Pages

Tuesday, April 8, 2008

வழி 4 அ



எது நிரந்தரம் இல்லியோ அது மாயை. உதாரணமா இது என்ன?

இது குடம்.

இப்ப இத பாத்து குடம்னு சொல்றிங்க. நேத்து இது வெறும் மண்ணா இருந்தது.

சரிதான்.

நாளைக்கே இது உடஞ்சு போச்சுனா?

வெறும் ஓட்டஞ்சில்லி. காலப்போக்கில அதுவும் மண்ணாயிடும்.

அப்ப மண்ணு, குடம், ஓட்டஞ்சில்லிங்கிறது எல்லாம் வெறும் பெயர்தான். அதுல மாறாதது மண்ணுதான்.
நேத்து இன்னிக்கி நாளை. இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம், மூணு காலத்துலேயும் எது மாறாம இருக்குமோ அதுதான் நித்தியம். மத்ததெல்லாம் அநித்தியம்.

அப்ப இந்த குடம் நித்தியம் இல்லை. அதோ அந்த மலை நித்தியம். சரிதானா?

ம்ம்ம். யோசிச்சு பாருங்க. மலையும் நித்தியமா? அங்கே ஒரு க்வாரி இருக்கு. இன்னும் சில பல வருஷங்கள் போனா அத முழுக்க வெட்டி எடுத்துடுவாங்க.

நாராயணா! அப்படி பாத்தா பாக்கிற எதையுமே நித்தியம்னு சொல்ல முடியாது போல இருக்கே!

அப்பாடா. அதேதான். அது போலதான் இந்த உலகம். மேலோட்டமா பாக்கிறப்ப நித்தியமா தோணினாலும் என்னிக்கோ ஒரு நாள் அழிஞ்சு போயிடும்.

நம்ம மனசு என்ன சொல்லுதோ அததான் பாக்கிறோம். இதோ இந்த இலை பச்சையா இருக்கு இல்லை?

ஆமாம்.

இத நான் பார்கிற மாதிரி நீங்க பாக்கிறீங்கன்னு என்ன நிச்சயம்?

அட, இது பச்சைன்னு நீங்க சொன்னீங்க, நானும் அததான சொல்றேன்?

சரிதான்! நான் கேட்டது அது இல்லியே. உங்களுக்கு விவரம் தெரிஞ்சதுலேந்து இலைய காட்டி இது பச்சைன்னு சொல்லி இருக்காங்க. அதனால நீங்க இது பச்சைன்னு சொல்லிட்டீங்க. ஆனா நான் பாக்கிறா மாதிரியே நீங்க பாக்கிறீங்களா? நான் சிவப்பா பாக்கிறா மாதிரி பாத்துக்கிட்டே நீங்க இது பச்சைன்னு சொல்லலாம். ஏன்னா அப்படிதானே சொல்லி கொடுத்து இருக்காங்க?

பின்ன உங்க மனசுக்குள்ள பூந்தா நீங்க பாக்கிறத நான் பாக்க முடியும்?

அதேதான். ஆக நாம் மனசு சொல்லறத நம்பறோம். அது சரியா இருக்கனும்னு அவசியம் இல்லை.

இப்ப இந்த குடத்த ஒரு புவியியல் நிபுணர் கிட்ட காட்டறோம். அவர் அதை பாத்தா இது இந்த மண்ணு, கல்லு இல்லாத சுத்தமான மண், வலுவானதுன்னு ஏதாவது சொல்லுவார். வீட்டு அம்மாகிட்டே காட்டினா பானை பரவாயில்ல. வெய்யிலுக்கு தண்ணி பிடிச்சு வைக்கலாம்ன்னு சொல்வாங்க. மண்ணை பாக்கிறவங்க பானையை பாக்கிறதில்லை. பானையை பாக்கிறவங்க மண்ணை பாக்கிறதில்லை.

