What is real? How do you define real? If you are talking about what you can feel, what you can smell, what you can taste and see they are simply electrical signals interpreted by your brain!
அடுத்து ஞான வழி
மனசை சுத்தமாக்கி கட்டுப்படுத்தி, மனசாலேயே விசாரிக்க ஆரம்பிச்சு, “நான் ஏது, பார்கிற இந்த உலகம் ஏது” ன்னு யோசிச்சு நாம் இல்லைங்கிறதை எல்லாம் தள்ளி தள்ளி கடைசில மிஞ்சி நிக்கிறதை நாம் அப்பிடின்னு அறிகிறது ஞான வழி.
சுருக்கமா நாம் பார்கிற உலகம் மாயை; நாம் பிரம்மம்; பிரம்மம்தான் எல்லாமே.
இது புரிய கொஞ்சம் சிரமப்படனும்.
என்னங்க ஒரேயடியா இப்படி ஒரு போடு போட்டுட்டீங்க? இதோ என் கண்ணுக்கு முன்னால தெரியறது எல்லாம் மாயைனா எப்படி ஒத்துக்கிறது?
சரி நம்ம கண் முன்னால தெரியறது எல்லாம் உண்மையான உண்மையான்னு பாக்கலாம்.
பின்ன பொய்யான உண்மையாவா இருக்கும்?
அட சரியா சொல்லிட்டீங்களே
கிண்டலா?
இல்ல, இல்ல, உண்மை பொய்யான உண்மை, பொதுவான உண்மை, உண்மையான உண்மைன்னு மூன்று வகை.
இத எங்கியோ கேட்ட மாதிரி இருக்கே
நீங்க சொல்லறது உண்மையான உண்மை. இப்ப நான் சொல்லறது எதுவும் புதுசு இல்ல. நம்ம பெரியவங்க சொல்லி வெச்சதுதான்.
சின்ன உதாரணம் பாக்கலாம். இப்ப ராத்திரி. நாம மொட்ட மாடில உக்காந்துகிட்டு இருக்கோம். கொஞ்சம் மேல பாருங்க. என்ன தெரியுது?
மேல ஆகாயம். நட்சத்திரமெல்லாம் தெரியுது.
அதோ அங்க ...
அது ஓரியன் நட்சத்திர கூட்டம்.
நடுவில?
மூனு நட்சத்திரங்க பக்கத்து பக்கத்துல இருக்கு.
பக்கத்து பக்கத்திலதானே?
ஆமாம்.
நாம பாக்கற இந்த நட்சத்திரங்க எல்லாம் இப்ப அங்கங்க அப்பிடியே இருக்கா?
ஆமாம். என்ன சந்தேகம்?
அறிவியல் இல்லைன்னு சொல்லுது.
எப்படி?
இப்ப நாம பாத்த ஓரியன் ரொம்ப தூரத்தில இருக்கு.
அத்தான் தெரியுமே.
ஓஹோ, எவ்வளோ தூரம்?
அதானே தெரியாது.
1500 ஒளி வருஷம்.
என்னங்க தூரத்தை கேட்டா வருஷங்கிறீங்க?
ம்ம்ம்...அதாவது சூரியன் எங்கே இருக்கு?
ஓ, அது ரொம்ப தூரம்.
சூரியன்கிட்டேந்து ஒரு ஒளி கத்தை கிளம்பினா அது பூமிக்கு 8 நிமிஷம் 18 வினாடில வந்து சேந்துடும்.
ம்ம்ம்ம்ம்.....சரிதான்.
அப்ப இப்ப பாக்கிற சூரியன் இப்ப அங்கே இல்லை. எட்டு நிமிஷம் முன்னால அங்கே இருந்தது.
அதே போல ரொம்ப தூரமா போனா ஒளி வர ஒரு மணி ஆகலாம் இல்லையா? அதே போல ஒரு ஒரு நாள்? ஒரு வருஷம்?
யப்பா! நினச்சு பாக்கவே முடியலையே! அது ரொம்ப ரொம்ப தூரமாச்சே!
அது சும்மா ஜுஜுபி. அந்த தூரத்த ஒரு ஒளி வருஷம்ன்னு சொல்வாங்க. நாம பேசறது 1500 ஒளி வருஷம். அதாவது இங்கே 1500 வருஷத்துக்கு முன் இருந்ததைதான் நாம இப்ப பாக்கிறோம்.
யம்மாடி!
