Wednesday, January 21, 2009
அத்தியாரோபம், அபவாதம்
இனி கொஞ்சம் கவனமா படிக்கணும். சாதாரணமா புழங்காத வார்த்தைகள் எல்லாம் வரப்போகுது.
அத்தியாரோபம் = ஆரோபம். இது என்ன? இது இல்லூஷன் (illusion).
ஒரு பொருள் இருக்கு. ஆனா அதை நாம் வேறன்னு நினைக்கிறோம். இதான் ஆரோபம். இசை புரிஞ்சவங்களுக்கு புரியும்- மேலே ஏற்றுவது, இறக்குவது. ஒரு பொருளின் மேலே இன்னும் ஒண்ணை ஏற்றிப்பார்க்கிறது ஆரோபம். இருட்டிலே வழி நடக்கிறோம். வழில ஏதோ உருண்டையா திரட்சியா இருக்கு. நகர்ராப்பல கூட தோணித்தே? இது பாம்பா இருக்கும்ன்னு நினைக்கிறோம். டார்ச் விளக்கை உபயோகித்து அட இது வெறும் கயிறுதான் ன்னு தெரிஞ்சுக்கிறோம். அதே போல தூரத்திலே ஏதோ மங்கலா ஆள் இருக்கப்பல தோணுது. அட இதோ யாரோ இருக்காங்க. கேட்டு வழி தெரிஞ்சுப்போம் ன்னு நினைக்கறோம். கிட்டே போய் பாத்தா அது மனுஷன் இல்லை அது மாதிரி உருவம் இருக்கிற மரக்கட்டைதான் ன்னு தெரியுது. கார்லே நல்ல வெய்யில்ல ஏசி போட்டுகிட்டு தார் ரோடிலே போகிறோம். ரோட்டிலே கொஞ்ச தூரத்திலே தண்ணி இருக்கிற மாதிரி தோணும். இதை இப்ப எல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கு. இதான் கானல் நீர். இது போல பாலைவனத்திலே தெரியறதை பாத்து தண்ணின்னு ஏமாறறது முன்னே எல்லாம் சகஜம்.
முன்னதை இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்குன்னா தினமும் பார்த்தும் இன்னும் சரியா புரிஞ்சுக்காத ஒண்ணு இருக்கு! மேலே வானத்தை பாருங்க. நீலமா இருக்கு இல்லே? அதை பாக்கிறதாலே நமக்கு வானம் அதுக்கு கீழே நாம்ன்னு ஒரு உணர்வு இருக்கு. உண்மையிலே அங்கே எதுவுமே இல்லையே!
இதெல்லாம்தான் ஆரோபம்.
இதை புரிஞ்சு கொண்டு இது எல்லாம் உண்மை இல்லைன்னு உறுதியா தெரிகிறது அபவாதம்.
நமக்கு இங்கே முக்கியமானது ஆரோபத்தால நாம் கட்டுப்படுகிறோம். அபவாதத்தால நாம் விடுலை அடையறோம் என்கிறதுதான்.
26.
அத்தியாரோபமென்று மபவாதமென்றுஞ் சொல்லும்
உத்தியாற்பந்தம் வீடென்றுரைக்கும் வேதாந்தமெல்லாம்
மித்தையாமா ரோபத்தாற் பந்தமாம பவாதத்தான்
முத்தியா மிவ்விரண்டின் முந்தியா ரோபங்கேளாய்
அத்தியாரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும் உத்தியால் பந்தம், வீடு என்று உரைக்கும் வேதாந்தமெல்லாம். மித்தையாம் (இல்லாத) ஆரோபத்தால் பந்தமாம். அபவாதத்தால் முத்தியாம். இவ்விரண்டில் முந்தி ஆரோபம் கேளாய்.
27.
ஆரோப மத்தியாசங் கற்பனையாவ வெல்லாம்
ஓரோர்வத்துவினில் வேறேயோர் வத்துவினை யோர்தல்
நாரூடுபணியாத் தோன்ற னரனாகிக்தறியிற் றோன்றல்
நீரூடுகானற் றோன்ற னிறந்தலம் வெளியிற் றோன்றல்
ஆரோபம் அத்தியாசம் கற்பனை ஆவவெல்லாம் (ஆகியவை எல்லாம்), ஓரோர் வத்துவினில் வேறே ஒர் வத்துவினை ஓர்தல் (உணர்தல்). நார் ஊடு (கயிறில்) பணியாய் (பாம்பாய்) தோன்றல். நரனாகி (மனிதனாக) தறியில் (கட்டையில்) தோன்றல். கானல் ஊடு நீர் தோன்றல், வெளியில் (ஆகாயத்தில்) நிறம் தலம் கரு/நீலநிறம், கூடாரம் போன்ற இடம்) தோன்றல்.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
திரும்ப வரேன்! :(
????????????? :-(((
//இனி கொஞ்சம் கவனமா படிக்கணும். சாதாரணமா புழங்காத வார்த்தைகள் எல்லாம் வரப்போகுது.//
இப்படில்லாம் பயமுறுத்தக் கூடாது :-|
நீங்க விளக்கினதெல்லாம் புரியுது; செய்யுள்தான் புரியல :( அதுக்காகப் பரவாயில்லைதானே?
//இப்படில்லாம் பயமுறுத்தக் கூடாது :-|//
:-) பயமுறுத்தலை. ஒரு சின்ன எச்சாரிக்கை.
// நீங்க விளக்கினதெல்லாம் புரியுது; செய்யுள்தான் புரியல :( அதுக்காகப் பரவாயில்லைதானே?//
செய்யுள் உங்களுக்கு நிச்சயம் புரியுமே! புரியாட்டாலும் பரவாயில்லை. அதுக்குத்தான் விளக்கம் எழுதறேனே!
தாண்டவராய ஸ்வாமிகளின் கைவல்ய நவநீதம் எப்படி ஒரு அற்புதமான பொக்கிஷம் என்பதை புரிய வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி
இன்னிக்கு ஓகே!
வாங்க கபீரன்பரே! இதை முன்னால படிச்சு இருக்கீங்களா? உண்மையிலேயே பொக்கிஷம்தான். இதன் எளிமை சொல்ல முடியாதது. சுமார் 60+ அத்வைத கிரந்தங்களோட சுருக்கம்.
கீ அக்கா! பிழைச்சேன்!
அட???? நான் கமெண்ட்ஸ் கொடுக்க முடியலைங்கறதைச் சொன்னேன்! :)))))))
@ கீ அக்கா :-))
Post a Comment