Pages

Thursday, April 24, 2008

பயிற்சி



அடுத்து பயிற்சி.

ஏற்கெனவே மனசையும் புலன்களையும் கட்டுப்படுத்தனும்னு போர் அடிக்கற அளவு சொல்லியாச்சு. :-))
அது எப்படின்னும் பாத்துட்டோம்.

இந்த கட்டுப்பாடு திடீர்னு வராதில்லையா? நாம் குதிரையோட கடிவாளத்த பதமா பிடிக்கிற மாதிரி இவைகள பிடிச்சு கொஞ்சம் கொஞ்சமா கட்டுக்கு கொண்டு வரணும். ஒரேயடியா இழுத்தா அறுத்துக்கிட்டு ஓடிடும். ரொம்ப லூஸா விட்டா கட்டுக்கே வராது. இப்படி மனசையும் புலன்களையும் கட்டுக்கு கொண்டு வரதே பயிற்சி.

இதை தினசரி செய்யனும். எல்லாமே கட்டுக்குள்ள வந்தாச்சுன்னு தோன்றினா கூட செய்யனும். இல்லாட்டா பழைய விஷயங்கள் மெதுவா வரதே தெரியாம உள்ளே வந்திடும். வீட்டை பெருக்கி சுத்தமாக்கினா கூட தினசரி பெருக்கறோம் இல்லையா?

விடாத பயிற்சி செய்யும் போது அலுப்பு ஏற்படும். "அட எவ்வளோ நாள் இப்படியே இருக்கிறது? ஒரு நாள் வெங்காய சாம்பார் சாப்பிட்டா கெட்டா போயிடும்?” ன்னு மனசு கேக்கும். இதுக்கெல்லாம் இடம் கொடுத்தா அவ்ளோதான். குதிரைங்க நம்மள இழுத்துக்கிட்டு ஓட ஆரம்பிக்கும்.

எப்போ காம குரோதங்களிலேந்து விடுபட்டு வெறும் இறை அன்பு மட்டுமே நிக்குமோ அது பயிற்சியோட முதிர்ந்த நிலை.

லோக ஹாநௌ சின்தா ந கார்யா
நிவேதி தாத்ம லோக வேதத் வாத்


என்கிறது நாரத பக்தி சூத்ரம். அதாவது பக்தன் உலகத்துக்கு சேவை செய்ய விரும்பறான். ஏன்? உலகம் துன்பப்படறதே என்பதால இல்ல. உலகம் முழுதும் இறைவனை பாக்கிறதால உலகத்துக்கு செய்யறது இறைவனுக்கே செய்கிறது என்று புரிஞ்சதால அதுல கிடைக்கிற சந்தோஷத்துக்காக செய்கிறான்.
இதையே உலகத்துக்கு செய்கிறதா நினைச்சா அதால துன்பமே ஏற்படும்.

சிவானந்தர் ரிஷி கேசத்திலே ஆச்சிரமம் நிறுவி வேலை செய்கிற போது அவரோட தொண்டர் ஒத்தரை வெறிநாய் கடிச்சு விட்டது. சிவானந்தர் சன்னியாசி ஆகு முன்னே டாக்டரா இருந்தவர். அதனால அவரே தொண்டரை கவனிச்சுகிட்டார். இப்பவும் சரி அப்பவும் சரி வெறிநாய் கடிக்கு நல்ல வைத்தியம் கிடையாது. அவர் கவனிப்பை பாத்து மத்தவங்க "ஆஹா! தன் தொண்டரை எவ்ளோ நல்லா பாத்துக்கிறார்"ன்னு நினச்சாங்க. சில நாட்களுக்குள்ள அவரை வேற ஊருக்கு அனுப்பி வைத்தியம் பாக்கிறது நல்லதுன்னு தெரியவே சிவானந்தரை கேட்டாங்க. அவரும் சரின்னு சொல்லி தேவையான பணம் கொடுத்து அனுப்பி வைத்தார். அடுத்த ஆசிரம வேலையை பாக்க ஆரம்பிச்சார். ஊருக்கு போனவர் நலன அப்பப்ப விசாரிச்சார். வைத்தியம் எதுவும் பலனில்லாம தொண்டர் இறந்து போனார். செய்தி வந்த பிறகும் சிவானந்தர் வழக்கமான வேலையை பாத்துக்கிட்டு இருந்தார்; பதறவும் இல்லை; வருத்தப்படவும் இல்லை.

உயந்த நிலைக்கு போன பக்தனுக்கு எல்லாம் இறைவன் திருவிளையாடல்னு தோணும். அதனால செய்கிற காரியம் பத்தி பெருமிதமும் இருக்காது துயரமும் இருக்காது. இறைவன் தொண்டை செய்கிற நினைப்பு மட்டுமே இருக்கும். இப்படி எல்லாத்தையும் கடவுளுக்கு அர்ப்பணம் செய்கிறது சமர்ப்பண பாவம். இது வரணும்.

இப்படி பயிற்சி செய்கிற போதோ இல்லை பக்தி திடமான பிறகோ எந்த நிலையிலும் நம்ம சமூக வாழ்கையை புறக்கணிக்கவே வேண்டாம். ஆனால் கர்ம பலன் முழுதும் ஆணடவனுக்கு கொடுத்துடணும்.


5 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

சாணேறினால் முழம் சறுக்கும், ஆனால் விடாம ஏறுவோம், ஏறணுங்கற முயற்சியும் மனதால் ஒரு வேட்கையும் வந்துடுத்துன்னா பிரச்சனை இல்லை.

மெளலி (மதுரையம்பதி) said...

//இப்படி பயிற்சி செய்கிற போதோ இல்லை பக்தி திடமான பிறகோ எந்த நிலையிலும் நம்ம சமூக வாழ்கையை புறக்கணிக்கவே வேண்டாம். ஆனால் கர்ம பலன் முழுதும் ஆணடவனுக்கு கொடுத்துடணும்//

நன்றாகச் சொன்னீர்கள்..சமுக வாழ்க்கையில் தாமரை இலைத்தண்ணீர் போல இருக்கணுங்கறதை. இதை நடைமுறைப்படுத்த எத்தனை பாடு... :)

Geetha Sambasivam said...

//எந்த நிலையிலும் நம்ம சமூக வாழ்கையை புறக்கணிக்கவே வேண்டாம்.//

சமூக வாழ்க்கை? அல்லது இல்லறத்தில் உள்ள நித்திய கர்மாக்கள்? இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லை? இது தெளிவா இருந்திருக்கணுமே?

திவாண்ணா said...

@மதுரையம்பதி
1. சரியாசொன்னீங்க.அனுபவத்திலிருந்துதானே?

2.தாமரை இலை தண்ணீர், சாட்சி எல்லாம் சொல்ல சுலபம்தான். நடைமுறை படுத்தறது கஷ்டம்னு சொல்றீங்க. இது மட்டும் இல்லாம நடைமுறை படுத்தனும்கிற நினைப்பே பலருக்கு வரதில்லையே? அப்புறம்தானே அதுல இருக்கிற கஷ்டம். ஆனா நீங்க சொல்றா மாதிரி பாடுதான்!

திவாண்ணா said...

@ கீதா அக்கா
சமூக வாழ்க்கைதான். அதாவது வேலைக்கு போறது, சம்பாதிக்கிறது, பிள்ளை குட்டிகளை கவனிக்கிறது இப்படி எல்லாமேதான். இதையெல்லாம் விட்டுவிட்டு ஆன்மீக சாதனை செய்யறேன்னு போனா அது ரொம்ப நாள் ஓடாது. வீட்டில் ஒத்துழைப்பும் வேணுமே!

நித்திய கர்மாக்கள்னா அது கர்ம /பக்தி யோகத்தை சார்ந்திடும் இல்லையா?

தெளிவாக்க சொன்னதுக்கு நன்ஸ்!