Pages

Monday, April 21, 2008

பக்தி வகைகள் 2





இந்த அபர பக்தியிலே நிறைய வகைகள் இருந்தாலும் சிலது நிறைய பாக்கலாம். பயபக்தி என்பது கடவுளை வெளியே -அதாவது ஒரு சிலையிலோ, எண்ணிலோ, சித்திரத்திலோ, புத்தகத்திலோ வேற பொருளிலோ- பாக்கிறது. அவர் ஒரு கோவிலிலோ ரூமிலோதான் இருப்பார். இங்கே இருக்கிற கடவுள் எல்லாம் வல்லவர். அவரை வேண்டிக்கிட்டு பூஜை எல்லாம் செய்தால் வேண்டியது கொடுப்பார். செய்யாவிட்டால் கெட்டது நடக்கும்; நம்மை தண்டிப்பார். நம் நாட்டு மதங்கள்ல முக்காலே மூணு வீசம் இப்படித்தான் இருக்கும். தமஸ் அதிகமா இருக்கிற நபர்கள் இப்படி கடை பிடிப்பாங்க.

அடுத்தது அனன்ய பக்தி. இது தனிப்பட்டது, தீவிரமானது. ரஜசிக குணம் கொண்டவங்க இப்படி இருப்பாங்க. இதுல ஒரே கடவுள்தான். அவர் என் இதயத்துல இருப்பார்; நான் விரும்புகிற உருவுல இருப்பார். அவர் என் இஷ்ட தெய்வம். மத்தவங்ககிட்டே அவரேதான் வேற உருவுல இருக்கார். அதனால இப்படி இருக்கிறவங்க மத்தவங்களோட கடவுளையோ வழிபாட்டையோ கேலி செய்ய மாட்டாங்க.

அடுத்து ஏகாந்த பக்தி. அழுக்கில்லாத சாத்விக எண்ணங்கள் இருக்கிறவங்க இப்படி இருப்பாங்க. இந்த நபர் பக்தி செலுத்துவது ஒரு காரணமில்லாமதான். “கடவுள் எனக்கு இது கொடுப்பார், அது நடக்கணும்” னு எதுவும் இல்லாத பக்தி. கஷ்டமோ நஷ்டமோ இந்த பக்தி மாறாம அப்படியே இருக்கும். இவரோட கடவுள் எப்போதும் எங்கேயும் இவருடனேயே இருப்பார்.


5 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேனய்யா போட்டுக்கறேன். :)

ambi said...

//ரஜசிக குணம் கொண்டவங்க //

could you pls explain this type..? i never heard of this. (sorry for the english)

திவாண்ணா said...

ராஜசீக குணத்தை சொன்னேன்.
எ.பி.
அது தெரிஞ்சதுதானே? பிரதானமா செயல்கள்ல நாட்டத்தோட..
குணங்களை பத்தி விரிவா பின்னால வர இருக்கு.

Geetha Sambasivam said...

வருகைப் பதிவு!

Dr.N.Kannan said...

அழகிய, தெளிவான விளக்கம். பிறக்கும் போதே முலைப்பால் நோக்கித்தான் நிற்கிறது குழந்தை. பின் காலூன்றி தன்னிச்சையாக இருந்து பழகிய பின் உபவாசம் கை வருகிறது. உபவாசம் பழகியவர்களுக்கு குறைந்த உணவில் நிறைவுடன் வாழப்புரிகிறது. கடைசி நிலையாக ஒன்றுமே உண்ணாமல் வாழமுடிகிறது (உம். சமாதி)~!