Tuesday, January 6, 2009
மேலும் பக்தி 2
இப்படி பரம கருணையோட ப்ரம்மத்தில் ஃபோகஸ் (focus) செய்ய ஒரு புள்ளியை கொடுத்து வெச்சு இருக்கிறது அந்த பகவான்தான். தான் ஜீவன் என்கிற நினைப்பு உண்டாகி வெளிவந்து விரிவடைகிறது இந்த புள்ளியிலே இருந்துதான். இதே புள்ளியிலேதான் ¨தான்¨ போய் ப்ரம்மத்தில் லயமடைகிறதும் (involution). நாராயண சூக்தத்திலே இதைப்பத்தி சொல்லி இருக்கு. இது நீவாரம் என்கிற செந்நெல்லுடைய கூரான நுனி போல மிகவும் நுட்பமானதாம். தலைகீழா இருக்கிற தாமரைமொக்கு மாதிரியாம் ஹ்ருதயம். அதன் கூம்பின நுனியில் சூக்குமமான துவாரம். அதிலிருந்து உடம்பு முழுக்க பரவுகிற ஒரு உயிர் சக்தியான அக்னி. அதன் நடுவிலே அணு அளவான ஜ்வாலை -தீக்கொழுந்து. இது மின்னல் கொடி போல நுண்ணியது. இது செந்நெல் போல முடியும் இடத்திலே பரமாத்மா உறைகிறது.
இந்த இடத்துக்கு தஹ்ரம் என்றும் அம்பலம் என்றும் சொல்கிறார்கள். அதெப்படி இத்தனை சின்ன இடத்தில் பரமாத்மா இருக்கு என்றால், அப்படித்தான்! அது பரப்ரம்மம். என்ன வேணுமானாலும் செய்ய முடியும்.
தனி மரம் போல இருக்கிறது வியக்தி. காடு போல இருக்கிறது சமஷ்டி.
மனிதன் தனி- வியக்தின்னா சமஷ்டியாக இருக்கிற பரந்து விரிந்த உலகத்துக்கு அப்படிப்பட்ட இடமாதான் சிதம்பரம் இருக்கு. அது ரகசியமாக இருக்கு. அதனால் அது ஆகாச தத்துவம் என்கிறார்கள். ஞான ஆகாசம். இதுதான் சித் அம்பரம். (அம்பரம் என்பது சம்ஸ்கிருத சொல். ஆகாசம் என்றும் வஸ்திரம் என்றும் பொருள். அம்பலம் என்கிற தமிழ் சொல்லுக்குத்தான் ஆகாசம், சபை என்று பொருள். தமிழ்ல சிற்றம்பலம்- அம்பரம் என்பது அம்பலம் என்று ஆகி இருக்கலாம். அம்பலத்துக்கு சபை என்ற பொருள் இருக்கிறதால சித் சபை ன்னு வந்து இருக்கலாம்.) இது போலதான் மனிதன் உள்ளே ஒரு சின்ன இடம் அத்தனையும் உள்ளாடக்கி இருக்கு.
சயன்ஸ் துணை கொண்டு பாக்கிறவங்க இதை ஒரு portel ன்னு நினைச்சு பாருங்க. இது வழியா ஜீவனும் பரம்பொருளும் ஒண்ணுக்கொண்ணு தொடர்பு வெச்சு இருக்கு. ஜீவன் ப்ரம்மத்தோட லயமாக இது வழியா உள்ளே போகும். பரப்ரம்மம் ஜீவனா உருவெடுக்க இதுவழியா வெளி வரும்.
அப்படி வெளிவர அஹங்காரம் முதல்ல தோன்றும். அப்பதானே தான் ன்னு ஒண்ணு வந்து வேறுபாடு பிறக்கும்?
