Pages

Friday, January 23, 2009

ஈசன்



சில நூல்களிலே இதே உற்பத்தி வேற விதமாயும் சொல்லப்படுது. சீவர்கள்கிட்டே இருக்கிற பிரிக்கமுடியாதது எதுவோ அதை மக தத்துவம் (மஹத்) என்கிறாங்க. இதேதான் அகங்காரம் ஆகும். இந்த உலகம் தோன்ற காரணமா இருக்கிறதை அகங்காரத்தில் இருந்து வருகிற வைகரி, தைசதன், பூதாதி தத்துவங்களாக சொல்கிறங்க. இதை மேலே விசாரிக்க வேண்டுமானால் இங்கே போய் பாத்து படிச்சு மெய்கண்ட சித்தியார் சுபக்கத்திலே என்ன சொல்கிறார்ன்னு புரிஞ்சதை இங்கே சொல்லலாம்.


ஜகத் உற்பத்தி வேறு வழியாக சொல்லப்படுவது:

31. ஒருவழி யிதுவா மித்தை யொருவழி வேறாச் சொல்வர்
மருவுமவ் வியத்தந் தானே மகதத்துவ மாகு மந்த
அருண்மக தத்துவந்தா னகங்கார மாகு மென்றும்
கருவகங் காரமூன்றாக் காட்டிய குணமா மென்றும்

(சிருஷ்டி கிரமங்களில்) ஒரு வழி இதுவாம். இத்தை ஒரு வழி வேறாய் [உம் பெரியோர்] சொல்வர். [சீவர்களிடம்] மருவும் (அடங்கியுள்ள) அவ்வியத்தந்தானே மக தத்துவமாகும் [என்றும்] அந்த அருண் மக தத்துவந்தான் அகங்காரமாகும் என்றும், கருவ (செகத்துக்கு காரணமான அகங்கார தத்துவம்) அகங்கார மூன்றாக காட்டிய குணமாம் (வைகரி, தைசத, பூதாதி என மூன்று அகங்காரங்களாகும்) என்றும் [சொல்வர்]

{பிரபஞ்சம் உருவானதற்கு வேறு வழிகளும் சொல்லப்படுகின்றன}

முதலிலே இருக்கிறது சத் சித் ஆனந்தமான பரம்பொருள் மட்டுமே. சத் ன்னா இருப்பு. existance. சித் அறிவு- knowledge. ஆனந்தம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.

இந்த பரம் பொருளிலேந்து மூன்று குணங்கள் வரும்ன்னு பாத்தோம். இந்த குணங்களில சித் - இருப்போட நிழல் - சாயல் படியும். இந்த சாயலை குணத்திலேந்து நம்மால தனியா பிரிக்க முடியாது; குணத்திலே முழுமையா பரவி இருக்கும்; பாக்க முடியாதபடி சூக்குமமா இருக்கும்.

முதல்லே பாக்கபோறது சத்துவத்திலே படிகிற சாயை என்ன ஆகிறதுன்னு.
இதுக்கு அந்தர்யாமி ன்னு பெயர். சத்துவ குணத்தோடே விரவி இருந்தாலும் குணங்களோடேயும் மாயையுடனும் ஒட்டாது. இது எல்லா சரீரங்கள் உள்ளேயும் இருக்கும். அதனாலதான் அந்தர்யாமின்னு பேர். ஜடமா இருக்கிற உடம்புக்கு உயிரோட்டம் கொடுத்து ஆட்டுகிறவன் இவனே. இவனை முன்னிட்டுதான் எல்லா செயல்களும் நடக்குது. இவனுக்கு பெயர் ஈசன் (ஈஸ்வரன்.)

இந்த ஈஸ்வரன் சிவன் இல்லை. அப்படி இங்கே தமிழ் நாட்டிலேதான் ஒரு மாயை இருக்கு. மத்த எல்லா இடத்திலேயும் இப்படி சொன்னா கடவுள் அப்படின்னுதான் புரிஞ்சுப்பாங்க.

32. முக்குணங்களால் ஜகஜீவ பரன் உற்பத்தி. முதலில் பரன் உற்பத்தி:

இக்குணங்களிலே விண்போன் றிருக்குஞ் சிற்சாயை தோன்றும்
முக்குணங்களி னுந்தூயதா முதற்குண மாயையாகும்
அக்குணப் பிரமச் சாயை யந்தரி யாமி மாயை
எக்குணங்களும்பற் றாதோ னிமித்தகா ரணனா மீசன்.

