Pages

Thursday, January 1, 2009

குரு


ஞானிகள் தங்கள் அனுபவத்தை எப்படி சொல்கிறார்கள்ன்னு பாத்தா ஆத்ம விசாரம் பண்ணி கொண்டே போனதாயும் பட்ன்னு ஆத்மா பிரகாசித்து விட்டதாயும் இருக்கும்.
எப்படியானாலும் சாதகனோட ஒரே லட்சியம் ஆத்ம சாக்ஷாத்காரம்தான். அதுக்காக அவன் சதா ஆனந்தத்துல இருந்துண்டு மஹா வாக்கியங்களை எப்பவும் தியானம் செய்து கொண்டே இருப்பான். அப்படி இருப்பதாலேயே அந்த வாக்கியங்கள் சொல்ற நிலையை அனுபவிச்சுடுவான். அதுதான் ¨ஸ்வ ஸ்வரூப அவபோதேந மோக்தும்¨ (அவபோதம் =விழிப்பு)

இதெல்லாம் படிச்சுட்டு ¨அடடா, நமக்கு இவ்வளோ தீவிரமெல்லாம் வராதே¨ ன்னு நாம நினைக்கலாம்.

கவலையே வேண்டாம். அவ்வளோ தீவிரம் இல்லாதவங்களையும் உற்சாகப்படுத்தற மாதிரி மந்த மத்திய நிலை முமுக்ஷுக்கள் ன்னு பிரிச்சு சொல்கிறாங்க.

உத்தம அதிகாரிங்கிற தீவிர முமுக்ஷுதான் சிறந்தவன்; அவன் எல்லாவத்தையும் தள்ளி ஆத்ம நாட்டத்திலேயே இருப்பான் - அப்படின்னாலும், அடிநிலையிலே இருக்கிறவன் கூட ஒரு நாட்டம் வெச்சுதானே இதுல இறங்கி இருக்கான்? அதனால அவனைப்பத்தியும் சங்கரர் அக்கறைப்படுறார். கொஞ்சம் சாதனை அவன் செய்ததுமே இன்னும் கொஞ்சம் பக்குவம் வந்து இந்த வாழ்க்கை மாயைன்னு தெரிஞ்சு கொஞ்சம் தீவிரம் வரும். இப்பவும் இதிலேயே நிலையா இல்லாம சித்தம் அலை பாஞ்சாலும் ஆரம்பத்தில இருந்ததை விட இப்ப கொஞ்சம் அதிக நேரம் சித்தம் பிரம்மத்தில நிக்கும். ஆனா மாயை விடுமா? ச்சே, நமக்காவது மகா பெரிசான மோக்ஷம் கிடைக்கிறதாவதுன்னு நம்பிக்கை போயிடறதும் உண்டு.

இப்படி பட்டவங்களைப்பாத்து சங்கரர் கருணையோட சொல்கிறார் ¨அப்பா அழாதே! குரு பிரசாதம் இருந்தா எதுவும் நடக்கும். ஆனா நீயும் அதுக்கு தகுந்தவனா ஆக முடிஞ்சவரை வைராக்கியத்தை கடை பிடி. சமம் முதலான ஆறையும் பயிற்சி பண்ணு. அப்படி செஞ்சா உன் முமுக்ஷுத்வம் முன்னே பின்னே இருந்தாலும் குருவோட அனுகிரஹத்துல அது நல்லா வளந்துடும்.¨ (1)

குரு கிருபை இங்கே மட்டும்ன்னு இல்லே. ஒவ்வொரு படியிலேயும் அவரோட கிருபை இருந்தா எல்லா சுலபமா முன்னேறும். தானா முன்னேறினாலும் அவரோட ஆசீர்வாத பலத்திலேதான் அது முழுமை ஆகணும். பாவம் இந்த பயல் ரொம்பதான் சிரத்தையா முயற்சி செய்யறான்; ஆனா தடை இருக்கேன்னு கருணையோட அந்த தடைகளை அவர் நீக்கிதான் ஒருத்தன் அடுத்த படிக்கு போவது.

முன்னேயே பாத்த மாதிரி மூணாவது படியிலேதான் குருகிட்ட முழு சரணாகதியும் அவரோட முழு அனுகிரஹமும் அவசியம்.

முன் படிகள்ள நாமே சரி பண்ணிக்கலாம் என்கிற ரீதியிலே சில தப்புகள் இந்திரிய விஷயங்களிலே இருக்கலாம். அங்க கொஞ்சம் நீக்கு போக்கு இருக்கு. ஆனா முமுக்ஷுதவம் வந்த பின் சன்னியாசம் வாங்கிக்கொண்டு மகா வாக்கிய உபதேசம் வாங்கிக்கொண்ட பின்னே அப்படி இருக்க முடியாது. கொஞ்சம் தவறினாலும் ரொம்ப பெரிய குற்றம் ஆகிடும். சாதனா வழியிலேயே ரயில் சக்கரம் கொஞ்சம் கூட இப்படி அப்படி போகாம இருக்கிறது போல சீரா முன்னே போகணும். அதுக்கு குரு கிருபை ரொம்பவே அவசியம்.

1. மந்த-மத்யம ரூபாபி வைராக்யேண சமாதிநா|
ப்ரஸாதேன குரோ; ஸேயம் ப்ரவ்ருத்தா ஸூயதே பலம்||

"புலியின் வாய்ப்பட்ட மான் மீள முடியாதது போல், சற்குருவின் அருள் ஞானப் பார்வையில் அகப்பட்டோர் அற்பத் தன்மையான அகந்தை இயல்பு அழிக்கப்பட்டுக் கைவல்ய நிலை பெறுவரேயன்றி, ஒருக்காலும் கைவிடப்படவே மாட்டார் என்று உறுதியாய் உணர்க." - குருவாசகக் கோவை, 284


3 comments:

sury siva said...

குருவென் பவனே வேதாக மம் கூறும்
பரவின்பனாகிச் சிவயோகம் பாவித்து
ஒரு சிந்தையன்றி உயர்பாசம் நீக்கி
வரு நல்குரவன்பால் வைக்கலு மாமே

எனத் திருமந்திரம் ( 2057) இதே கருத்தினை க் கூறும்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

மெளலி (மதுரையம்பதி) said...

நீங்க சொல்வது போல குருவின் அருளினால் சில சருக்கல்களை ஈசியாகக் கடக்க முடிகிறது...எப்போதும் குருவருள் வழிநடத்த வேண்டும்....

Kavinaya said...

//ச்சே, நமக்காவது மகா பெரிசான மோக்ஷம் கிடைக்கிறதாவதுன்னு நம்பிக்கை போயிடறதும் உண்டு.//

எனக்காகவே நீங்க எழுதறாப்போல இருக்கு :) நன்றி.

(ஹ்ம்.. நெனப்புதான் பொழப்பக் கெடுக்குமாம்)