இந்த பிரம்மம்தான் இந்த பிரபஞ்சமா உருவெடுத்து இருக்கு. மண்ணு குடமானா மாதிரி. குடம்ன்னு சொல்றா மாதிரி இது உலகம்ன்னு நினைக்கிறவங்கதான் ஏறக்குறைய எல்லாரும். குடத்தை மண்ணுன்னு சொல்றா மாதிரி அதை பிரம்மம்னு தெரிஞ்சுகிறவங்க தன்னை புரிஞ்சுகிட்டவங்க. இதுதான் ஞான யோகம்.

அது எப்படி தெரியவரும்?

விசாரிச்சுதான் தெரியவரும்.

விசாரணைனா?

"நான் யார்? இந்த உலகம் என்னது? இது எப்படி வந்தது?” என்ற விசாரணை.
இப்ப இது போதும். இந்த விசாரணையை விரிவா அப்புறமா பாக்கலாம்.

இந்த ஞானம் வருவது எப்படின்னு கேட்டால் அதற்கு பாதை போட்டு வச்சு இருக்கிறாங்க நம் முன்னோர்கள்.
அதுக்கு சாதனா சதுஷ்டயம் ன்னு பேர். பயப்படாதீங்க.
சாதனை என்கிற வார்த்தை தெரிஞ்சதுதான். சதுஷ்டயம்னா நான்கு. நாலு படிகள். அவ்வளவுதான்.
அதெல்லாம் என்ன?


23 comments:

ambi said...

ரொம்ப எளிமையா கீதா சாரத்தை சொல்லி இருக்கீங்க.

அஹம் பிரம்மாஸ்மினு சொல்லலாமா? :))

அடுத்த வழிக்கு வெய்டீஸ்.

நேற்று இங்கு(கர்நாடகா) யுகாதி என்பதால் விடுமுறை.

விடுமுறைல வீட்ல நெட் அதிகம் பாக்கறதில்லை(பாக்க விடறதில்லை, ஹிஹி) :)

அதனால் முந்தின பாகத்தை இப்ப தான் படிச்சேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

திவா சார்,

சூப்பர், என்னை போல டம்மீகளுக்கு புரியும்படி எழுதியிருக்கீங்க... :)

படித்தவுடன் என்னையறியாமல் திருமுலர் சொன்னது ஞாபகம் வந்தது.

jeevagv said...

விளக்கங்கள் நன்றாக இருந்தது!
/மண்ணை பாக்கிறவங்க பானையை பாக்கிறதில்லை. பானையை பாக்கிறவங்க மண்ணை பாக்கிறதில்லை.//
இதைக் கேட்டவுடன், ஜப்பானில் இருக்கு நாய் சிலையும் - கல்லைக்கண்டால் நாயைக் காணேம், நாயைக்கண்டால் கல்லைக்காணேம் என்னும் மொழியும் ஞாபகம் வந்தது!

jeevagv said...

விசாரணைனா?, யாரை விசாரிக்கறது?
:-)

திவாண்ணா said...

@ அம்பி
உலகத்துலே 97.428% ஆபீஸ் நேரத்துலதான் பதிவு படிக்கிறாங்க எழுதறாங்கன்னு புள்ளி விவரம் சொல்லுதாம்.
அப்புறம் என்ன?
@மௌலி
திருமூலரை படிக்காத என்னைப்போன்ற டம்மீஸ்ஸுக்கு அவர் என்ன சொன்னது நினைவு வந்ததுன்னு எழுதினா நல்லது!

தென்றல்sankar said...

super sir.thanks for visit to my blog!

திவாண்ணா said...

வாங்க சங்கர்! உங்க ப்ளாக்ல ரொம்ப பிடிச்சது நீங்க சுருக்கமா எழுதறது. ஒரு நிமிஷத்துல ஒரு கருத்தை புரிய வைக்கிறதுன்னு ஒரு கான்செப்ட்! அதை நல்லா செய்யறீங்க. வாழ்த்துக்கள்!

திவாண்ணா said...

@ ஜீவா, எப்படியோ உங்கள் பின்னூட்டங்கள் பார்வைக்கு நேற்று வரவில்லை. மன்னிக்கவும்.
1. ஜப்பான் நாய் சிலையா? கொஞ்சம் சொல்லுங்களேன். அல்லது சுட்டி கொடுங்க.
2.விசாரணை: நாமேதான் நம்மையேதான் விசாரிக்கணும். விசாரணை என்கிற சொல் இங்கே வழக்கம் போல பயன்படவில்லை. சிந்தனை என்கிற அர்த்தத்தில்தான் எடுத்துக்கொள்ளனும்.

ambi said...

//என்னை போல டம்மீகளுக்கு புரியும்படி எழுதியிருக்கீங்க//

@M'pathi anna, யப்பா! எனக்கு இப்பவே கண்ண கட்டுது. :D

@diva sir, சரி, ஆபிஸ்ல படிக்கறேன், அதுக்காக இப்படி விஜயகாந்த் மாதிரி புள்ளி விவரம் எல்லாம் எடுத்து விடனுமா? :))

திவாண்ணா said...

@ அம்பி
அவரும் என்ன மாதிரி சும்மாதான் புள்ளிவிவரம் உடறாரா?
:-))
பதிவுகள் திங்கள் முதல் வெள்ளி வரை ன்னு சீரியல் கணக்கா மாத்தலாமா ன்னு பாக்கிறேன்

jeevagv said...

Sorry திவா, விளக்காமல், அரைகுறையா மறுமொழிந்திட்டேன்...!

@1 - ஜப்பான் நாய் சிலை: டோக்யோ நகரில் ஒரு நாய் தன் எஜமானருக்கு மிகவும் விசுவாசமாய் இருந்ததாம். தினமும் அவர் வேலைகக்கு செல்லும்போது அவருக்கு துணையாக இரயில் நிறுத்தம் வரை அந்த நாயும் வருமாம். அவர் திரும்பி வரும் போதும் கூட, அந்த நாய் தன் வாலைக் குழைத்துக்கொண்டு அவருக்காக காத்திருக்குமாம். திடீரென ஒருநாள் அந்த எஜமானர் வேலை செய்த இடத்திலேயே இறந்து போனார். எனினும் அடுத்த பத்து வருடங்களுக்கு அவருக்க அந்த நாய் அந்த
இரயில் நிலையத்திலேயே காத்திருந்ததாம் - அதுவும் கடைசியில் இறக்கும் வரை. இரயில் நிறுத்தத்திற்கு வந்து போகும் நபர்களுக்கு தினமும் இந்தக் காட்சி வாடிக்கை. அதன் விசுவாசத்தினை மெச்சிய டோக்கியோ நகர் வாசிகள், நாய் இறந்த இடத்தில் அதற்காக பெரியதொரு சிலையை நிறுவினார்கள்! - இதுதான் அந்தக் கதை.
நாய் சிலையும் தத்ரூபமாக இருக்கும் - இப்போது இதனுடன் நமது மொழியையும் சேர்த்து வைத்துப் பார்க்கவும்.
@2 - விசாரணை - சரியான சொல்தான் - ஆன்ம விசாரணை என்று இரமணர் சொல்லுவார்.
Self enquiry

திவாண்ணா said...

ஓ ஜீவா, இந்த கதையை முன்னேயே கேட்டு இருக்கிறேன். சட்டென அதை தொடர்பு படுத்தி பார்க்கவில்லை.
தொடுப்புக்கு நன்றி! ஜப்பான் டைம்ஸ் அதை தொடர்பு படுத்தி திருட்டு போனதாக ஏப்ரல் ஃபூல் ஜோக் செய்ததும் அதில் உள்ள சுவையான செய்தி. ஹாசிகோ அவ்வளவு தூரம் மக்கள் மனதில் பதிந்து இருக்கு!

விசாரணை பத்தி விசாரணை முடிந்தது! நல்லது.
:-)

Geetha Sambasivam said...

