₂க₁ல்ப₁கா₁ய நம꞉    விமலா பீடத்தை முறைப்படுத்தியவர்
648. ஶதா₁நந்தா₃ய நம꞉    (உலகாயத ஆனந்தத்தை விட) நூறு நூறு மடங்கு ஆனந்தம் கொண்டதாக (உபநிஷத்தில் வர்ணிக்கப்பட்டவர்)
649. ஶதௌ₁ஜஸே நம꞉    (அவ்வாறே) நூறு நூறு மடங்கு ஶக்திகளையும் கொண்டவர்
650. த₃ஶேந்த்₃ரிய விநிக்₃ரஹாய நம꞉    பத்து இந்திரியங்களையும் அடக்கியவர்
"651. ஶ்ரீ து₁ந்தி₃லித₁ தே₃ஶ ஶ்ரீ ருʼஶ்யஶ்ருʼங்க₃கி₃ரி ஶ்ரயிணே நம꞉"    (நான்காவது ஆம்னாயத்திற்கு) அழகு கொழிக்கும் தேஶமாகிய ருஶ்யஶ்ருங்க கிரியில் தங்கியவர்
"652. ஶாரதா₃ வச₁நக்₂யாத₁ வ்யாக்₂யா
பீ₁டா₂தி₄ரோஹணாய நம꞉"    வ்யாக்யான பீடத்தில் அமரும்படி ஶாரதையின் வாக்கினால் அருளப்பட்டவர்
653. ராமச₁ந்த்₃ரபு₁ரக்ஷேத்₁ரிணே நம꞉    ராமசந்த்ரபுரம் என்ற க்ஷேத்ரத்தில் வசித்தவர்
654. து₁ங்க₃ப₄த்₃ராத₁டா₁ஶ்ரமிணே நம꞉    துங்கையும் பத்ரையும் (கூடுமிடத்தின்) தடத்தில் ஆஶ்ரமம் அமைத்தவர்
"655. வராஹ தே₃வதா₁ஸார ஶாரதா₃ஹ்வய ஶக்₁தி₁ ப்₄ருʼதே₁ நம꞉"    வராஹரை தேவனாகவும் ஶாரதையை ஶக்தியாகவும் கொண்டவர்
656. பூ₄ரிவாரிணே நம꞉    மிகுதியான (செல்வச்செழிப்பைத்) தவிர்ப்பதை (வ்ரதமாகக் கொண்டவர்)
657. க்₁ருʼஷ்ணயஜுர்வேதி₃நே நம꞉    க்ருஷ்ண யஜுர் வேதத்தை பயின்றவர்
658. ஶ்ரீபா₄ரதீ₁ப₁தா₃ய நம꞉    பெருமைக்குரிய பாரதி எனும் பட்டத்தை (ஶிஷ்யர்களுக்கு அளித்தவர்)

Sunday, May 23, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 51




 

617. நிகு₃ம்ப₄ ஶத₁ நிர்தி₃ஷ்ட₁ நிர்து₃ஷ்டா₁த்₃வைத₁ ப₁த்₃த₄த₁யே நம꞉            நூற்றுக்கணக்கான குழாம்களுக்கு குற்றமற்ற அத்வைத பாதையைக் காட்டியவர்
618. ஸங்க்ஷேப₁ ஶாரீரக₁ க்₁ருʼத்₁ ஸர்வ ஜ்ஞாத்₁மார்பி₁தா₁ஸநாய நம꞉            ஸங்க்ஷேப ஶாரீரகம் செய்த ஸர்வஜ்ஞாத்மாவுக்கு (தமக்கு பிறகு காஞ்சீ காமகோடி பீட) ஆஸனத்தை அளித்தவர்
619. நைஷ்க₁ர்ம்ய ஸித்₃தி₄ க்₁ருʼத்₃ வார்தி₁க₁ க்₁ருʼத்₃ தே₃வேஶ்வராந்த₁ராய நம꞉            நைஷ்கர்ம ஸித்தியை செய்தவரும் வார்த்திகத்தை செய்தவருமான ஸுரேஶ்வரரை (ஸர்வஜ்ஞாத்மாவுக்கு முன்) அடுத்தவராக்கியவர்
620. ப்₁லுஷ்ட₁டீ₁கா₁ப₁ஞ்ச₁பா₁தீ₃பா₁ட₂தோ₁ஷித₁ப₁த்₃மப₁தே₃ நம꞉            எரிந்துபோன உரையின் ஐந்து பாதங்களை ஒப்பித்து பத்மபாதரை சந்தோஷப்படுத்தியவர்
621. ஹஸ்தா₁மலகி₁தா₁த்₄யாத்₁மஹஸ்தா₁மலக₁ஹம்ʼஸகா₁ய நம꞉            ஆத்ம தத்துவத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல் கொண்ட ஹஸ்தாமலகருக்கு துறவறமளித்தவர்
622. ப₃ஹுமந்தா₃நந்த₃கி₃ரிதோ₁ட₁க₁ப்₁ரக₁டா₁க்₃ர்யதி₄யே நம꞉            மிகவும் சுமாரான (திறம்கொண்டிருந்த) ஆநந்தகிரி (என்ற சீடரை) தோடகம் (எனும் யாப்பில் தம்மை துதிக்க வைத்து அவரது) உத்தம ஞானத்தை வெளிப்படுத்தியவர்
623. சி₁த்₁ஸுகா₂சா₁ர்யக்₁லுʼப்₁தா₁த்₁மச₁ர்யாவிக்₂யாபி₁தா₁ஶ்ரமாய நம꞉            சித்ஸுகாசார்யரால் இயற்றப்பட்ட தன் சரிதையால் விளக்கப்பட்ட ஆஶ்ரம (நிஷ்டையை) உடையவர்
624. உப₁தே₃ஶஸஹஸ்ராதி₃ப்₁ரதி₂த₁ப்₁ரக₁டா₁த்₃வயாய நம꞉            உபதேஶ ஸாஹஸ்‌ரீ முதலிய (நூல்களால்) பரவலாக (பலரும் பயன்பெற) அத்வைதத்தை விளக்கியவர்
625. ஆம்நாயாஷ்ட₁க₁நிர்தே₃ஷ்ட்₁ரே நம꞉            (ஞான மார்க்கத்திற்கு ஸாதனமான) எட்டு ஆம்னாயங்களுக்கு வழிகாட்டி
626. மத்₄யமாம்நாயநிஷ்டி₂தா₁ய நம꞉            மத்யம (நடு) ஆம்னாயத்தில் (தானே முதல் பீடாதிபதியாக) நிலைத்தவர்
627. விஜ்ருʼம்ப₄ணத₃ஶாத்₄வஸ்த₁த₁தா₂க₃த₁ப₁தா₂க₃தா₁ய நம꞉            (இந்த ஆம்னாயங்கள்) வளருவதால் (நாஸ்திகராகிய) புத்த மதத்தினவரை த்வம்ஸம் செய்தவர்
628. த்₃வாரகா₁ மட₂ நிர்மாத்₁ரே நம꞉            (முதல் ஆம்னாயத்திற்கு) துவாரகா மடத்தை நிர்மாணித்தவர்
629. கா₁லிகா₁ பீ₁ட₂ க₁ல்ப₁கா₁ய நம꞉            காளிகா(வை ஆம்னாய ஶக்தியாகக் கொண்ட) பீடத்தை உருவாக்கியவர்
630. ஸித்₃தே₄ஶ்வர ஸப₁ர்யா க்₁ருʼதே₁ நம꞉            (ஆம்னாய ஈஶ்வரராக) ஸித்தேஶ்வரரை வழிபட்டவர்
631. ப₄த்₃ரகா₁லீ ப்₁ரஸாத₃நாய நம꞉            (ஆம்னாய ஶக்தியான) பத்ரகாளியை சந்தோஷப்படுத்தியவர்
632. ச₂ந்தோ₃கா₃ய நம꞉            (ஆம்னாய வேதமான) ஸாமவேதத்தை ஓதியவர்
633. கீ₁ட₁வாரஸ்தா₂ய நம꞉            பூச்சிகளை இம்சிக்காமல் இருக்கும் (ஆம்னாய) விரதம் கொண்டவர்
634. கோ₃மதீ₁தீ₁ர்த₂ஸேவநாய நம꞉            கோமதீ (என்னும் நதியை ஆம்னாய) தீர்த்தமாக சேவித்தவர்
635. ஸ்வரூப₁ ப்₃ரஹ்மசா₁ர்யார்ய ப₁த்₃மபா₁த₃ நிதே₃ஶ க்₁ருʼதே₁ நம꞉            (ப்ரஹ்ம) ஸ்வரூபர் என்ற ப்ரஹ்மசாரிக்கு ஆசானான பத்மபாதருக்கு வழிகாட்டியவர்
636. ஆஶ்ரமிணே நம꞉            (இந்த ஆம்னாயத்திற்கு தஶநாமிகளில்) ஆஶ்ரம எனும் பட்டம் அளித்தவர்
637. த₁த்₁த்₁வமஸ்யாதி₃ மஹாவாக்₁யார்த₂ ரூப₁வதே₁ நம꞉            (ஸாமவேதத்தின்) தத்த்வமஸி (என்பதை) முதலாகக் கொண்டு (உபதேசித்த) மஹா வாக்கிய வடிவானவர்

Saturday, May 22, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 50





601. அஷ்ட₁ஸித்₃தி₄மதே₁ நம꞉    எட்டு (பெரிய) சித்திகள் உடையவர்
602. த்₁ர்யக்ஷமூர்த₁யே நம꞉    முக்கண் உடைய (அம்பாள்/சிவன்) வடிவினர்
603. ச₁து₁ர்வர்க₃ஸுரப₄யே நம꞉    நான்கு புருஷார்த்தங்களை (பொழியக்கூடிய) காமதேனுவானவர்
604. பு₃த்₃தி₄வேஷித்₁ரே நம꞉    ஞானத்தை (உணவுபோல்) பரிமாறக்கூடியவர்
605. ஶ்ரீநவாவரணார்சா₁தி₃வித்₃யாசா₁ர்யாய நம꞉    ஶ்ரீ நவாவரண அர்ச்சனை முதலான வித்யைகளுக்கு ஆசிரியர்
606. அத₃ஶாய நம꞉    (கர்ப்பவாஸம், பாலியம் முதலிய ஶரீர) நிலைகள் அற்றவர்
607. அஜராய நம꞉    வடிவழகு குன்றாதவர்
608. ருத்₃ரைகா₁த₃ஶிநீ ஜாப₁ ஸ்நபி₁தா₁ர்தே₄ந்து₃ஶேக₂ராய நம꞉    பதினோரு முறை ருத்ரம் ஜபம் செய்வித்து பிறைசூடிக்கு அபிஷேகம் செய்வித்தவர்
609. நிர்க₃ந்தா₄ய நம꞉    (தற்) பெருமையற்றவர்
610. ந்யஸ்த₁க₁ர்மௌகா₄ய நம꞉    (உலகச்) செயல்களாகிய ப்ரவாஹத்தை விடுத்தவர்
611. நி꞉ஶ்ரேய ஸரதா₁ய நம꞉    ஒப்பில்லா ஆனந்தத்தில் எப்போதும் திளைத்திருப்பவர்
612. அரத₁யே நம꞉    (லௌகிக) ஸுகத்தை நிராகரித்தவர்
613. நிரந்தா₁ய நம꞉    முடிவில்லாதவர்
614. நீருஜாய நம꞉    வலியற்றவர்
615. அநீடா₃ய நம꞉    (தனக்கென தனி) இடம் வைத்துக்கொள்ளாதவர்
616. நியமவ்ரஜதூ₄ர்வஹாய நம꞉    பலவித கட்டுப்பாடுகளை திறம்பட நிர்வகிப்பவர்

Friday, May 21, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 49




 