அதாவது 1500 வருசங்க முன்னாடி இருந்தபடி இருந்த இடத்திலே அந்த நட்சத்திரத்த பாக்கிறோம். அது இப்ப இருக்கா வெடிச்சு சிதறியாச்சான்னு நமக்கு தெரியாது.
அப்ப நாம பாக்கிற ஆகாயம் ஒரு கலவையான சித்திரம். கோடிக்கணக்கான மைல் தூரத்துல நட்சத்திரம் இருக்கு. நமக்கு பக்கத்து பக்கத்துல இருகிறதா தெரியற இன்னொரு நட்சத்திரம் உண்மைல அது பக்கத்திலேயே இல்லை. பல கோடி மைல் இடை வெளில இருக்கு. நட்சத்திரங்கள்கிட்டேந்து வர ஒளிக்கத்தைகள்தான் பக்கத்து பக்கத்துல இருக்கு. சரியா?
சரியா சொன்னீங்க. ஆனா இப்ப நாம பாக்கிறது ஆகாயம். அதுல இங்க இங்க இன்ன இன்ன நட்சத்திரம் இருக்குன்னு சொல்கிறது எல்லாம் பொதுவான உண்மை. ஆராய்ஞ்சு பாத்தா உண்மை இல்லாட்டாலும் பொதுவா அதை தப்பா சொல்லறது இல்லே.
அது போலதான் இந்த உலகம். இந்த உலகம் இருக்குன்னு சொல்லறது பொதுவான உண்மை. ஆனாலும் அது உண்மையான உண்மை இல்ல.
சரி, ஒத்துக்கிறேன். ஆனா இதெல்லாம் மாயை; இல்லவே இல்லைங்கிறதை எப்படி ஒத்துக்கிறது?
மாயைனா இல்லவே இல்லைன்னு அர்த்தமில்ல.
போச்சுடா! பின்ன?
[மேலே ஆரம்பத்துல இருக்கிற மேற்கோள் எங்க வருதுன்னு சொல்ல முடியுமா?]
7 comments:
//சூரியன்கிட்டேந்து ஒரு ஒளி கத்தை கிளம்பினா அது பூமிக்கு 8 நிமிஷம் 18 வினாடில வந்து சேந்துடும்//
எனக்கு தெரியாத தகவல். நன்றி.
திவா சார், இந்த பதிவு, இதற்கடுத்த பதிவு ரெண்டுமே நன்றாக வந்திருக்கு...மற்றதையும் படிக்கிறேன்.
@முதுரையம்பதி,
நன்னி!
பாடல் எண் : 2
ஐந்தாம் தந்திரம் 8-ம் அத்தியாயம் பாடல் எண் 2.
சத்தமும் சத்த மனமும் தகுமனம்
உய்த்த உணர்வும் உணர்த்தும் அகந்தையும்
சித்தம்என் றிம்மூன்றும் சிந்திக்கும் செய்கையும்
சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே.
பொழிப்புரை :
ஓசை முதலிய புலன் வகைகளும், அவற்றைப் பொறிகளின் வழிச்சென்று பற்றுகின்ற மனமும், பின்பு அம்மனம் பொதுப்படப்பற்றி ஐயுற்றதை ஒருதலையாகத் துணியும் புத்தியும், எவ்விடத்தும் எழுச்சியுற்று எவ்வுணர்வையும் உணரத் தூண்டுகின்ற அகங்காரமும். அம்மூன்றானும் பெற்ற தெளிவுணர்வைப் பதியக் கொண்டு பின்னும் நினைப்பதாகிய சித்தமும் என்னும் இவற்றினது இயல்பை நன்குணர்தலே ஓசை முதலிய ஐம்புலன்களையும் கடந்த ஞானிகள் பெற்ற ஞானமாகும்.
