Pages

Friday, April 18, 2008

ராமனுஜர் பட்ட பாடு!



ஸ்ரீ ராமானுஜர் சிஷ்யர்களுக்கு பாடம் எடுப்பார். மடை திறந்த வெள்ளம் போல பாடம் ஓடிகிட்டே இருக்கும். அப்படி ஒரு ஞாபக சக்தி. ஆனா திடீர்ன்னு ஒரு நாள் அவர் பாடம் சொல்லிகிட்டு இருக்கறப்ப அடுத்த வரி ஞாபகம் வரலை; நின்னு போச்சு! கூட இருந்தவங்க எல்லாருக்கும் ஆச்சரியம். ராமானுஜரும் ஆச்சரியப்பட்டு ரொம்ப முயற்சி பண்ணி திருப்பி சொல்லி பாத்து, அடுத்த வரியை நினைவு படுத்தி பிறகு மேலே பாடம் சொன்னார்.
பாடம் முடிந்த பிறகு, “ஏன் இப்படி ஆச்சு?" ன்னு ரொம்ப யோசனை பண்ணார். ஒண்ணுமே பிடிபடலை.

அடுத்த நாளும் அதே போல தடங்கல் ஏற்பட்டது. இன்னிக்கு இது ஏன்னு ஒரு வழியா கண்டு பிடிச்சே ஆகணும்னு தீர்மானம் பண்ணினார். இரண்டு நாளா என்ன செய்தோம் என்று எல்லாம் யோசனை பண்ணி பண்ணி ஒண்ணும் புரியலை.

மதிய உணவின் போது காய்கறி எல்லாம் பச்சுன்னு நல்லா இருக்கிறது தெரிஞ்சது. மடப்பள்ளி ஸ்வாமிகிட்டே விசாரிச்சார். ஏது இந்த காய்கறி எல்லாம்னு. அவர் "இப்பல்லாம் புதுசா ஒத்தர் கொண்டு வரார். நல்லா இருக்கு" ன்னார். ராமானுஜருக்கு ஏதோ புரிஞ்ச மாதிரி இருந்தது. "யார்பா அது? எப்போ வருவார்?" ன்னு கேட்டார். ஸ்வாமி நாளை கால அவர் வறப்ப உங்களுக்கு சொல்லறேன் அப்படின்னார். நிச்சயமா சொல்லுப்பா என்று ராமானுஜரும் சொன்னார்.

அடுத்த நாள் காலை பூஜை எல்லாம் முடிந்த பிறகு காய்கறிகாரர் வந்திருக்கிறதா தகவல் வந்தது. ராமானுஜர் போய் வியாபாரியை விசாரிச்சார். பேர் ஊர் எல்லாம் கேட்ட பிறகு "இந்த காய்கறி எல்லாம் எங்கிருந்து வருது?" ன்னு கேட்டார். "என் தோட்டத்திலேந்துதான், ஸ்வாமி!” என்றார் அவர். அந்த இடத்தை பாக்கலாம் வான்னு கிளம்பிட்டார் ராமானுஜர். வியாபாரி கொஞ்சம் தயங்கினாலும் வேற வழியில்லாம போனார். ஊர் எல்லையை தாண்டியும் போய்கிட்டே இருக்கிறதை பாத்து ராமானுஜருக்கு ஏறக்குறைய புரிஞ்சே போச்சு. கடைசியில் "இதுதாங்க என் தோட்டம்" ன்னு வியாபாரி சொல்ல கூட வந்தவங்க திகைச்சு போயிட்டாங்க. அவங்க நின்னுகிட்டு இருந்தது சுடுகாட்டுப்பக்கத்துலே! "ஏம்ப்பா தோட்டம் போட இந்த இடம்தானா கிடைச்சுது" என்று சொல்லி எல்லாரும் திரும்பி வந்துட்டாங்க.

பழைய காய்கறிகாரர்கிட்டே திருப்பியும் வாங்க ஆரம்பிக்க மறதி பிரச்சினை மறைஞ்சு போச்சு.
இப்படி எங்கே பயிர் விளையுது என்கிறது கூட முக்கியமா போயிடுது.


6 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

ஓ! இதுனாலதான் ஜீவன்(உயிர் போன பின் ஜீவன் அங்கேயே சுற்றிவந்து உடலை சுற்றி வரும் என்று படித்தேன்), உடம்பு எரிவதைப் பார்க்க சுடுகாட்டுக்கு வருவதால், மறுபிறவி எடுக்கும் போது, முந்தய பிறவியின் ஞாபகங்கள் இருப்பதில்லையோ?..

(ரொம்ப காதைச் சுற்றி மூக்கை தொட முயற்சிக்கிறேனோ?...:-))

ஒரு காலத்தில் ஓவரா லாஜிக் யோசித்ததன் விளைவு..:))

ambi said...

அருமையான கதை.

இப்ப எல்லாம் ஏரியை மண் போட்டு நிரப்பி அப்பார்ட்மெண்ட் கட்டிடறாங்க. அதையே கண்டு பிடிக்க முடியறதில்லை. என்னத்தை சொல்ல?

பேசாம நமது வீட்லயே தோட்டம் போட்டுக்க வேண்டியது தான். :)

நான் தான் முதல் போணியா? :D

ambi said...

அடடா! மதுரையம்பதி அண்ணா தான் பஷ்ட்டா? சரி, பரவாயில்ல, :P

சொல்ல மறந்துட்டேனே! வினாயகர் அகவல் சென்னையிலிருந்து என் மாமனார் கொண்டு வந்து தந்து விட்டார், பாராயணம் இன்னிக்கே ஆரம்பிச்சுடுவேன். :)

திவாண்ணா said...

@ மௌலி
ம்ம்ம்ம்ம்
ஆமாம், என்ன சொல்ல வரீங்கன்னு புரியலை!

திவாண்ணா said...

@ அம்பி
ஆமாம் நம்ம வீட்டு தோட்டம் நல்லது. சுயம்பாகம் மாதிரி. வீட்டு மனை பாத்துதானே வாங்கினீங்க?
அவல் சீ அகவல் வந்தாச்சா? சந்தோஷம்! வாழ்த்துக்கள்!

மெளலி (மதுரையம்பதி) said...

//ம்ம்ம்ம்ம்
ஆமாம், என்ன சொல்ல வரீங்கன்னு புரியலை!//

திவாண்ணா, மயானத்துக் கீரை/காய் அதன் குணம் ராமானுஜருக்கு மறதியினை தந்தது என்பது போல, ஜீவன் மயானத்தினை பார்ப்பதால் அதன் அடுத்த ஜென்மத்தில் அதற்கு பூர்வ ஜென்மம் நினைவிருக்கிறதில்லையான்னு கேட்டேன். :)