Thursday, April 17, 2008
விவேகம் -ஆகாரம்
நேத்து பக்தி யோகத்துல இருக்கிறவங்க வளத்துக்க வேண்டிய விஷயங்கள்ன்னு ஒரு பட்டியலே பாத்தோம். இன்னிக்கு அதுல ஒண்ணைப்பத்தி மட்டும் கொஞ்சம் மட்டும் பாக்கப்போறோம்.
இந்த பட்டியல்லே இருக்கிறதுல விவேகம் என்பத ஸ்ரீராமானுஜர் வேற மாதிரி பொருள் பண்ணறார். விவேகம் உணவை குறிச்சதாகவே சொல்கிறார். அந்த ரீதியிலேயே பாக்கலாம்.
விவேகம் உணவை பகுத்து ஏத்துக்கொள்வது. உணவில ஏன் அவ்வளவு முக்கியத்துவம்னா அது நம்மோட குணங்களுக்கும் சாப்பாடு போடுது. குணங்கள் நம்மோட கூட பிறந்தது ஆனாலும் நம் சாப்பாடுக்கு தக்கபடி அதிகமோ குறைவோ ஆகும்.
பல இடங்களிலேயும் நாம உணர்சிகளை கட்டுப்படுத்தனும்னு பாத்துக்கிட்டே வந்தோம் இல்லையா? அதுக்கு சுலபமான வழி சாப்பாட்டை சரி செய்யறதுதான். எப்பவுமே குணம் ஒரே மாதிரி இருக்காது. சில சமயம் ரஜோ குணம் அதிகமாகும்; சில சமயம் தமோ குணம். இப்படி மாத்தி மாத்தி ஒண்ணு அதிகமாகும். நம்ம நோக்கம் சத்வ குணத்தை அதிகப்படுத்தி அதையே முடிந்த வரை நிலைச்சு நிக்க முயற்சி செய்யறதுதான். தமோ குணத்தை ரஜோ குணம் முழுங்கிடும். சத்வம் மேலானா ரஜோ குணம் அடங்கும்.
ரொம்ப உப்பு காரமா இருக்கிறது, கசப்பு, புளிப்பு, ரொம்ப சூடு பொதுவா அதிக ருசி உள்ளது இதெல்லாம் ராஜஸம்.
நாள் பட்டது, பழையது, ஊசிப்போனது, மாமிசம். எச்சில் இதெல்லாம் தாமஸமானது. அதிக சுவை இல்லாம ஒரு அசட்டு திதிப்பு கொஞ்சம் துவர்ப்பு இதெல்லாம் சத்துவம்.
அதாவது பொதுவா வாய்க்கு ரொம்ப ருசியா இருக்கிறது மனசுக்கு நல்லது செய்யாது.
ராஜஸ உணவு மனசோட சலனத்தை அதிகப்படுத்தும். தாமஸ உணவு தூக்கம் வர வழைக்கும். நம்ம செய்கைகள் மந்தமாகும்.என்னடா தூங்கி வழியறியேன்னு மத்தவங்க கேட்பாங்க. அதனால நாம் தூய சத்துவ உணவையே சாப்பிடனும்.
ஆஹார சுத்தெள ஸத்வ சுத்தி:
ஸத்வ சுத்தெள த்ருவா ஸ்ம்ருதி:
என்கிறது சாந்தோக்யோபநிஷத். அதாவது ஆகாரம் தூய்மையானால் மனத்தூய்மை உண்டாகும். மனத்தூய்மையால் இறை உணர்வு உறுதி படுகிறது.
இந்த உணவுல மூன்று குற்றங்கள் வரும் என்கிறாங்க.
இயல்பான குற்றம் ஒன்று. பூண்டு வெங்காயம் (வெங்காய சாம்பார் கூடாதுன்னா ஆன்மீகமே வேண்டாம்ன்னு சொல்கிறது காதுல விழுது! :-)) மது மாம்சம் இவை எல்லாம் இயற்கையாகவே பிரச்சினை பண்ணும். இவற்றை சாப்பிட்டா இறை உணர்வில மனசு லயிக்காது. மனத்தூய்மை கெட்டுப் போகும். காமமும் குரோதமும் மேலோங்கும். பூமில விளையும் கிழங்குகள் தமோ குணத்தை அதிகப்படுத்தும்.