குறிப்புரை :
ஓசை முதலிய புலன்களே காரண நிலையில் தன் மாத்திரைகளாய் நின்று ஆகாயம் முதலிய பூதங்களைத் தோற்று வித்தலாலும், பின்னும் தன்மாத்திரையாய் ஐம்பூதங்களோடும் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களுக்குத் துணையாய் நின்று அவை தத்தம் காரியங்களைச் செய்ய உதவுதலாலும், `ஞானேந்திரியம், கன்மேந்திரியம், மாபூதம்` என்பவற்றையும் `புலன்வகை` என அடக்கினார். எவ்விடத்தும் ``சத்தம்`` என்றது, ஏனைப் பரிசம் முதலிய வற்றிற்கு உபலக்கணம். அஃது அதன் வகையை உணர்த்திற்று. ஆகவே, `புலன் வகை` என்றதனால், `பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து` ஆக இருபது கூறப் பட்டனவாம். இவற்றோடே மனம் முதலிய அந்தக் கரணங்கள் நான்கும் கூறப்பட்டமையால், சிவாகமங்களில் `ஆன்ம தத்துவம்` என எண்ணப்படும் இருபத்து நான்கு தத்துவங்களும் கூறப்பட்டதாயிற்று. சிறிது சிறிது வேறுபாட்டோடே இவை வைதிக சமயங்கள் எல்லா வற்றாலும் உணரப்பட்டன. ஆதலின், இவற்றது இயல்பை உணரும் ஞானத்தையே தத்துவஞானமாக ஓதினார். ``சுவைஒளி ஊறோை\\u2970?`` என்னும் திருக்குறளையும் நோக்குக 1வைதிக சமயங்களின்வழியும், அவற்றிற்கு ஒத்த அளவில் சைவாகமங்களின் வழியும் இவற்றின் இயல்பை உணர்ந்த பின்பு, சைவாகமம் பற்றியே சிறப்பாக உணரத் தக்க வித்தியா தத்துவ சிவ தத்துவங்களின் இயல்பை விரைய உணர்வர் என்பது கருத்து. வித்தியா தத்துவம், `காலம், நியதி` கலை, வித்தை, அராகம், புருடன், மாயை` என ஏழு. சிவதத்துவம், `சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி, சிவம்` என ஐந்து, ஆக, `தத்துவம் முப்பத்தாறு` என்பது சைவாகமங்களின் முடிபு. இவற்றின் இயல் பெல்லாம் அவ் ஆகமங்களிலும், அவற்றை முதலாகக் கொண் டெழுந்த பிரகரணங்களிலும், மெய்கண்ட சாத்திரம் முதலிய சித்தாந்த நூல்களிலும் காணப்படுகின்றன.
சிவ தத்துவம் ஐந்தும் ஏனைத் தத்துவங்களை இயக்கிநிற்கும் முறையால் ஆன்மாவிற்கு உதவுவன அன்றி, அவை ஏனைத் தத்துவங்கள்போல் ஆன்மாவிற்குநேரே உடம்பாய்ப்பொருந்தி நின்று உதவுவன அல்ல. வித்தியா தத்துவங்கள் ஆன்மாவின் அறி விச்சை செயல்கள் வெளிப்படுதற்குக் காரணமாய், அதனோடு ஒட்டி ஒன்றாய் நின்று ஆன்மாவை ஆன்மாவாகச் செய்யும் இயல்புடைமையால் அவை அனைத்தையுமே `புருடன்` என ஒன்றாக வைத்து, தத்துவங்களை, `இருபத்தைந்து` என்றே கூறுதலும் உண்டு.
``ஐயஞ்சின் அப்புறத் தானும், ஆரூ ரமர்ந்தஅம் மானே``1
என்ற திருநாவுக்கரசர் திருமொழி இம்முறைபற்றி எழுந்ததே. தத்துவங்கள் மாயையின் காரியங்களாம். அவற்றின் இயல்பை ஆராய்ந்து உணரவே அவற்றினின்றும் நீங்குதல் உளதாம் என்க. தொகுத்தல் பெற்ற அகரத்தை விரித்து, `சித்தம் என்ற செய்கையும்` என இயைக்க. செய்கையுடையதனை, ``செய்கை`` என்றார்.
இதனால், தத்துவங்களை ஆராய்ந்து உணர்தல் ஞானமாதல் கூறப்பட்டது.
வாவ். அருமை திவா அண்ணா. இன்றைய அறிவியல் எதனை உண்மை என்று விளக்கிக் கூறுகிறதோ அதனைக் கொண்டு தத்துவத்தை விளக்குவது இக்காலத்திற்கு மிகவும் பொருத்தமானது. அருமை. பல வருடங்களாக அறிவியலைப் படித்து இப்போது தான் இந்த விண்மீன்கள், அவை இருக்கும் தொலைவு, ஒளி வருடங்கள் போன்றவற்றைப் பற்றி எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறேன். இங்கே மிக நன்றாக அவற்றைப் பற்றி விளக்கியிருக்கிறீர்கள்.
நன்றி குமரன்!
யப்பா..தலையை சுத்துது !
என்ன எந்திரன்? இதுக்கே இப்படிச்சொன்னா எப்படி? :-))
கவலைப்படாதீங்க. கண்ணோட்டம் மாறினா எல்லாம் புரியும்!
Post a Comment