Pages

Wednesday, April 23, 2008

புலன்கள் -திருப்பம்



மிருகங்களுக்கோ புலன்களால கட்டுப்பட்டு தளைதான் உண்டாகும். மனிதனுக்கோ அதால பாபமும் ஏற்படும்.

பக்தி சாதனைல இருக்கிற மனிதன் இந்த காம குரோதங்கள் கீழ் தரமான உலக விஷயங்கள்ல போகிறபோது அதை எல்லாம் மடை கட்டி தண்ணிய திருப்பறாப்போல பகவான் பக்கம் திருப்பறான். ஆசை படனுமா ஆண்டவனை பாக்கணும்னு ஆசை; தாபம் படனுமா அவனை பிரிஞ்சு ஒரு கணமும் வாழ முடியாதுன்னு தாபம்; அவனை பாத்தா மட்டுமே மனசு சமாதானமா ஆகும் என்கிற முடிவு - இதெல்லாம் உலக பற்றால வர காமத்தை தூயதா ஆக்கும்.

என்னடா இவ்வளோ கதறறேனே, ஆண்டவன் இன்னும் அருள் பாலிக்கலையே என்கிற ஏக்கம் அதனால வர ஆத்திரம் இவை குரோதத்தை தூய்மை ஆக்கும்.

என் கடவுள், என் பகவான், அவன் எனக்குத்தான், எனக்கே சொந்தம் என்கிற தீவிர பற்றுதலால் சாதாரணமா செல்வத்து மேலேயும் உறவினர் மேலேயும் காட்டுகிற லோபம் தூய்மையா ஆகும். என்னோடது எனக்கு மட்டும்தான் என்கிற மோகத்தையும் தூயதா ஆக்கும்.

"கடவுளே என்னை விட்டுவிட்டுபோயிடுவியா? உன்னை ஜெயிப்பேன். உன்ன என் மனசுல போட்டு பூட்டி வைப்பேன். என் கல்வி செல்வம் பதவி எல்லாத்தையும் உன்னை பிடிக்கிறதுல செலவழிப்பேன்" என்கிற உறுதியும் ஆர்வமும் கல்வி செல்வத்தால வர மதம் அல்லது அகந்தையை தூய்மையாக்கும். பிரம்ம ஞானம் பெற்றவங்களை பாக்கிறப்ப "ஆண்டவா அவங்களுக்கு மட்டும் காட்சி தர, எனக்கு இல்லியா?” என்கிற மாத்சர்யம் (பொறாமை) தூயதாகும்.

இப்படி புலன்கள் மூலமா நமக்கு ஏற்படுகிற பற்றை திருப்பி கடவுள் மேலே செலுத்தறப்ப உலகத்து மேலே பற்று போய் பரம் பொருள் மேலே பற்று வரும் .

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்க்கு"


ன்னு சொல்லி இருக்காங்க இல்லை?

3 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

படித்தவுடன் மனதில் தோன்றியது இளையராஜா ரமனர் பற்றி பாடிய பாடல்!!!

"காம-க்ரோத, மத-மாச்சர்யம் எனைவிட்டு விலகிடவே அருள்வாய் ரமணா..."

பஞ்சதன்மாத்ர ஸாயகா என்பது ஞாபகம் வருது :-)

Geetha Sambasivam said...

//இப்படி புலன்கள் மூலமா நமக்கு ஏற்படுகிற பற்றை திருப்பி கடவுள் மேலே செலுத்தறப்ப உலகத்து மேலே பற்று போய் பரம் பொருள் மேலே பற்று வரும் .//
வரணும், சரி, ஆனால் கடவுளையே குற்றம் சொல்றவங்களும் இருக்காங்க, இல்லை, உன்னை நம்பினேனே, எனக்கு நீ எதுவுமே தரலையேனு குற்றம் சொல்றவங்களுக்கு என்ன பதில்? அவங்க நிலைமையிலே இதை எப்படி, எந்த விதத்தில் சொன்னால் புரிஞ்சுப்பாங்க? கடவுள் நிச்சயமாய் நாம் கேட்பதைக் கொடுப்பார், என்று நம்புகிறவங்களோட நம்பிக்கைக்கும், இதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கே? அதிலிருந்து இதுக்கு எப்படிப் போவது????????

இறைவனிடம் எதையும் எதிர்பார்த்துப் போவதும் கூட ஒரு பற்றுத் தான் இல்லையா?

திவாண்ணா said...

@ மதுரையம்பதி
பாடல் உங்ககிட்ட இருக்கோ?

@ கீதா அக்கா
பற்றை திருப்புவது அது உலக பொருட்கள் மேலே போகக்கூடாது என்பதுக்குதான். கோபம் தாபம் அழுகை எல்லாம் வரும்தான். வரட்டும். பரம் பொருள் மேலே பற்று அவ்வளவு சீக்கிரம் வராதுதான்.
கடவுளை குற்றம் சொல்கிறவங்களை அந்த நேரம் ஒண்ணும் செய்ய முடியாதுதான். அப்புறமாதான் கர்மா படிதான் எதுவும் நடக்கும். ஆண்டவன் அதை தாங்கற சக்தி கொடுப்பான்; கொஞ்சம் குறைப்பான்; அதுக்கு மேலே நல்ல நீதிபதியா இருக்கிற அவன் ஒண்ணும் செய்யக்கூடாதில்லையா? என்று புரிய வைக்கனும். புரியாம கடவுள் நம்பிக்கை இழக்கிறவங்களும் உண்டு.

//கடவுள் நிச்சயமாய் நாம் கேட்பதைக் கொடுப்பார், என்று நம்புகிறவங்களோட நம்பிக்கைக்கும், இதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கே? அதிலிருந்து இதுக்கு எப்படிப் போவது????????//

அவர்கள் போக்கு வேறு; இது வேறு. அதிலிருந்து இதுக்கு போக முடியுமா இல்லை போகத்தான் வேண்டுமா? என்பது நிச்சயம் இல்லை. நம்பிக்கை திடமானது.
நாம் பேசுவது சலனமான கொந்தளிக்கிற மனம் உடையவங்களை பத்தி. கோபப்படனுமா? அதை கடவுள் பக்கம் திருப்பு. ஆசை வருதா அதை கடவுள் பக்கம் திருப்பு.
உதாரணமா ஒத்தர் நமக்கு ஒரு அநியாயம் செய்யறார். அதுக்கு அவரை திட்டலாம். அது மேலும் பகைமையை வளர்க்கும்; மனசை கெடுக்கும். அதுக்கு பதிலா கடவுளே, இப்படி பண்ணிட்டானே, நீயும் பாத்துகிட்டு இருக்கியே என்று கடவுளை திட்டலாம். அது பரவாயில்லை. அவன் பொறுத்துப்பான். :-)

//இறைவனிடம் எதையும் எதிர்பார்த்துப் போவதும் கூட ஒரு பற்றுத் தான் இல்லையா?//

ஆமாம். முதலில் காம்ய பக்தி. எதிர்பார்ப்போட. பிறகு அது முதிர்ந்து எதிர்பார்ப்பு இல்லாத பக்தி. குழந்தை தரும் unconditional love மாதிரி. இப்படி வளரனும்.