நம்ம மனசு ரொம்பவே சக்தி உள்ளதுன்னு பாத்திருக்கோம். நல்ல மனசுள்ளவங்களோட பழகினா நம்மை அறியாம மனசு அதே போல ஆகுது. இப்படி மனுஷனோட மனவீச்சு சுற்றுப்புறத்தையே பாதிக்கும். இது கண்ணுக்கு தெரியாத நுட்பமான சக்தி. இது ஒத்தரோட எல்லா பொருட்களிலேயும் கூட பரவும். அதனால யாரிடம் இருந்து உணவு கிடைக்குதுங்கிறது முக்கியமாகுது. நம்மிடம் ரொம்ப பிரியம் வச்சு இருக்கிற அம்மா சமைக்கிறது நல்லதே பண்ணும். கடனேன்னு, வீட்டு/ மத்த பிரச்சினை எல்லாம் மனசில போட்டு உழப்பிக்கிட்டு சமையல்காரர் சமைக்கிறது கெட்டதுதான் பண்ணும். அத ஆச்ரேய தோஷம் என்கிறாங்க.
மூணாவதா சுத்துப்புற சூழலால உணவு கெட்டு போகலாம். பாத்திரம் சரியா சுத்தமா இல்லாம இருக்கலாம். பூச்சி ஏதாவது விழுந்திருக்கலாம். குப்பை தலைமயிர் மண் இப்படின்னு ஏதாவது கலக்கலாம். இப்படி பட்ட சாப்பாடு சாப்பிடறவங்க மனசை மாத்தும் அதனால யார்கிட்ட எந்த மாதிரி உணவை ஏத்துக்கொள்வது என்பதில ரொம்பவே கவனம் இருக்கனும்.
ராமானுஜர் சொந்த அனுபவத்துலேந்து சொல்லி இருக்கனும். ஏன்னா சாப்பாட்டால அவர் பட்ட கஷ்டம்..
நாளைக்கு சொல்றேன்.
Labels:
முதல் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
உணவை பத்தி ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.
பரமாச்சாரியார் தனது தெய்வத்தின் குரலிலும் ஒரு வால்யூம்ல(நம்பர் மறந்து விட்டது) இந்த உணவு விஷயங்களை ரொம்ப டீடெயிலா சொல்லி இருப்பார்.
லங்கனம் பரம ஒளஷதம்!னு ஒரு வழக்கு இருக்கு. அதான் முனிவர்கள், நம் முன்னோர் எல்லாரும் அடிக்கடி உபவாசம் இருந்ருக்காங்க இல்லையா?
ஆனா நான் உடம்பை வளர்த்தேனே! உயிரை வளர்த்தேனே! கேஸ். :p
நல்லாயிருக்கு சார். இதனால்தான் சில குறிப்பான நாட்களில உணவு வெறும் பழம்-பால் என்றாகிவிடுகிறது. :))
@ அம்பி
//லங்கனம் பரம ஒளஷதம்!னு ஒரு வழக்கு இருக்கு. அதான் முனிவர்கள், நம் முன்னோர் எல்லாரும் அடிக்கடி உபவாசம் இருந்ருக்காங்க இல்லையா?//
ஏன் அம்பி அவங்களுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிட்டு இருந்ததா?
:-))
அப்படி இல்லை.
உணவு உள்ளே போனதுமே சிந்தனைகளை தூண்டிவிடும். அது பகவத் சிந்தனைகளை தடுக்கும்.
அதனால விரத காலங்கள்ல இறைவனை நினைச்சிகிட்டு இருக்கனும் நினைக்கிறவங்க உபவாசம் இருப்பாங்க. உடம்பு ஒத்துழைக்கணும்.
//ஆனா நான் உடம்பை வளர்த்தேனே! உயிரை வளர்த்தேனே! கேஸ்//
முக்கால்வாசி பேர் அப்படித்தானே. ஏதோ ஒரு வழில இறங்கிட்டா மத்தது காலம் வரும்போது தானாக சரியாகும்.
//ராமானுஜர் சொந்த அனுபவத்துலேந்து சொல்லி இருக்கனும். ஏன்னா சாப்பாட்டால அவர் பட்ட கஷ்டம்..//
அறிந்து கொள்ளக் காத்திருக்கிறேன்....
@ மௌலி
பதிவு போட்டாச்சு!
Post a Comment