Pages

Tuesday, April 29, 2008

பக்தர்கள் விலக்க வேண்டியவை


இப்படி செய்கிற காரியங்கள் இயல்பாவே தர்மத்துக்கு புறம்பா இல்லாம நல்ல பலன் கொடுக்கிறதா அமைந்திடும் அப்படின்னு நாரதர் சொல்றார்.


ஸ்திரீ தன நாஸ்திக வைரீ சரித்திரம் ந ஸ்ரவணீயம்


என்கிறார் நாரதர்.

அதாவது பெண்கள், பணம், நாத்திகன், விரோதி இவர்களைப்பற்றிய கதைகளையும் வர்ணனைகளையும் கேக்காதேன்னு நாரதர் சொல்கிறார். இதனால் பெண்களைப்பற்றி இழிவா சொன்னதா அர்த்தம் இல்லை. ஆண்- பெண்கள் நடுவே இருக்கிற ஈர்ப்பைதான் அவர் சொல்கிறார். அப்ப பெண்கள் இதை படிக்கிறப்ப ஆண்கள் பத்திய வர்ணனைன்னு படிச்சுக்கணும்.
அப்படிப்பட்டவை காமத்தை தூண்டும். காமம் காட்டுத்தீ போல வலிமையானது, கொடியது. விட்டா மனிதனை அணுஅணுவா எரிச்சு மன ஆற்றல்களையும் ஆன்ம பலத்தையும் உ றிஞ்சிடும். சாதகர்கள் பலர் ஆண்டவன் வைக்கிற இந்த பரீட்சையில்தான் தோத்து போயிடுவாங்க. விஸ்வா மித்திரர் பட்ட பாடுதான் தெரியுமே. எப்படிப்பட்ட தபஸ் என்னவாச்சு? பெரிய பெரிய ஞானிகளைக்கூட கண நேரத்தில நிலை தடுமாற வைக்கிற சக்தி இதுக்கு இருக்கு.

அதனால சாதனைல இருக்கிறவர் சமூகத்தில வாழந்து செயல்பட்டு வரும் போது இந்த அபாயம் குறித்து விழிப்போட இருக்கனும்.

நாரீஸ்தன பர நாபி தேசம் த்ருஷ்ட்வா மாகா மோஹாவேசம்

ஏதன் மாம்ஸவ சாதி விகாரம் மனசிவிசின்தய வாரம் வாரம்


சங்கரர் பஜகோவிந்தத்துல எச்சரிக்கிறார்.


செல்வம் இன்னொரு கவர்ச்சி. இது போகம் என்கிற அனுபவிக்கிறதுல தூண்டுதல் உண்டாக்கும். சாதனை சலித்துப்போகும். ஆன்மீகத்தில் முன்னேற்றம் தடை படும். புலன்கள் இச்சைக்கு தீனி போடும். மன நிறைவு வராது. மேலும் மேலும் செல்வம் சேக்கணும் என்கிற நினைப்பு வந்திடும். இதனால சம நிலை போய் சாந்தி போயிடும்.


அப்படின்னா பணமே வேண்டாம்னு அர்த்தமா?

அப்படி இல்லை. அதை தேடி ஓடாம நாம இருக்கிற வேலைல நம்ம கர்ம வசத்தால் என்ன கிடைக்குதோ அதுல நிறைவா இருக்கப்பாக்கணும்.

யல்லபதே நிஜகர்மோ பாத்தம் வித்தம்

தேன வினோதய சித்தம்


சங்கரர்தான் திருப்பியும்.

நாத்திகர் பத்தி காதுல போட்டுக்காதேன்னு அடுத்து சொல்கிறார்.

அது இயல்பாகவே உலக வாழக்கைல பற்று உண்டாக்குவது. சாதனைல இறங்கும் முன்னால எவ்வளோ வேணா யோசிக்கலாம். தீர்மானம் செஞ்சு இறங்கிட்டு அப்புறம் திருப்பியும் இந்த விசாரணைல இறங்கினா குழப்பம்தான் மிஞ்சும்.


அடுத்து அபிமானம் என்கிற அகந்தை.


9 comments:

ambi said...

//அதை தேடி ஓடாம நாம இருக்கிற வேலைல நம்ம கர்ம வசத்தால் என்ன கிடைக்குதோ அதுல நிறைவா இருக்கப்பாக்கணும்.
//

அக்க்ஷர லட்சம் பெரும் வார்த்தைகள். :)

துளசி கோபால் said...

//ஆன்ம பலத்தையும் உரிஞ்சிடும்.//

உறிஞ்சிடும்.

படிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன் இந்தப் பதிவுகளை.

திவாண்ணா said...

//அக்க்ஷர லட்சம் பெரும் வார்த்தைகள். :)//

அம்பி துளசி டீச்சர் படிச்சிட்டு இருக்காங்கன்னு மட்டும் சொல்லி வைக்கிறேன்! தப்பிக்க வழி இருந்தாலும்.....
:-))

@ துளசி அக்கா.
சரி பண்ணிட்டேன். இன்னொரு ஆனை ரெடி செய்யணும் போல இருக்கே!
:-)

Geetha Sambasivam said...

//நாத்திகர் பத்தி காதுல போட்டுக்காதேன்னு அடுத்து சொல்கிறார்.//

இது தவிர்க்க முடியாதுனு தோணுது! :((((((

திவாண்ணா said...

ம்ம்ம்ம்ம்ம்ம்

என்ன செய்கிறது? பலவிஷயங்கள் சிரமசாத்தியமே!
சொல்ல வந்தது நாத்திகர் பற்றிய வாழ்க்கை வரலாறு போன்றவை படிக்க வேண்டாம். அவர்களோட வாதங்களை படிக்க வேண்டாம். அதெல்லாம் ஆன்மீகத்துல இறங்குகிறத்துக்கு முன்னால இருக்கலாம். அப்புறமா வந்தா வீண்குழப்பம்தான்வரும்.

Geetha Sambasivam said...

//அவர்களோட வாதங்களை படிக்க வேண்டாம். அதெல்லாம் ஆன்மீகத்துல இறங்குகிறத்துக்கு முன்னால இருக்கலாம். அப்புறமா வந்தா வீண்குழப்பம்தான்வரும்.//

அவங்க வாதத்தைப் படிச்சுட்டு மாறுவோம்னா நினைக்கறீங்க? நம்ம கொள்கையிலே நமக்குப் பிடிப்பும், உறுதியும் இருந்தால் எதைப் படிச்சாலும் மாற மாட்டோம், இன்னும் சொல்லப் போனால் அதிலிருந்து நம் கொள்கையின் உண்மையான அர்த்தங்கள் இன்னும் தேடிக் கண்டுபிடிக்கவும் வசதியாய் இருக்காது? அதன் உண்மையும் புரியாது? இந்தக் கோணத்தில் பாருங்க!

மெளலி (மதுரையம்பதி) said...

//சாதனைல இறங்கும் முன்னால எவ்வளோ வேணா யோசிக்கலாம். தீர்மானம் செஞ்சு இறங்கிட்டு அப்புறம் திருப்பியும் இந்த விசாரணைல இறங்கினா குழப்பம்தான் மிஞ்சும்.//

உண்மைதான்....

Geetha Sambasivam said...

சங்கரர்தான் திருப்பியும்.

நாத்திகர் பத்தி காதுல போட்டுக்காதேன்னு அடுத்து சொல்கிறார்.

ம்ம்ம்ம்ம்??????? பார்க்கணும்! பார்க்கிறேன், அப்புறம் வந்து பேசறேன்.

திவாண்ணா said...

//அவங்க வாதத்தைப் படிச்சுட்டு மாறுவோம்னா நினைக்கறீங்க? நம்ம கொள்கையிலே நமக்குப் பிடிப்பும், உறுதியும் இருந்தால் எதைப் படிச்சாலும் மாற மாட்டோம், இன்னும் சொல்லப் போனால் அதிலிருந்து நம் கொள்கையின் உண்மையான அர்த்தங்கள் இன்னும் தேடிக் கண்டுபிடிக்கவும் வசதியாய் இருக்காது? அதன் உண்மையும் புரியாது? இந்தக் கோணத்தில் பாருங்க!//
ரொம்ப சரி.
இது நல்ல உறுதி வந்த பிறகுதான்.
அது வரை ஜாக்கிரதை தேவைதானே?
மனித மனம் விசித்திரமானது. எப்போ எப்படி திரும்பும்னு சொல்ல முடியாது. மனம் வசப்பட்டு விட்டா எல்லாம் சரிதான். அது அவ்வளோ எளிதா நடக்காதே! கூனி உபதேசம் கேட்டு கைகேயி மனசு மாறலையா? அது வரை ராமனுக்கு பட்டாபிஷேகம்னு சந்தோஷமாதானே இருந்தா?
பக்தி யோகம் பெரும்பாலும் புத்தி பூர்வமா ஆராய்ச்சி செய்ய முடியாதவங்களுக்கு என்பதையும் நினைவுல வெச்சுக்கணும். அப்படிப்பட்டவங்க குழம்பிடுவாங்களே! சாதனைல இறங்காதவரை சுதந்திரம் இருந்தது. இறங்கிய பின்னால அதை கட்டுப்படுத்திக்கோ என்கிறார்கள்.