Pages

Wednesday, April 30, 2008

எல்லா தீமைகள், நற்கருமம்



ம்ம்ம்ம்....
சரி ஏன்தான் அப்படி சொல்கிறார்னு பாக்கலாம்.
த்யாயதோ விஷயான் பும்ஸ: ஸங்கஸ்தேஷு பஜாயதே.
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோsபி ஜாயதே
கீதை 2-62


பொருட்களை நினைச்சா பற்று வரும். பற்று வந்தா ஆசை வரும். ஆசை (தீர்க்க முடியலைனா) சினமா வடிவெடுக்கும்.
தீ தொட்டாத்தான் சுடும். விஷம் சாப்பிட்டாத்தான் கொல்லும். ஆனா புலன் உணர்ச்சிகள் நினைத்த மாத்திரத்துல நிலை குலைய வைக்கும்.

"சரிப்பா, நான் நல்லதே நினைக்கிறேன்" அப்படின்னா அதையும் கண்டிக்கிறாங்க. அத பொன் விலங்கு என்கிறாங்க. தீய எண்ணம் இரும்பு விலங்காம். இப்படி ராம கிருஷ்ணர் சொல்லி இருக்கார்.
இத பாத்து எல்லாம் பயப்படாதீங்க. அந்த நிலை ரொம்ப தூரத்துல இருக்கு. முதல்ல தீய எண்ணங்கள துரத்திட்டு அப்புறமா நல்ல எண்ணங்களை பத்தி யோசிக்கலாம்.

மேலே போலாமா?
சினத்தால மனக்குழப்பம்; குழப்பம்தால நினைவு இல்லாமை; நினைவு நாசமாச்சுனா புத்தி நாசம்; புத்தி போச்சுனா மனுஷன் அழிவான்.

இப்படி தீமைகள் ஒண்ணொண்ணா அடுத்தடுத்து வந்து மனுஷனுடைய வீழ்ச்சிக்கு காரணமா ஆயிடும்.
க்ரோதாத் பவதி ஸம்மோஹ:
ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம:
ஸ்ம்ருதி ப்ரம்சாத் புத்தி நாசோ
புத்தி நாசாத் ப்ரணஸ்யதி

இதனாலதான் நாரதர் மத்த தீமைகளிலிருந்து விலக்குன்னு சொல்கிறார்.

கிரியை:

இதை நற்கருமம்னும் சொல்லலாம். இது சத்வ குணத்திலேந்து வருது. இதையே கல்யாணம்னு சொல்கிறாங்க. ராமானுஜர் "இது இருந்தா சத்தியத்தோட கூடிய தூய்மை நேர்மை அன்பு அகிம்சை தர்மம் இதெல்லாம் இருக்கும்" னு சொல்றார்.
இதுக்கு உடல் உள்ளம் சொல் மூணுமே தூய்மையா இருக்கனும். எதை நினைக்கிறோமோ அதையே சொல்லணும். எதை சொல்லறோமோ அதையே செய்யனும்.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
னு ராமலிங்க வள்ளலார் சொன்னது போல.

சத்யோ நாஸ்தி பரோதர்ம - சத்தியத்துக்கும் உசத்தியான தர்மம் இல்லைங்கிறது வேதங்கள். சத் சித் ஆனந்தமான அந்த பரமாத்மாவை உணரனும்னா நம் வாழ்வு சத்திய நெறில இருக்கனும். அந்த சத்திய தாகம் வெளியுலக கவர்ச்சியால சரிஞ்சு போகிறதா இருக்கக்கூடாது. எப்ப நம் உள்ளம் உள் பக்கம் திரும்பறதோ அப்ப சக்தி அதிகமாகும். உள்ளம் வெளிப்பக்கம் திரும்பறப்ப சக்தி செலவாகும். பலவீனமாகும். மனசு அப்படி பலவீனமானா சத்தியத்தோட நடக்கிறது அவ்ளோதான். அதனால புலன்களால அனுபவிக்கிறதுல பற்று போற வரை சத்திய வாழ்வு அமையறது கஷ்டம்.
இதையல்லாம் தியாகம் செய்கிறதாலதான் ஆன்மீகத்தில் முன்னேற முடியும்.
அதனால சாதகன் சத்தியத்தோட வாழ பயிற்சி செய்யனும்னு ராமானுஜர் சொல்கிறார்.


8 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

இந்த பதிவு திடிரென ரொம்ப ஹெவியாகிட்ட மாதிரி இருக்கு திவாண்ணா :))

மெளலி (மதுரையம்பதி) said...

//சினத்தால மனக்குழப்பம்; குழப்பம்தால நினைவு இல்லாமை; நினைவு நாசமாச்சுனா புத்தி நாசம்; புத்தி போச்சுனா மனுஷன் அழிவான்.//

எவ்வளவு உண்மை...மிக்க நன்றி திவாண்ணா...மிக அழகான ஸ்லோகம், பொருள். :))

மெளலி (மதுரையம்பதி) said...

//அதனால புலன்களால அனுபவிக்கிறதுல பற்று போற வரை சத்திய வாழ்வு அமையறது கஷ்டம்.
இதையல்லாம் தியாகம் செய்கிறதாலதான் ஆன்மீகத்தில் முன்னேற முடியும்.//

கஷ்டமா?, கிடைக்கல்ல, இல்லை, முடியல்ல....எப்படிச் சொல்வதுன்னு கூட தெரியல்லையே!!!!

திவாண்ணா said...

@ மௌலி
//இந்த பதிவு திடிரென ரொம்ப ஹெவியாகிட்ட மாதிரி இருக்கு திவாண்ணா //

அதனாலேயே சின்னதாவும் ஆயிடுத்து. ரைட் நாளைக்கு ஒரு கதை போட்டுடலாம்!


//கஷ்டமா?, கிடைக்கல்ல, இல்லை, முடியல்ல....எப்படிச் சொல்வதுன்னு கூட தெரியல்லையே!!!!//

இதெல்லாம் மெதுவான நிகழ்வுகள். நாம் தியரி மட்டும் பாக்கிறதால மேலே மேலே போயிட்டு இருக்கோம்.
செயல்முறையில மெதுவாவே வரட்டும். பாதைல போக ஆரம்பிச்சா போதும் . அப்புறம் அவன் பாத்துப்பான்.

மெளலி (மதுரையம்பதி) said...

//இதெல்லாம் மெதுவான நிகழ்வுகள். நாம் தியரி மட்டும் பாக்கிறதால மேலே மேலே போயிட்டு இருக்கோம்.
செயல்முறையில மெதுவாவே வரட்டும். பாதைல போக ஆரம்பிச்சா போதும் . அப்புறம் அவன் பாத்துப்பான்.//

உண்மைதான் திவாண்ணா...

மெதுவாகத்தான் போகமுடியுது...அவனோ/அவளோ பாத்துண்டுதானே இருக்காங்க...:)
அதனாலதான் இந்த மட்டுமாவது வண்டி ஓடுது..:)

jeevagv said...

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல், நான்கும் இழுக்கா இயன்றது அறம்.

அறம்: கிரியை, தர்மம்

திவாண்ணா said...

@ஜீவா

ரொம்பவே சரியா சொன்னீங்க!

Geetha Sambasivam said...

வருகை மட்டும், நேத்திக்குப் பின்னூட்டம் போட முடியலை! :(