Pages

Monday, May 17, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 45




 

 504. த₄ம்மில்லபு₁ர ராஜ்யஶ்ரீ பா₃லார்ச₁ந ந்ருʼபா₁ர்சி₁தா₁ய நம꞉    தம்மில்லபுரம் என்ற ராஜ்யத்தில் பாலா (த்ரிபுரஸுந்தரியை) அர்ச்சிக்கும் அரசனால் பூஜிக்கப்பட்டவர் (?)
505. வேதா₃ந்த₁ பா₄ஸ்க₁ராய நம꞉    வேதாந்தத்தில் சூரியன் போன்றவர்
506. ஜ்ஞாநச₁ந்த்₃ராய நம꞉    ஞானத்தில் சந்திரன் போன்றவர்
507. ஐஶ்வர்யவாரித₄யே நம꞉    சகல ஐஸ்வர்யங்களையும் பொழிபவர்
508. நேபா₁லதே₃ஶ பூ₄பா₁ல வ்ருʼஷ தே₃வோப₁தே₃ஶ க்₁ருʼதே₁ நம꞉    நேபாள தேச அரசனான வ்ருஷ தேவனுக்கு உபதேசித்தவர்
509. கை₁லாஸகூ₁ட₁ ஸங்க்₁லுʼப்₁த₁ ப₁ஶுப₁த்₁யர்ச₁நாவித₄யே நம꞉    கைலாஸ பர்வதத்தில் சிவனை பூஜிக்கும் வழிமுறை வகுத்தவர்
510. ஸௌக₃த₁ வ்ராத₁ நிஷ்கா₁ஸ ப₁ட₁வே நம꞉    புத்தமதக்கூட்டத்தை நீக்குவதில் திறம்பெற்றவர்
511. வைராக்₃ய போ₃த₄கா₁ய நம꞉    வைராக்யத்தை போதிப்பவர்
512. ஸுதீ₄மணயே நம꞉    அறிவாளிகளுக்குள் மணி போன்றவர்
513. தி₃வ்யத₃ர்ஶிநே நம꞉    தெய்வீக (ஞான) த்ருஷ்டி உடையவர்
514. தே₃வதை₃ந்யஹ்ருʼதே நம꞉    (பூமியில் அதர்மம் பெருகியதால் ஏற்பட்ட) தேவர்களின் வருத்தத்தை அகற்றியவர்
515. அப்₄ரமாய நம꞉    குழப்பம் இல்லாதவர்
516. ப்₁ரஸந்ந க₁மலா த₃த்₁த₁ த₃ரித்₃ர ப்₃ராஹ்மணீ நித₄யே நம꞉    ப்ரஸன்னமடைந்த லக்ஷ்மியால் ஏழை அந்தணப்பெண்ணுக்கு செல்வம் கொடுப்பித்தவர்
517. ஸம்பு₂ல்ல கு₁ஸும ப்₁ரக்₂ய மந்த₃ மந்த₃ ஸ்மிதா₁ங்கு₁ராய நம꞉    முழுதும் மலர்ந்த பூவனைய மெல்லிய அரும்பு போன்ற புன்முறுவலை உடையவர்
518. சி₁ந்முத்₃ரா ப₁ரிதூ₄தா₁ந்தே₁வாஸி பு₁ங்க₃வ ஸம்ʼஶயாய நம꞉    சிந்முத்ரையாலேயே தலைசிறந்த சீடர்களின் சந்தேகங்களை விரட்டியவர்
519. ஹரிஹாரிவசோ₁ஹாஸ ப₄ஸ்ம ஸாத்₁க்₁ருʼத₁ பை₄ரவாய நம꞉    (நரஸிம்ஹரின் மனமுவக்கும் வாக்கின்படி) சிங்கத்தில் பயங்கர குரலாகிய அட்டஹாஸத்தால் பஸ்மமாகிய காபாலிகனுக்கு (உடலைக்கொடுக்க முன்வந்தவர்)
520. ஸமாஶ்ரித₁ஸுத₄ந்வாத்₁த₁பா₁து₃கா₁நித்₁யபூ₁ஜநாய நம꞉    தன்னை அண்டிய ஸுதன்வா (என்ற அரசனால்) தமது பாதுகைகளுக்கு நித்ய பூஜை செய்யப்பெற்றவர்
 

No comments: