Pages

Saturday, April 19, 2008

பக்தி, வழிபாடு வகைகள்



பக்தி என்கிறது நம்மைவிட அதிகமான சக்தி வாய்ந்த, எல்லாம் தெரிந்த, எல்லாம் செய்ய வல்ல கடவுள் மேலே அன்பும் பற்றும் வைக்கிறது. அந்த கடவுளே ஆகமங்கள் புராணங்கள் மூலமாக எப்படி தன்னை வழிபட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். சம்பிரதாயமாக வந்து இருக்கிற பூஜைகள், பஜனைகள் போன்றவற்றால் அவரை போற்றுகிறோம். இது கொஞ்சம் கொஞ்சமாக ஒரு குறிப்பிட்ட உருவத்திலே கடவுளை பார்க்க ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி ஒரு மிக உயர்ந்த நிலையில் அவரை சரணாகதி செய்ய வேண்டும்.

பக்தில 2 வகை உண்டு. ஒன்று ஒரு விதிக்கப்பட்ட வழில வழிபாடு செய்யறது. நிறைய பெரியவங்க வழிபாட்டுக்கான விதிகள் வரிசைகளாக எழுதி வச்சிருக்காங்க. இத தெரிஞ்சிகிட்டு முடிஞ்சா ஒரு குரு மூலமா உபதேசத்தோட வழிபாட்டை ஆரம்பிக்கலாம். இந்த பெரியவங்க ஆரம்பிச்சு வைக்கிறதுல ஒரு தனி மதிப்பு இருக்கு. இத வைதேய பக்தி- கிரம வழிபாட்டுன்னு சொல்வாங்க.

இப்படி இல்லாம பக்தி ப்ரேமை அதிகமா இருக்கிறவங்க ஒரு விதியும் இல்லாம வழிபடுவது உண்டு. கண்ணப்ப நாயனார் எந்த விதிகளை கடைபிடிச்சார்? இதில அன்பு தீவிரமா இருப்பதே முக்கியம். பக்தி பித்து என்கிறாங்களே அப்படி.

அதுக்காக “நமக்கு அன்புதான் முக்கியம்; வழி இல்லை; நான் எப்படி வேணா வழிபடுவேன்” னு கிளம்பறது தப்பு. நாம பலர் அதுக்கு தேவையான அளவு பக்தி இல்லாமதான் இருக்கோம். அப்படி இருந்தா எல்லா சீவன்களிடமுமே அன்பு காட்டுவோம். தேவையான பக்தி இருக்கிறதா நினைக்கிறீங்களா? கண்ணை கொடுக்க தயாரா? இல்லைதானே? அவ்வளவுதான்.

பர பக்தி என்பது உருவமில்லாமல் பரப்பிரம்மத்தின் மேலே பக்தி வைப்பது. இது ஞான யோகத்தில் ஒரு பகுதி.

நாம் சாதாரணமாக அப்படி ஒரு கண்ணுக்கு தெரியாத கடவுளிடம் பக்தி வைக்க முடியாததாலே கடவுளுக்கு நம் மனசுக்கு மகிழ்ச்சி தரும்படி ஒரு உருவத்தை கற்பனை செய்துக்கிறோம். சிலருக்கு கடவுள் குழந்தையா இருப்பது பிடிக்கும். அவர்கள் கண்ணன் பால முருகன் போல சில தெய்வ உருவங்களை வழி படுவாங்க. சிலருக்கு கடவுளை தாயா பாக்க பிடிக்கும். அவர்கள் அதுபோல கற்பனை செய்துபாங்க. சிலர் எல்லாம் வல்ல சக்தி வாய்ந்த மூர்த்தியாக பாக்க நினைப்பாங்க. இவங்க கடவுளை பல ஆயுதங்களோட கூடிய தெய்வமா கற்பனை செய்வது சுலபம்.

இப்படி மக்களோட மனசு வித்தியாசமா இருப்பதால அவர்கள் மனசுக்கு ஏற்றபடி கடவுளை கற்பனை செய்கிற சுதந்திரத்தை பெரியவங்க கொடுத்து வெச்சிருக்காங்க. அப்பதான் அவங்க மனசு கடவுள்ல சுலபமா லயிக்கும். பக்தியும் பலப்படும். இதை “இந்துக்களுக்கு நிறைய கடவுள்கள் இருக்காங்க, அது எப்படி நிறைய கடவுள்கள் இருக்க முடியும்? அப்படி இருந்தால் யார் உசத்தி? யார் தாழ்த்தி? ஏன்?” என்கிற கேள்விகள் எல்லாம் அசட்டுத்தனம்தான்.

இந்த மாதிரியான பக்தி அபர பக்தி என்கிறாங்க.


4 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

உருவ/அருவ வழிபாடு பற்றி சொன்னீங்க சரி.....

உருவ வழிபாட்டிலேயே, இல்லத்தில் வழிபடுவது, கோவிலுக்கு சென்று வழிபடுவது இவற்றைப் பற்றியும் சொல்லுவீங்களா?

திவாண்ணா said...

நிச்சயமா. அப்புறம். அதுக்கு முன் சொல்ல வேண்டிய விஷயங்கள் இருக்கு.

ambi said...

ம்ம். இசை மூலமா வழிபாடு அதாவது நாதோபாசனை செய்து வழிபட்ட தியாக பிரம்மம், துளசி தாசர் பற்றியும் சொல்லுவீங்களா?

திவாண்ணா said...

@ ambi
looks like i have to start a wish list! i am sure it will fit in in one of the several types we are yet to discuss!