அதே போல உள்ளே லயமாகி போகவும் இந்த ¨நான்¨ மெலிந்து அழிந்து போகணும். அப்பதானே உள்ளே போய் லயமாகலாம்? ஆனா இப்படி உள்ளே போக முடியாம வெளி விஷயங்கள்ல ஈடுபட்டு இந்த தான் ரொம்பவும் தடிச்சு போயிருக்கு! சின்ன வாசல் வழியா உள்ளே போக முடியாது. அந்த வாசலை இடிச்சு பெரிசா கட்டவும் முடியாது. :-))
எல்லாத்தையும் வேறா - த்வைதமா- பாத்து பாத்துதானே இப்படி குண்டா போச்சு? குண்டா இருப்பதை கரைத்து இன்னும் ஒல்லியாக்க தனக்கு என்பதை விட்டுவிட்டு தன்னை அன்பிலே ப்ரம்மத்துக்கு கொடுத்துக் கொள்ள கொள்ள முன்னேற்றம் இருக்கும். இது ஒண்ணே வழி.
சமம் தமம் எல்லாம் இதை கரைக்கலையா என்றால் அதெல்லாம் கரைச்சது புத்தியையும் மனசையும். அதை எல்லாம் விட இன்னும் சூக்குமமா இருக்கிறது அந்தக்கரணம். முன்னேயே பாத்து இருக்கோம் இல்லையா?- நானாக்கும் சமம் தமம் எல்லாத்தையும் சாதிச்சேன்? நானாக்கும் வைராக்கியத்தை சம்பாதிச்சேன்? இப்படி நமக்கே தெரியாம இது கொழுத்து கொண்டு இருக்கும். இது கரைய ப்ரம்மத்துகிட்டே பக்தி செலுத்தற இதுவே வழி.
Labels:
நான்காம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//இந்த இடத்துக்கு தஹ்ரம் என்றும் அம்பலம் என்றும் சொல்கிறார்கள். அதெப்படி இத்தனை சின்ன இடத்தில் பரமாத்மா இருக்கு என்றால், அப்படித்தான்! அது பரப்ரம்மம். என்ன வேணுமானாலும் செய்ய முடியும்.
//
சிதம்பரம் கோயிலில் நடராஜர் காலை ஊன்றி இருக்கும் மையப் புள்ளிதான் அந்தக் குறிப்பிட்ட இடம் என்றும் சொல்கின்றனர். தஹரவித்யையின் மூலம் அங்கே இறை தத்துவம் உறைந்திருப்பதாயும் ஐதீகம். அப்பைய தீட்சிதர் "சிவாத்வைதத்தில்"இது பற்றி எழுதியிருப்பதாயும் தெரிய வருகின்றது.
http://aanmiga-payanam.blogspot.com/2008/12/blog-post_29.html
//குண்டா இருப்பதை கரைத்து இன்னும் ஒல்லியாக்க தனக்கு என்பதை விட்டுவிட்டு தன்னை அன்பிலே ப்ரம்மத்துக்கு கொடுத்துக் கொள்ள கொள்ள முன்னேற்றம் இருக்கும்.//
அருமை, தொடர்ந்து சுவைக்கிறேன்!
//ப்ரம்மத்தில் போகஸ்//
முதல்லே, bogusன்னு படிச்சு குழம்பிட்டேன்:-)
//அதே போல உள்ளே லயமாகி போகவும்...//
லயம் - ங்கிற வார்த்தைப் பிரயோகம் :
லயித்து ஒன்றிப்போதல் என்னும் பொருளில்?
மேலும், சபேசனின் ஆடற் தாள லயம்!
மேலும், கோவிந்தராஜனின் சுவாச லயம்!
@கீதா அக்கா
தெரியுமே! சிதம்பரம்னா உஅடனே வருவீங்கன்னு!நினைச்சுண்டே எழுதினேன். மேலதிக தகவல்களுக்கு நன்னி!
@ஜீவா
தொடர்ந்து வருவதற்கு நன்றி.
//ப்ரம்மத்தில் போகஸ்//
முதல்லே, bogusன்னு படிச்சு குழம்பிட்டேன்:-)
:-) ஆங்கிலத்திலும் எழுதி இருக்கணும்.தப்பு என் பேரில்தான். திருத்தி விடுகிறேன்.
லயம் - ஒன்றிப்போதல் சரிதான்.
Post a Comment