Pages

Thursday, May 20, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 48





 
இன்றைக்கு சில ஆச்சரியமான பெயர்கள். ஞானியுடன் இயற்கை இயைந்து போகிறது!
 
561. ம்ருʼக₃வஶ்யக்₁ருʼதே₁ நம꞉ மிருகங்களை தன்வசம் கொண்டவர்
562. ஜட₃கு₁ப்₃ஜாதி₃ஸம்பா₄ஷிணே நம꞉ ஜடம் கூன் உடையவர் முதலியோரிடமும் (கருணையுடன்) ஸம்பாஷித்தவர் (ஹஸ்தாமலகர் ஜடம் போல் காட்சியளித்தவர்)
563. லதா₁பு₁ஷ்ப₁க்₁ருʼதா₁ர்ச₁நாய நம꞉ கொடிகளிலிருந்து (தானாக உதிர்ந்த) பூக்களால் அர்ச்சனை செய்தவர்
564. ஸௌவஸ்தி₁ க₁க்₁ரோஷ்டு₁ ப்₃ருʼந்தா₃ய நம꞉ (காட்டுப்பகுதிகளில் ஸஞ்சரிக்கையில்) ஓநாய்க்கூட்டங்கள் முன்செல்லப்பெற்றவர்
565. ஸௌக₂ஸுப்₁தி₁க₁கௌ₁ஶிகா₁ய நம꞉ (இரவில்) உறங்கவில்லையா என்று ஆந்தைகளால் கேட்கப்பெற்றவர்
566. ஸௌப்₁ராபா₄தி₁க₁கா₁கோ₁லாய நம꞉ (காலையில்) காக்கைகளால் ஸுப்ரபாதம் பாடப்பெற்றவர்
567. ஸௌகா₂ஸநிக₁ப₁ந்நகா₃ய நம꞉ (பாறைகள் முதலியவற்றிலிருந்து விலகி) சௌகரியமாக அமர ஸர்ப்பங்களால் ஆஸனம் அளிக்கப்பட்டவர்
568. ஸௌக₂கா₃யநக்₁ருʼத்₃பே₄கா₁ய நம꞉ (மழைக்காலத்தில்) இனிய பாடகர்களின் கோஷ்டியை உருவாக்கும் தவளைகளால் (உபசரிக்கப்பட்டவர்)
569. ஸௌவாதி₁த்₂யக₁பு₁ஷ்ப₁லிஹே நம꞉ தேனீக்களால் (தேனாகிய மதுபர்க்கம் அளித்து) அதிதி உபசாரம் செய்யப்பட்டவர்
570. ஸௌவாக₃தி₁க₁ஶார்தூ₃லாய நம꞉ புலிகளால் வரவேற்பு சொல்லப்பெற்றவர்
571. ஸௌகோ₂ந்ம்ருʼஷ்டி₁க₁வ்ருʼஶ்சி₁கா₁ய நம꞉ (பாறை முதலியவற்றிலிருந்து எழுந்துகொள்ளும்போது அப்பால் சென்று விழுவதால்) தேள்களால் சரியாக உதறிக்கொண்டீரா என்று நிஶ்சயம் செய்விக்கப்பட்டவர்
572. ஸௌஸ்நாதி₁க₁ப்₁ரஸ்ரவணாய நம꞉ நீர்வீழ்ச்சிகளில் நன்கு நீராடியவர்
573. ஸௌவப்₄யஞ்ஜநிகா₁ம்பு₃தா₃ய நம꞉ மேகங்களால் எண்ணெய் தேய்த்துக்கொள்வது போல் (உடலைப் பளபளக்கவைக்கும் மழை) பொழிவிக்கப்பட்டவர்
574. ஸௌவீஜிதி₁க₁வாதூ₁லாய நம꞉ பெருங்காற்றுகளால் நன்று விசிறிவிடப்பட்டவர்
575. ஸௌவநாத₁பி₁க₁த்₃ருமாய நம꞉ மரங்களால் வெயிலிலிருந்து நன்கு பார்த்துக்கொள்ளப்பட்டவர்
576. ஸௌவாஸிதி₁க₁ப₁ஞ்சா₁ஸ்யாய நம꞉ ஸிம்ஹங்களைப் போல் (கம்பீரமாக) அமர்பவர்
577. ஸௌவந்த₄ஸிக₁வாஹஸாய நம꞉ மலைப்பாம்புகளைப் போல் (ஒரு முறை) போதுமான அளவு உண்டு (வெகு காலம் த்ருப்தியுடன்) இருப்பவர்
578. ஸௌவிஹாஸிக₁மத்₁தே₁பா₄ய நம꞉ மதம்பிடித்த யானைகளனைய அழகிய புன்முறுவல் உடையவர்
579. ஸௌவத்₄யுஷித₁க்₁ருʼத்₃கு₃ஹாய நம꞉ குஹைகளில் ஸுகமாக தங்கியவர்
580. ஸௌப்₁ரஸ்தி₂த₁க₁கா₁ந்தா₁ராய நம꞉ (ஆங்காங்கு) எளிதில் கிளம்பி போவதற்கு பெருங்காட்டினால் (நல்ல பாதை அளிக்கப்பட்டவர்)

No comments: