761. ஸச்₁சி₁ந்மட₂ஸமாஶ்ரயாய நம꞉ ஸச்சித் (ஸ்வரூபமே) மடமாகக் கொண்டவர்
762. நப₄ஸ்தீ₁ர்தா₂ய நம꞉ ஆகாயமே தீர்த்தமாகக் கொண்டவர்
763. நபோ₄த₃ர்ஶிநே நம꞉ ஆகாயம் (போன்று ஸூக்ஷ்மமாக உள்ள பரம்பொருளைப்) பார்த்தவர்
764. நப₄ஸே நம꞉ ஆகாயம் (முதலிய சொற்களால் உபநிஷத்துகளில் சொல்லப்பட்ட பரம்பொருளானவர்)
765. சி₁ச்₁ச₂க்₁தி₁சி₁ந்த₁நாய நம꞉ சைதன்யம் மற்றும் அதன் ஶக்தி இவற்றை சிந்திப்பவர்
766. ப்₁ரணவ ப்₁ரணயிநே நம꞉ ப்ரணவத்தில் அமிழ்ந்தவர்
767. நம்ரிணே நம꞉ (தமது குருமார்கள் விஷயத்தில்) வணங்கிய (உடலுறுப்பகளைக்) கொண்டவர்
768. நந்த₃கோ₃ப₁ஜபூ₁ஜகா₁ய நம꞉ நந்த கோப குமாரனை பூஜித்தவர்
769. பூ₄ம்நே நம꞉ (தன்னைக் காட்டிலும் பெரியது இல்லாத) பெரும்பொருளானவர்
770. ப்₃ரஹ்மாநந்த₃நாம்நே நம꞉ பிரமானந்தம் என்ற பெயர் கொண்ட (ஸ்வரூபத்தினர்)
771. கூ₁ட₁ஸ்தா₂ய நம꞉ (ஸாக்ஷி ஸ்வரூபமாக) மாறாமல் உள்ளுறைபவர்
772. அக்ஷராய நம꞉ அழிவில்லாதவர்
773. இஷ்ட₁தா₃ய நம꞉ (பக்தர்களின்) விருப்பத்தை நிறைவேற்றுபவர்
774. ப₁ராக்₁ப்₁ரத்₁யக₃பி₄ந்நாய நம꞉ உள்ளும் வெளியும் தனித்தனியாக இல்லாதவர்
775. ஸக₁லாத்₁மநே நம꞉ அனைத்திலும் உயிராக உறைபவர்
776. அக₁லாய நம꞉ பகுதிகளற்றவர்
777. பு₁ரவே நம꞉ (மாயையால்) பல (வடிவமாகத் தோன்றுபவர்)
778. பு₁ருஷாய நம꞉ ஶரீரத்தில் வீற்றிருக்கும் (ஆத்ம ஸ்வரூபமானவர்)
779. பு₁ஷ்க₁லாய நம꞉ ஸம்ருத்தியுடையவர்
780. பூ₁ர்ணாய நம꞉ நிறைவானவர்
No comments:
Post a Comment