721. தா₁ப₁த்₁ரயவிநிர்முக்₁தா₁ய நம꞉ (உடல், இயற்கை, பிராணிகள் ஆகிய) மூன்றாலும் ஏற்படும் இன்னல்கள் அற்றவர்
722. நலிநோக்₁தி₁நிராஸக்₁ருʼதே₁ நம꞉ மிருதுவான சொற்களால் (மாற்றுக்கருத்துகளை) நிராகரித்தவர்
723. அலங்க்₁ருʼதி₁நே நம꞉ (மனவடக்கம் மற்றும் புலனடக்கம் ஆகிய) அலங்காரங்களைக் கொண்டவர்
724. அதி₁மாந்யஶ்ரியை நம꞉ (உலக ரீதியில்) மிகவும் மதிக்கத்தக்கவர்களால் நாடப்பட்டவர்
725. ஆத்₁மவிதே₃ நம꞉ (தன் சொரூபமாகிய) ஆத்மாவை (உலகின் காரணமான ப்ரஹ்மமாக) அறிந்தவர்
726. ப்₃ரஹ்மவித்₁த₁மாய நம꞉ ப்ரஹ்மமாகிய (உலகின் காரணத்தை தன் சொரூபமான ஆத்மாவாக) உணர்ந்தவர்களுள் சிறந்தவர்
727. ப்₃ரஹ்மண்யாய நம꞉ வேதத்திற்கு ஹிதமானவர்
728. ப்₃ரஹ்மபூ₄தா₁ய நம꞉ தாமே ப்ரஹ்மமாக ஆனவர்
729. ஸ்வாதி₄ஷ்டா₂நாஞ்சி₁த₁கா₁ஞ்சி₁கா₃ய நம꞉ தனது இருப்பிடமாக விரும்பிய (மதிக்கத்தக்க) காஞ்சியிலேயே நிலைத்தவர்
730. க்₁ருʼத₁பு₁ண்யஸ்த₂லீயாத்₁ராய நம꞉ புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செய்தவர்
731. ஊர்த்₄வாம்நாயார்த₂த₁த்₁த்₁வவிதே₃ நம꞉ (ஆறாவது) ஊர்த்வ (மேலான) ஆம்னாயத்தின் தத்துவப் பொருளை உணர்ந்தவர்
732. கை₁வல்ய க்ஷேத்₁ர விஜயிநே நம꞉ (தானொன்றே இருப்பதாகிய) கைவல்யமெனும் க்ஷேத்ரத்திற்கு விஜயம் செய்தவர்
733. ஶுத்₃த₄மாநஸதீ₁ர்த₂கா₁ய நம꞉ சுத்தமான மனதையே தீர்த்தமாகக் கொண்டவர்
734. ஸுமேருமூலஸஞ்சா₁ரிணே நம꞉ (உலகிற்கு உச்சியான) மேருவின் அடியை (மடமாகக் கொண்டு) ஸஞ்சரித்தவர்
735. மாயாஶக்₁தி₁ விபா₄வநாய நம꞉ மாயையை (பீடத்தின்) ஶக்தியாக பூஜித்தவர்
736. ஸத்₁யஜ்ஞாநாபி₄தா₄ஹ்வாநிநே நம꞉ (இந்த்ர ஸரஸ்வதி முதலிய பட்டங்களுக்கு பதில்) ஸத்யம் ஞானம் என்ற பெயர்களாலேயே அழைக்கத்தக்கவர்
737. அக₂ண்டா₃நந்த₃மூர்தி₁மதே₁ நம꞉ இடையறாத ஆனந்த மூர்த்தியானவர்
738. ஸோஹம்ʼஶிவோஹம்ʼவாக்₁ய ஶ்ரியை நம꞉ ஸோஹம் (அதாவது) சிவனே நான் என்பதை (மஹா)வாக்யமான செல்வமாகக் கொண்டவர்
739. ப்₁ரத்₁யகா₃ம்நாய வேத₃நாய நம꞉ (ஏழாவது) உள்ளிருக்கும் ஆம்னாயத்தை அறிந்தவர்
740. நிரஞ்ஜநேஶ்வரா ஸேவிநே நம꞉ (ஸம்ஸார) தோஷங்களற்ற ஈஶ்வரனை வழிபடுபவர்
No comments:
Post a Comment