//What is real? How do you define real? If you are talking about what you can feel, what you can smell, what you can taste and see they are simply electrical signals interpreted by your brain!//

இதுக்குப் பதில் சொல்லவே இல்லையே, எங்கே வருதுனு? யாருக்கும் தெரியலை, அதான் யாரும் கண்டுக்கலைனு நினைக்கிறேன்! :))))

படிப்படியாகப் போகிறீர்கள், நன்றாகப் புரியும்படியான கோணத்திலேயும் இருக்கிறது. வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

திருமூலரை படிக்காத என்னைப்போன்ற டம்மீஸ்ஸுக்கு அவர் என்ன சொன்னது நினைவு வந்ததுன்னு எழுதினா நல்லது!
www.thevaaram.org போனால் பத்தாம் திருமுறையாகத் திருமூலரின் திருமந்திரம் உரையுடனேயே கிடைக்கும். தேவையான நேரத்தில் ஜி3 செய்து போடலாம்! :)))))

திவாண்ணா said...

//இதுக்குப் பதில் சொல்லவே இல்லையே, எங்கே வருதுனு? யாருக்கும் தெரியலை, அதான் யாரும் கண்டுக்கலைனு நினைக்கிறேன்! :))))
/
அதானே! இன்னும் 2 நாள் கொடுக்கலாமா?

பாராட்டுகளுக்கு நன்னி!

திவாண்ணா said...

/www.thevaaram.org போனால் பத்தாம் திருமுறையாகத் திருமூலரின் திருமந்திரம் உரையுடனேயே கிடைக்கும். தேவையான நேரத்தில் ஜி3 செய்து போடலாம்! :)))))//
இதை யாருக்கு சொல்லறீங்க? மதுரையம்பதிக்கா எனக்கா?
:-)

Geetha Sambasivam said...

திருமந்திரம் படிச்சதில்லைனு சொன்னது நீங்க தானே? உங்களுக்குத் தான் கொடுத்தேன்! :P
படிங்க, டெஸ்ட் கொடுப்பேன்! :)

திவாண்ணா said...

போச்சுடா! மௌலிக்கு ஏதோ ஞாபகம் வந்தா நானா பொறுப்பு? முடிந்தவரை G3 எல்லாம் செய்யமாட்டேன். புரிஞ்சு கொண்டதைதான் எழுதுவேன்.

Geetha Sambasivam said...

//முடிந்தவரை G3 எல்லாம் செய்யமாட்டேன். புரிஞ்சு கொண்டதைதான் எழுதுவேன்.//

ம்ம்ம்ம்ம்??? பாடல் எல்லாம் திருமூலர் ஏற்கெனவே எழுதி வச்சுட்டாரே? அதை எப்படிப் புரிஞ்சுட்டு எழுதுவீங்க?
க்ர்ர்ர்ர்ர்ர்., நான் திருமந்திரப் பாடல் இந்தப் பதிவுக்குப் பொருத்தமானதை ஜி3 செய்து போடலாம்னு சொன்னேன்! :P

திவாண்ணா said...

அக்கா நான் திருமூலர் படிச்சதில்லை. அதனால கொடேஷன் போட இயலாது. பொருத்தமானதை தெரிஞ்சவங்க பின்னூட்டமாக போடலாமே!

Geetha Sambasivam said...

ஐந்தாம் தந்திரம் ஞானம், பாடல் எண் 7, அத்தியாயம் 8




ஞானிக் குடன்குணம் ஞானத்தில் நான்குமாம்
மோனிக் கிவைஒன்றும் கூடா முன் மோகித்து
மேனிற்ற லால்சத்தி வித்தை விளைத்திடும்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே.

பொழிப்புரை :
ஞானத்தைத் தலைப்பட்டவனுக்கு, ஞானத்திற் சரியை முதலிய நான்கு படிகள் உள்ளன. நான்காவது படியிற் சென்று முற்றிய மௌன எல்லையை அடைந்தவனுக்குப் பின் இவை என்றும் வேண்டாவாம். ஞானத்தைத் தலைப்படுதற்குமுன் யோகத்தையே `ஞானம்` என மயங்கிச் சத்தி மண்டலத்திலே நின்று, அங்குள்ள சத்தியைத் தரிசித்தோர்க்கு அந்தச்சத்தி ஞானத்தைத் தருதலாகிய பயனைத்தரும். அதற்குக் கீழ் உள்ள ஆறு ஆதார சத்திகளை அடைந்தவர்கட்குக் கிடைக்கும் பயன் யோகத்தில் சரியை, யோகத்தில் கிரியை என்பனவேயாம்.

குறிப்புரை :
`ஆறு ஆதாரங்களிற் பெறுவன யோகத்தில் சரியையும், யோகத்தில் கிரியையும்` எனவே, `ஏழாந் தானமாகிய சகத்திராரத்தில் நிற்போர்க்கு விளைவது யோகத்தில் `யோகம்` என்பதுபோந்தது. குணம் - இயல்பு. வித்தை - ஞானம். தானி - ஆதாரசத்தி `குலத் தோர்க்கு` என்னும் நான்கனுருபு தொகுத்தல் பல ஆதாரங்களிலும் விளங்குவது ஒரு சத்தியேயாதல்பற்றி ஒருமையாற் கூறினார். `கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல்` என்னும் நான்குமே ஞானத்திற் சரியை முதலிய நான்கு என்க. நிட்டை கூடினவனையே ``மோனி`` என்றார்.
இதனால், யோக முதிர்ச்சி யுடையோன், பின் ஞானத்தில் சென்று அதன் நான்கு படிகளில் ஏறுதல் கூறப்பட்டது.



பாடல் எண் : 9


நண்ணிய ஞானத்தில் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவம் கடந்த பிணக்கற்றோன்
கண்ணிய நேயம் கரைஞானம் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே.


பொழிப்புரை :
ஞானத்தில் ஞானம் முதலியவற்றை அடைவோன், முதற்கண் வினைக்கட்டு அற்றவனாயும், இரண்டாவது சிவஞானத் தால் ஞேயமாகிய சிவத்தைத் தரிசித்தவனாயும், மூன்றாவது மும் மலங்களின் வாசனையும் நீங்கிய நின்மலனாயும், முடிவில் சிவனை அனுபவமாய்ப் பெறுதலாகிய முத்தியை அடைந்த, முடிந்த பேறுடையவனாயும் விளங்குவன்.

குறிப்புரை :
ஞானாதி நண்ணுவோனது தன்மையைக் கீழிருந்து கூறும் முறையாற் கூறினார். இந்நான்கு அனுபவங்களும் கேட்டல் முதலிய நான்கினாலும் நிகழ்வனவாதல் அறிக. வினைக்கட்டு நீங்கினமைகூறவே, அதற்குப் பற்றுக்கோடாகிய மாயைக்கட்டு நீங்கினமையும் தானே பெறப்பட்டது. கண்ணல் - கருதல். கரை ஞானம் - மேல் எல்லையாகிய ஞானம். `கரை ஞானத்தால்` என உருபு விரிக்க. திண்மை வாதனை காரணமாக அசைதல் இன்மை. `உறைப்பு` என்றபடி. சித்தன் - சித்திக்கப் பெற்றவன்.
இதனால், மேற்கூறிய நான்கு படிகளிலும் நிகழும் அனுபவங்கள் கூறப்பட்டன.

குமரன் (Kumaran) said...

உபாதான காரணத்தைப் பற்றி நன்கு விளக்கியிருக்கிறீர்கள் அண்ணா. மாயை என்றால் பொய் என்று பொருள் இல்லை; நிரந்தரமில்லாதது என்று தான் பொருள் என்பதையும் நன்கு விளக்கியிருக்கிறீர்கள்.

நான்கு படிகளைப் பற்றி அடுத்துப் படிக்கிறேன்.

திவாண்ணா said...

//உபாதான காரணத்தைப் பற்றி நன்கு விளக்கியிருக்கிறீர்கள் அண்ணா. .//

ம்ம்ம்! குமரன் நிறையவே தெரிந்து வைத்து இருக்கிறார். அவருக்கு இந்த பதிவுகள் எல்லாம் ஒரு மீள்பார்வைன்னு நினைக்கிறேன். :-))