Pages

Tuesday, May 25, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 53




 

659. விப₄ண்ட₃கா₁தி₄ஷ்டா₂நஸ்த₂மலஹாநிக₁ரே ஶத்₃ருʼஶே நம꞉            விபண்டக முனிவரின் இருப்பிடத்தில் உள்ள மலஹானிகரேஶரை தரிசித்தவர்

660. விரூபா₁க்ஷ மஹாதே₃வ மஹநீய ப₁தா₃ஶ்ரயாய நம꞉            (அதே கர்ணாடகத்தில் ஹம்பியில்) விரூபாக்ஷ (க்ஷேத்ரத்தில் உள்ள) மஹாதேவரின் உயர்ந்த கோவிலை ஆஶ்ரயித்தவர்

661. மநீஷி மண்ட₃லீ மாந்யமௌலாம்நாய மஹாகு₃ரவே நம꞉            பண்டிதருலகு மதிக்கத்தக்க (ஐந்தாவது) மூல ஆம்னாயத்தின் (ஸ்தாபகரான) மஹாகுருவானவர்

662. ப்₁ராச்₁ய ப்₁ரதீ₁ச்₁யாவாச்₁யோதீ₃ச்₁யாம்நாயாதி₃ம தே₃ஶிகா₁ய நம꞉            கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு (ஆகிய மற்ற) ஆம்னாயங்களுக்கு முதல் ஆசானாகக் கருதப்படுபவர்

663. ப்₁ராச்₁யாம்நாய ஸுவிந்யஸ்த₁ ஹஸ்தா₁மலக₁ஸ ம்ʼஸ்து₁தா₁ய நம꞉            கிழக்கு ஆம்னாயத்தில் வைக்கப்பட்ட ஹஸ்தாமலகரால் நன்கு வணங்கப்பட்டவர்

664. ப்₁ரதீ₁ச்₁யாம்நாய ஸந்தே₃ஶநாநந்தி₃த₁ ஸநந்த₃நாய நம꞉            மேற்கு ஆம்னாயத்திற்கு உத்தரவிடப்பட்டதால் (பத்மபாதர் எனும்) சனந்தனரை சந்தோஷித்தவர்

665. அவாச்₁யாம்நாய நிக்ஷிப்₁த₁ ப்₁ருʼத்₂வீ த₄ரநதா₁ங்க்₄ரிகா₁ய நம꞉            தெற்கு ஆம்னாயத்தில் வைக்கப்பட்ட ப்ருத்வீதவரால் வணங்கப்பட்ட திருவடியினர்

666. உதீ₃ச்₁யாம்நாய ஜாநந்தா₃நந்த₃கி₃ர்யபி₄வ ந்தி₃தா₁ய நம꞉            வடக்கு ஆம்னாயத்தில் ஏற்படும் ஆனந்தத்துடன் ஆனந்தகிரியால் வணங்கப்பட்டவர்

667. கா₁மகோ₁டீ₁ பீ₁ட₂ப₁த₁யே நம꞉            காமகோடி பீடத்தின் அதிபதி

668. க₁ம்பா₁வேக₃வதீ₁ ச₁ராய நம꞉            கம்பா வேகவதீ நதிகளுக்கு இடையில் சஞ்சரித்தவர்
 
669. ஏகா₁ம்ரநாத₂ ச₁ரண ஸரோஜாத₁ மது₄வ்ரதா₁ய நம꞉"            ஏகாம்ரநாதரின் திருவடித்தாமரைகளை (மொய்க்கும்) தேனீ போன்றவர்

"670. கா₁மாக்ஷீ ச₁ரண த்₃வந்த்₃வ பா₁து₃கா₁ர்ச₁ந த₁த்₁ப₁ராய நம꞉"            காமாக்ஷியின் இரு திருவடி பாதுகைகளையும் அர்ச்சிப்பதில் ஈடுபாடுடையவர்

671. ருʼக்₃வேதா₃த்₁மநே நம꞉            ருக் வேத சொரூபமானவர்

672. ப₁ரப்₃ரஹ்ம வ்யவஸ்தா₂ப₁ந தீ₄ரதி₄யே நம꞉            பர ப்ரம்ஹத்தை (ஶாஸ்த்ரப்படி) நிறுவுவதில் பராக்ரமம் காட்டிய புத்தியுடையவர்

673. ஸத்₁யவ்ரத₁ ஸமாக்₂யாத₁ கா₁ஞ்ச்₁யந்த₁ரித₁ விக்₃ரஹாய நம꞉            ஸத்யவ்ரதம் எனப்படும் காஞ்சியில் (இறுதியில்) தன் உடலை மறைத்தவர்

674. ஸர்வஜ்ஞ பீ₁டா₂த்₄யாரோஹ லுப்₁த₁ ஸார்வஜ்ஞ்ய ஸம்ʼஶயாய நம꞉            ஸர்வஜ்ஞ பீடம் ஏறியதால் “இவர் அனைத்தையும் அறிந்தவரா?” என்ற ஐயத்தைத் தொலைத்தவர்

675. ஸுரேஶ்வராதி₃ ஸச்₁சா₂த்₁ர ஸமாராதி₄த₁ பா₁து₃கா₁ய நம꞉            ஸுரேஶ்வரர் முதலிய நல்மாணாக்கர்கள் வணங்கிய பாதுகையை உடையவர்

676. மீமாம்ʼஸாத்₃வயபா₁ரீணாய நம꞉            (பூர்வம் உத்தரம் ஆகிய) இரு மீமாம்ஸைகளில் கரைகண்டவர்

677. கா₁ணாதா₃க்ஷ ப₁தா₃த்₄வ விதே₃ நம꞉            வைஶேஷிகம் ந்யாயம் இரண்டின் பாதையையும் அறிந்தவர்

678. த்₃வாத்₁ரிம்ʼஶதா₃யு꞉ க₁லித₁ த்₁ரி꞉ப்₁ர த₃க்ஷிண பூ₄ த₁லாய நம꞉            முப்பத்திரண்டு வயதிற்குள் மும்முறை பூமியை (பாரதத்தை) ப்ரதக்ஷிணம் செய்தவர்

679. ஆஸேது₁ ஹிம ஶைலாந்த₁ த₄ர்ம ஸ்தா₂ப₁ந தே₃ஶிகா₁ய நம꞉            சேது முதல் இமாலயம் வரை தர்மத்தை நிலைநிறுத்திய ஆசிரியர்

680. வித்₃யாவஶீக்₁ருʼதா₁ஶேஷ தே₃ஶ வித்₃வஜ்ஜநார்சி₁தா₁ய நம꞉            தம் வித்யையால் பரவசமான அனைத்து தேசத்து அறிஞர்களாலும் பூஜிக்கப்பட்டவர்

No comments: