Friday, January 2, 2009
அடுத்த படி?
இதுவரை விவேக சூடாமணியை ஒட்டி சங்கரர் கொடுத்த கிரமத்திலே விஷயங்களை தெய்வத்தின் குரல் சொல்லிக்கொண்டு போனதை நம்ம நடையிலே பாத்துகொண்டு இருக்கிறோம். இங்கே முதல் படியா சங்கரர் சொல்வது பக்தி/ கர்மா செய்து நம்மோட மனசிலேந்து அழுக்கையும் தடுமாட்டத்தையும் போக்கி கொள்வது; இரண்டாவதா சாதனா சதுஷ்டயம் என்கிறது. சாதனா சதுஷ்டயத்திலே ஆத்ம நாட்டமா முமுக்ஷுவா கொண்டுவிடப்படுவாங்க. அடுத்து மூணாவது படிக்கு சன்னியாசம் வாங்கிக்கொண்டு மகா வாக்கிய உபதேசம் வாங்கிக்கொண்டு பரீட்சைக்கு போகணும்! [சன்னியாசம் முக்கியமா மனசிலே இருக்குன்னு முன்னேயே பாத்து இருக்கோம்] நாம இந்த இடத்தை இப்ப பாத்துகிட்டு இருக்கோம்.
குருவோட பங்கைப்பத்தி இப்ப இங்கே மேலும் எழுதப்போறதில்லை. ஆரம்பிச்சா அதுவே பல பதிவுகள் இழுத்துக்கொண்டு போயிடும்.
அதனால குரு இல்லாம இந்த படிகள் ஒண்ணு கூட சாத்தியமாகாதுன்னு திருப்பியும் சொல்லி அதோட குறிப்பா குருவைப்பத்தி சொல்லுவதை இப்போதைக்கு நிறுத்திக்கறோம்.
சன்னியாசம் வாங்கிண்ட முமுக்ஷுவான சாதகன் அடுத்து என்ன செய்யணும்?
சிரவணம், மனனம், நிதித்யாசனம் அப்படின்னு சொல்லுவாங்க. இதை எதிர்பாத்தா சங்கரர் பக்தின்னு சொல்லி திடீர்ன்னு ஒரே போடா போட்டு ஒரு திருப்பத்தை கொண்டுவரார்! மேலே ஆச்சரியமா இதுதான் முக்கியமான உபகரணம்ன்னு வேற சொல்கிறார். (1)
சாதாரணமா கொஞ்சம் ஆன்மீகத்திலே முன்னாலே போனவங்களுக்கு பக்தி மேலே ஒரு சின்ன இளப்பம் மனசுக்குள்ள ஒளிஞ்சுண்டு இருக்கும்! அதெல்லாம் ஏதோ மந்த சாதகர்களுக்குன்னு நினைப்பு! அவங்களுக்கு புத்தி புகட்டுறாப்பலே இங்கே ரொம்ப மேலே போன சாதகனுக்கு இதை பரிந்துரைக்கிறார்!
ஆனா இது முன்னே பாத்த பக்தின்னு சொல்ல முடியாது. இது கொஞ்சம் மேல் மட்டம். இதுக்கும் மேலே இருக்கிற மட்டத்தில அத்வைத சித்தியே அடைஞ்ச ஞானி செய்கிற பக்தி. அது ஏன், எப்படி என்கிறதெல்லாம் அவனுக்கும் பகவானுக்கும் இடையிலே இருக்கிற ரகசியம். நமக்கு தெரியாது! இப்ப பாக்கிற மேல் மட்டத்திலே .....
உருவமில்லா பரமாத்மாவை ஒரு உருவம் கொடுத்து நாம அன்பு செய்வது என்பதே பொதுவா நாம பக்தி பத்தி தெரிஞ்சு வெச்சு இருக்கிறது.
இந்த மட்டத்தில அப்படி ஒரு குணத்தோட நினைக்காம அருவமாவே கருதி அப்பவும் அன்பு செய்ய பழகணும். அதில தேறணும்.
நமக்கு இது முடியவே முடியாதுன்னு தோணும். ஆனா முமுக்ஷுவுக்கு இது முடியும் ன்னு சொல்கிறாங்க.
நாம பாக்கிற சாமிக்கு ஏதோ நம்மை கவர்ந்த குணம் ஒண்ணு இருக்கும். ஆனையாட்டம் ரூபம், இல்லை சிவன் போல சுலபமா சந்தோஷப்பட்டு வரம் தர குணம், கண்ணனோட லீலைகள் மாதிரி - இப்படி ஏதோ ஒண்ணு இருந்தாதான் நாம அதில லயிச்சு உருகி பக்தி செய்ய முடியுது. இப்படி காரணம் எதுவும் இல்லாம தானாவே சுபாவமா அன்பு செய்யவும் முடியுமே! இதைத்தான் சொல்கிறாங்க.
1. மோக்ஷ காரண ஸாமக்ரீயாம் பக்திரேவ கரீயஸீ|
ஸவஸ்வரூபாநுஸந்தாநம் பக்திரித்யபிதீயதே||
Labels:
நான்காம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அண்ணா, நீங்க சொல்லியபடி குரு பற்றிய பதிவுகள் பிறகொரு சமயம் கண்டிப்பாக எழுத வேண்டும்.
சகுண-நிர்குண பக்தி பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கண்ணா...பல நேரங்களில் இவை பற்றி குழப்பம் வரும் சாத்தியம் அதிகம்...
//குரு பற்றிய பதிவுகள் பிறகொரு சமயம் கண்டிப்பாக எழுத வேண்டும்.//
ஆகட்டும் பார்க்கலாம்.
//சகுண-நிர்குண பக்தி பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கண்ணா...பல நேரங்களில் இவை பற்றி குழப்பம் வரும் சாத்தியம் அதிகம்//
என்ன குழப்பம்? புரியவில்லையே! மனைவி கருவுற்று உள்ளபோது இன்னும் பார்க்காத குழந்தையிடம் தகப்பனுக்கு/ தாய்க்கு ஒரு அன்பு உண்டாகும் இல்லையா? அதுபோல... அன்பு செலுத்த குணம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
Post a Comment