Pages

Friday, January 16, 2009

ரொம்ப சுலபம்....




மேலும் உபதேசம் தொடருது.
¨ ரொம்ப சுலபம் அப்பா! தன்னையும் தனக்கு யார் தலைவன் அப்படின்னும் உண்மையா பாத்துட்டா, அட! நானேதான்டா அந்த தலைவனும் ன்னு புரிஞ்சு கொண்டு பிரமமா ஆகிடுவான். அவ்ளோதான். நீ யார்ன்னு உண்மையா நீ புரிஞ்சுகொண்டால் உனக்கு ஒரு கேடும் கிடையாது. உபதேசம் பண்ணுன்னு கேட்டுக்கொண்டதாலே செய்துட்டேன்.¨ என்கிறார்.

20.
தன்னையுந் தனக்காதாரத் தலைவனையுங் கண்டானேல்
பின்னையத் தலைவன்றானாய்ப் பிரமமாய் பிறப்புதீர்வன்
உன்னைநீ யறிவாயாகில் லுனக்கொரு கேடுமில்லை
என்னைநீ கேட்கையாலே யீதுபதேசித்தேனே.

தன்னையும் (சீவனையும்) தனக்காதார தலைவனையும் (கூடஸ்தனையும்) கண்டானேல் (தரிசிக்கில்), பின்னை அத் தலைவன் தானாய் பிரமமாய் [உணர்ந்து] பிறப்பு தீர்வன். உன்னை நீ அறிவாயாகில் உனக்கொரு கேடுமில்லை. என்னை நீ கேட்கையாலே ஈது உபதேசித்தேனே.

உபதேசம் கேட்டு சீடனுக்கு கொஞ்சம் நம்பிக்கை போயிடுது. ¨ஞானம் கிடைக்கும்ன்னு உங்களையே நம்பி இல்லே வந்தேன்? நான் முட்டாள்ன்னு நினைச்சா இப்படி சொல்லறீங்க? தான் யார்ன்னு தெரியாத ஆசாமி இந்த உலகத்திலே இருக்காங்களான்ன? அவங்க திருப்பி திருப்பி பிறந்து கஷ்டப்படலையா? முடிவா சொல்லுங்க¨ ன்னு கேட்கிறான்.

21.
என்னைத்தான் சடனாவுள்ளத் தெண்ணியோ சொன்னீரையா
தன்னைத் தானறியா மாந்தர் தரணியி லொருவருண்டோ
பின்னைத் தானவர்களெல்லாம் பிறந்திறந் துழலுவானேன்
நின்னைத் தானம்பினோற்கு நிண்ணய மருளுவீரே

என்னைத்தான் சடனாய் (மூடனாக) உள்ளத்து எண்ணியோ சொன்னீரையா? தன்னை தான் அறியா மாந்தர் தரணியில் (பூமியில்) ஒருவர் உண்டோ? பின்னை அவர்களெல்லாம் பிறந்து இறந்து உழலுவானேன்? நின்னை நம்பினோற்கு நிண்ணயம் அருளுவீரே.



3 comments:

Geetha Sambasivam said...

குருவை ஒரு கை பார்த்துடலாம்னு இருக்காரோ சிஷ்யர்?? :))))))

ஜீவி said...

ரொம்ப சுலபமா (!) இந்தப் பகுதிக்கு இந்தத் தலைப்பைப் போட்டு விட்டீர்கள்..

திவாண்ணா said...

//குருவை ஒரு கை பார்த்துடலாம்னு இருக்காரோ சிஷ்யர்?? :))))))//

முடியுமா என்ன? :-))

//ரொம்ப சுலபமா (!) இந்தப் பகுதிக்கு இந்தத் தலைப்பைப் போட்டு விட்டீர்கள்..//
:-))))))))))))