581. ஸௌஶாகு₁நிக₁மௌக₁லாய நம꞉    காக்கைகளால் சுப சகுனமாக கரையப்பெற்றவர்
582. ஸௌவாபீ₁தி₁க₁வேஶந்தா₁ய நம꞉    குளங்களில் த்ருப்தியாக நீர் பருகியவர்
583. ஸௌஜக்₃தி₄க₁ப₂லேக்₃ரஹயே நம꞉    பழுத்த மரங்களினால் நன்கு உண்டவர்
584. ஸௌவிலிப்₁தி₁க₁பூ₄தூ₄லயே நம꞉    பூமி தூசி (உடல்முழுதும் சந்தனம்போல்) நன்கு பூசப்பெற்றவர்
585. ஸௌவஸ்த்₁ரக₁ப₁ட₁ச்₁ச₁ராய நம꞉    கந்தராடையை உயர்ந்த வஸ்த்ரம் போல் தரிப்பவர்
586. ஸௌஜாபீ₁தி₁க₁ப₄ல்லூகா₁ய நம꞉    ஜபங்கள் நன்கு நடக்கின்றனவா என்று (விசாரிப்பதுபோல் இடையூறு செய்யாமல்) கரடிகள் அப்பால் செல்லப்பெற்றவர்
587. ஸௌவதீ₄தி₁க₁சா₁த₁கா₁ய நம꞉    சாதக (பறவைகள் குரல் கொடுப்பதால்) பாராட்டப்பட்ட (உபநிஷத் முதலிய) உயர்ந்த பாராயணம் செய்தவர்
588. ஸௌஸம்ʼவிஷ்டி₁க₁கோ₃பு₁ச்₁சா₂ய நம꞉    நன்கு உறங்கினீர்களா என்று குரங்குகளால் (வந்து விசாரிக்கப்பட்டவர்)
589. ஸௌவுத்₃கீ₃தி₁க₁கோ₁கி₁லாய நம꞉    அழகிய பாட்டுகளால் குயில்களால் போற்றப்பட்டவர்
590. ஸௌக₂ப்₁ரபு₃த்₃தி₄க₁ஶ்வாவிதே₄ நம꞉    (காலையில் இங்குமங்கும் ஸஞ்சரிக்கையில்) முள்ளம்பன்றிகளால் (எங்கள் மேல் மோதிக்கொள்ளாமல் இருக்க) நன்கு விழித்துக்கொண்டீர்களா என்று விசாரிக்கப்பட்டவர்
591. ஸௌவாஹ்நிக₁தி₃வாக₁ராய நம꞉    பகல் காரியங்களுக்கு சூரியனால் அனுகூலம் செய்யப்பட்டவர்
592. ஸௌராத்₁ரிக₁து₁ஷாராம்ʼஶவே நம꞉    இரவு காரியங்களுக்கு சந்திரனால் அனுகூலம் செய்யப்பட்டவர்
593. ஸௌயாமிக₁தி₃வாநிஶாய த₁ம꞉    பகல் இரவும் சேர்ந்து அனுகூல பொழுதுகள் அளிக்கப்பட்டவர்
594. அவாசே₁ நம꞉    (நிர்குண ஸ்வரூபத்தில்) வாக்கு அற்றவர்
595. அகா₁யாய நம꞉    (நிர்குண ஸ்வரூபத்தில்) உடலற்றவர்
596. அசி₁த்₁தா₁ய நம꞉    (நிர்குண ஸ்வரூபத்தில்) மனம் அற்றவர்
597. த₃ண்டி₃நே நம꞉    தண்டம் ஏந்தியவர்
598. த்₃வைத₁த₁மோரவயே நம꞉    த்வைதம் எனும் இருளுக்கு சூரியன் போன்றவர்
599. ஷட்₃கு₃ணாய நம꞉    (ஆளுகை, தர்மம், புகழ், செல்வம், ஞானம், வைராக்யம் ஆகிய) ஆறு குணமுடைய (பகவத்ஸ்வரூபமானவர்)
600. ஸப்₁த₁ப₄ங்கீ₃ஸ்யாத்₃வாத₃பே₄தி₃நே நம꞉    (இருக்கலாம், இல்லாமல் போகலாம் முதலிய) ஏழு விதமாக “இருக்கலாம்” என்று சொல்லும் (ஜைன மதத்தை) உடைத்தவர்