Pages

Thursday, May 27, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 55





701. ஸ்தி₂தி₁ ஸீமா விபா₄க₃ஜ்ஞாய நம꞉    இருப்பின் எல்லைகளை பாகுபடுத்த தெரிந்தவர்
702.
ப்₁ரலயார்த₂ ப்₁ரகா₁ஶகா₁ய நம꞉    பிரளயத்தின் பொருளை தெளிவாக்கியவர்
703.
ஸம்ʼஸார த₁த்₁த்₁வ ஸங்க்₂யாவதே₁ நம꞉    சம்சாரத்தின் தத்துவத்தை அலசியவர்
704.
மாயாத₁த்₁த்₁வநிரூப₁ணாய நம꞉    மாயா தத்துவத்தை நிரூபணம் செய்தவர்
705.
ஸமூலா வித்₃ய கா₁த்₄யாரோபோ₁ந் மூலந விச₁க்ஷணாய நம꞉    அவித்யையால் ஏற்பட்ட பிரமையை அதன் காரணத்துடன் வேரறுப்பதில் வல்லுநர்
706.
ஸம்ʼஸாரதா₁ரணோபா₁ய ஸந்த₃ர்ஶந ப₁டி₁ஷ்ட₂ வாசே₁ நம꞉    ஸம்ஸாரத்தைத் தாண்டும் வழியைக் காட்டுவதில் மிகவும் திறமுள்ள வாக்கினர்
707.
ரஸிகா₁ஹ்லாத₃ ஜநக₁ மஹாவாக்₁ய ச₁மத்₁க்₁ருʼத₁யே நம꞉    (அத்வைத) ரஸிகர்களுக்கு உவகையளிக்கும்படி மஹாவாக்யங்களை செம்மையுற விளக்கியவர்
708.
த்₄வநி ப்₁ரதா₄நாமருக₁ ஶத₁ஶ்லோகீ₁ மஹாக₁வயே நம꞉    உள்ளர்த்தத்தை முக்கியமாகக் கொண்ட அமருக ஶத ஶ்லோகி என்ற நூலை இயற்றியவர்
709.
ப்₃ரஹ்மஸூத்₁ர ப்₃ரஹ்ம ஶிகா₂ கீ₃தா₁ ப்₁ரஸ்தா₂ந பா₄ஷ்யக்₁ருʼதே₁ நம꞉    ப்ரஹ்ம ஸூத்ரம், உபநிஷதம், கீதை ஆகிய ப்ரஸ்தானங்களுக்கு விரிவுரை எழுதியவர்
710.
ப்₁ரத்₁யக்₃ ப்₃ரஹ்மைக்₁ய போ₃தா₄த்₄வ த₃ர்ஶிநே நம꞉    உள்ளிருக்கும் பிரமத்துடன் ஐக்கியம் பெறும் வழியைக் காட்டியவர்
711.
மோக்ஷாத்₄வ த₃ர்ஶகா₁ய நம꞉    மோக்ஷத்தின் பாதையைக் காட்டியவர்
712.
நிரந்த₁ர க்₁ருʼதா₁ம்நாய ஶிரோ நிக₃த₃ ஶீலநாய நம꞉    எப்போதும் உபநிஷதங்களின் சொற்றொடர்களையே சிந்தித்து வந்தவர்
713.
வேதா₃ந்த₁ வநஹர்யக்ஷாய நம꞉    வேதாந்தமெனும் அரண்யத்தில் ஸிம்ஹம் போன்றவர்
714.
த₁த்₁த்₁வஜ்ஞாந மஹோத₃த₄யே நம꞉    தத்துவ ஞானத்தில் பரந்த சமுத்திரமனையவர்
715.
த₁ருணாய நம꞉    இளைஞர்
716.
த₁ருணீதூ₃ராய நம꞉    (ஆனால்) இளம் பெண்களிடம் ஈடுபாடில்லாதவர்
717.
தா₁ராப₁தி₁ஸமச்₁ச₂வயே நம꞉    சந்த்ரனைப் போன்ற பொலிவுடையவர்
718.
தா₁ரக₁ ப்₃ரஹ்ம த₁த்₁த்₁வஜ்ஞாய நம꞉    கடை தேற்றும் பிரம்ம தத்துவத்தை அறிந்தவர்
719.
த₁ப₁ஸ்விநே நம꞉    தவமியற்றியவர்
720.
தா₁ப₁ஸாநுகா₃ய நம꞉    தவசிகளைப் பின்பற்றுபவர் (அல்லது) தவசிகளான சீடர்களை உடையவர்



No comments: