781. ஸத்₁தா₁மாத்₁ராய நம꞉ இருப்பாக இருப்பவர்
782. பு₁ராத₁நாய நம꞉ பழமை காலமுதலே இருப்பவர்
783. போ₄க₃யோகி₃நே நம꞉ நுகர்வை (ஸத்விஷயத்தில் கட்டுப்படுத்தும்) யோகத்தை அளிப்பவர்
784. யோக₃போ₄கி₃நே நம꞉ யோகத்தையே தன் நுகரும் பொருளாக ஆக்கியவர்
785. பு₄வநாத்₁மநே நம꞉ உலகங்களில் உள்ளுறைபவர்
786. வநேச₁ராய நம꞉ (விரும்பத்தக்க ஒரே பொருளாகையால்) வனம் (எனப்படும் ப்ரஹ்மத்தில் ஸஞ்சரிப்பவர்)
787. பூ₄தி₁க்₁ருʼதே₁ நம꞉ (ஸத்கார்யங்களை செய்வதற்கு வேண்டிய) செல்வத்தை உருவாக்குபவர்
788. பூ₄தி₁தா₃ய நம꞉ (அத்தகைய) செல்வத்தை (அத்தகைய காரியங்களுக்காக நமக்கு) தருபவர்
789. பூ₄தா₁ய நம꞉ எங்கும் வ்யாபித்திருப்பவர்
790. பூ₄ரிஶாய நம꞉ (பக்தர்களுக்கு அருள) பலவிடங்களில் உறைபவர்
791. பூ₄த₁பா₄வுகா₁ய நம꞉ இறைவனின் ஸ்ருஷ்டியை ரசிப்பவர்
792. ச₁க்₁ரப்₄ருʼதே₁ நம꞉ (உலகத்திற்கு க்ஷேமம் ஏற்படும் வகையில் காஞ்சீபுரத்தில்) ஶ்ரீசக்ரத்தை ஸ்தாபித்தவர்
793. ச₁க்₁ரராஜார்சா₁ ஸம்ப்₁ரதா₃ய ப்₁ரவர்த₁கா₁ய நம꞉ (அங்கு) ஶ்ரீசக்ர பூஜை அர்ச்சனை சம்பிரதாயத்தை செயல்படுத்தியவர்
794. ச₁க்₁ரிபூ₄ஷண பூ₄தா₁த்₁மநே நம꞉ பாம்புகளை அணிகலன்களாக்கிக் கொண்ட (சிவனார்) வடிவினர்
795. ச₁க்₁ரபா₁ணி நிஷேவிதா₁ய நம꞉ (சிவனார் வடிவில்) விஷ்ணுவினால் ஸேவிக்கப்பட்டவர்
796. ச₁க்₁ரவர்தி₁ ஶிரோ பூ₄ஷா ஶேஷாயித₁ நக₂ச்₁ச₂வயே நம꞉ சக்ரவர்த்திகளின் தலையணிகளில் அங்கமான நககாந்தியைக் கொண்டவர்
797. சா₁மீக₁ரீ க்₁ருʼதா₁மத்₁ர த₃ரித்₃ர ப்₃ராஹ்மணீ க்₃ருʼஹாய நம꞉ ஏழை அந்தண பெண்மணியின் வீட்டில் உள்ள (மண்) கலயங்கள் அனைத்தும் தங்கமாக்கியவர்
798. ச₁து₁ரோதா₃ர க₃ம்பீ₄ர வாக்₁ய நிர்ப₄ர வாத₃க்₁ருʼதே₁ நம꞉ (யுக்தியால்) சாதுர்யமிக்கதும் (கருணையால்) பெருந்தன்மை மிக்கதும் (பொருளினால்) கம்பீரம் மிக்கதுமான வாக்யங்களால் வாதம் செய்பவர்
799. ச₁ஞ்ச₁லாய நம꞉ பயணித்துக்கொண்டே இருப்பவர்
800. ச₁ந்த்₃ரசூ₁டா₃த்₁மநே நம꞉ பிறைசூடி வடிவினர்
No comments:
Post a Comment