இக்குணங்களிலே (இந்த சத்துவம் முதலான குணங்களிலே) விண் போன்று (ஆகாயம் போல நிரவயவமாயும், வியாபகமாயும், அதிசூக்குமமாயும், அசங்கமாயும்) இருக்கும் சிற்சாயை (சித்தின் பிம்பம்) தோன்றும். முக்குணங்களினும் தூயதான முதற் குணம் மாயையாகும் [சத்துவம் மாயை எனப்படும்]. அக்குண (அந்த சத்துவத்தில்) பிரமச்சாயை (பிரதிபலிக்கும் பிரம சைதன்யத்தின் சொரூபம்) அந்தரியாமி [எனப்படும்]. {இந்த அந்தரியாமி காரண சரீரத்தை அபிமானித்துக் கொண்டு சகல சரீர உள்ளீடாக இருந்துகொண்டு ஆட்டுகிறவன்.} மாயை(யிலும்) எக்குணங்களும் (களிலும்) பற்றாதோன் (சம்பந்தப்படாதவன்) நிமித்த காரணனாம்; இவன் பெயர் ஈசன்.

{பரப்பிரம்மத்தின் சத்துவ பாகத்தில் இருந்து ஈஸ்வரன் என்கிற கடவுள் தோன்றினார்}

8 comments:

Kavinaya said...

ஒண்ணுமே ஏறலை. அப்புறமா படிச்சுப் பார்க்க்கறேன் :(

திவாண்ணா said...

31 புரியலைனாலும் பாதகமில்லை. அது இன்னொரு பார்வை அவ்வளவுதான்.
32 லே பரப்பிரமத்தின் சத்துவ பாகம் ஈஸ்வரன் என்கிற கடவுன்னு புரிஞ்சா கூட போதும்.

இப்படி "ஜிஸ்ட்" போடலாம் போல இருக்கு.

jeevagv said...

//இந்த ஈஸ்வரன் சிவன் இல்லை. அப்படி இங்கே தமிழ் நாட்டிலேதான் ஒரு மாயை இருக்கு.//
:-)

கபீரன்பன் said...

மெய்கண்ட சித்தியார் சுபகம் இணைப்பை சுட்டினால் URL கீழ்கண்டபடி வருகிறது.

http://www.tamilartsacademy.com/philosophy/tamil/sidiyar2.xml%20%20%20

.xml ற்கு பிறகு உள்ள %20%20%20 ஐ நீக்கிவிட்டால் வேலை செய்கிறது. இல்லாவிட்டால் செய்வதில்லை.

திவாண்ணா said...

சரி செய்தாயிற்று கபீரன்பரே! இரண்டு வெற்று இடங்கள் எப்படியோ சேர்ந்து இருந்தன.
மற்றொரு சுட்டி இங்கே:http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=13&Song_idField=2001&padhi=001

திவாண்ணா said...

குழப்பம் இல்லாமல் இருக்க போன் பின்னூட்டத்தில் கொடுத்த தொடுப்பு:
http://tinyurl.com/awxusk
பதிவில் கொடுத்த தொடுப்பு:
http://tinyurl.com/crprwt

பயர்ஃபாக்ஸுக்கு ஒரு நல்ல நீட்சி TinyUrl creator
முழ நீள தொடுப்பை மேற்கண்டபடி சின்னதாக ஆக்கிவிடுகிறது.

கிருத்திகா ஸ்ரீதர் said...

இது தொந்தரவோ சந்தோஷமோ தெரியாது ஆனாலும் என் பங்களிப்பு. இங்கு சென்று காணவும். http://authoor.blogspot.com/2009/01/blog-post_26.html

திவாண்ணா said...

ஆஹா, வாங்க கிருத்திகா அக்கா!
நீங்க சொன்னது போல எனக்கும் புரியலை. சாதாரணமா இந்த டேக் விளையாட்டு எனக்கு அப்பீல் ஆகிறதில்லை. என்ன விஷயம்னு படிச்சுட்டு பாக்கிறேன். இணையம் ரொம்ப மோசமா இருக்கு சமீப காலமாய்.

இருந்தாலும் நினைவு கூர்ந்ததுக்கும் தெரிவித்த உணர்வுக்கும் நன்றி!