அடுத்து அபிமானம் என்கிற அகந்தை.
செய்கிற அத்தனையும் நானே செய்யறேன் என்கிற நினைப்பு. இது தமோ குணத்தை அடிப்படையா கொண்டு எழும்புகிற ராஜஸ குணத்தோட இயல்பு. நாம் செய்கிற காரியம் சிறப்பா இருக்குன்னா அதுக்கு நான்தான் காரணம் என்று நினைக்கிற ஆசாமி அறிவு கலங்கி இறைவனை அடைகிற முனைப்பு இல்லாம போவான்.
நர ஜன்மத்துலதான் ஆன்மிக சிந்தனைகள் வந்து முன்னேற முடியும். அதை இப்படி வீணாக்கிக்கிறதுல பலன் இல்லை.
அதனால அகந்தை போகணும். நான் செய்கிறேன் என்கிற நினைப்பு போய் பகவான் செய்கிறான் , நான் அதுக்கு ஒரு கருவிதான்னு உணரணும்.
டம்பம்
பகட்டி திரியறான்னு சொல்கிறோமே அதான் இது. ஆடம்பரமான வெளிப்பாடு.
சாதாரணமா செய்கிற ஒரு வேலையை நிறைய விளம்பரம் பணம் செலவோட செய்கிறது. சிலர் ஆயிரம் ரூபாய் செலவழிச்சு வாங்கின நோட்டுப்புத்தகங்களை இரண்டாயிரம் செலவழிச்சு விழா எடுத்து வினியோகம் செய்யறாங்களே அது போல.
டம்பம் சத்தியத்துக்கு வெகு தொலைவுல சாதகனை தள்ளிடும். எளிமையும் இனிமையும் போய் வன்மையும் கசப்பும் ஒட்டிக்கும். அப்படின்னு நாரதர் சொல்றார்.
மத்த தீய சமாசாரம் எல்லாம் விலக்குன்னு பொதுவா சொல்றார் நாரதர்.
அப்ப எதுடா தீயது லிஸ்ட் போடுன்னா......
எதெல்லாம் மனசை புலன்கள் பின்னால துரத்துதோ அதெல்லாம்தான் கெட்டதுன்னு அனியாயமா சொல்கிறார்.
:-))
8 comments:
அகந்தை - அகங்காரம் : மிக முக்கியமான கான்சப்ட், நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.
(எவ்வளவு எழுதினாலும் போதாதென்றும் தோன்றிடும் கான்செப்ட்)
அப்புறம், அடிக்கடி, நாரதர் சொல்லறார்ன்னு வருது - எங்கேன்னு சொன்னா நல்ல இருக்கும் - ஏன்னா நம்ம மக்களுக்கு - நாரதர் - ஒவ்வொரு இடமாய்ச் சென்று கலகம் செய்பவர் - அவ்வளவுதான் சதாரணமாகத் தெரிந்தது!
//டம்பம் சத்தியத்துக்கு வெகு தொலைவுல சாதகனை தள்ளிடும்.//
ம்ம், இந்த காலத்துல டம்பம் பண்ணறவங்க தான் முண்ணனில வராங்க. :(
அடக்கம் அமரருள் உய்க்கும்!னு இருந்தா அவனுக்கு சாமர்த்தியம் போதாது!னு சொல்லிடறாங்க. :(
என்ன செய்ய, பூக்கடைக்கும் விளம்பரம் தேவைபடுகிறதே இந்த காலத்துல. :))
//நான் செய்கிறேன் என்கிற நினைப்பு போய் பகவான் செய்கிறான் , நான் அதுக்கு ஒரு கருவிதான்னு உணரணும்.//
இதை உணர்ந்துட்டா உலகமே நம் வசப்பட்டுவிடும் :-)
ஜீவா சொல்ற மாதிரி, நாரதர் எங்கு சொன்னார்ன்னு சொல்லலாமே?....ஏதோ கொஞ்சம் தெரிந்து கொள்வோம். நாரத புராணமா?
@ ஜீவா
நன்றி. சில விஷயங்கள் அடிக்கடி சொல்லபடுவனதான். நீங்க சொல்றா மாதிரி எவ்வளவு சொன்னாலும் போதாது.
நாரத பக்தி சூத்திரம் அப்படி ஒரு புத்தகம். பக்தி பத்தி அதிகமா சொல்ல.
http://narada-bhakti-sutras.blogspot.com/
யார்னே சொல்லிக்காம ஒத்தர் ப்ளாக்!
http://en.wikipedia.org/wiki/Narada_Bhakti_Sutra
நான் அந்த புத்தகம் படிக்கலை. ஆனால் இப்ப நான் ரெபர் பண்ணுகிறதுல அடிக்கடி கொடேஷன் இருக்கு.
//அடக்கம் அமரருள் உய்க்கும்!னு இருந்தா அவனுக்கு சாமர்த்தியம் போதாது!னு சொல்லிடறாங்க. :(
என்ன செய்ய, பூக்கடைக்கும் விளம்பரம் தேவைபடுகிறதே இந்த காலத்துல. :))//
@அம்பி, அமரருள் இருக்கணும்ன்னா விளம்பரம் தேவையில்லை/இருக்க கூடாது. :-)
உங்க எடுத்துக்காட்டை வச்சே சொல்கிறேனே...கோவில் பூஜைக்கும், இல்லத்து பூஜைக்கும் போகும் மலர்களுக்கு (மல்லிகை, முல்லை, தாமரை, மரு, மருக்கொழுந்து, அரளி, துளசி, வில்வம்) விளம்பரப்படுத்தப்படுவதில்லை.
ஆனா பொக்கேக்கு போகும் சிவப்பு ரோஜாக்களும், லில்லி மலர்களுக்கும் தான் விளம்பரம் இருக்கு/தேவை.
//ம்ம், இந்த காலத்துல டம்பம் பண்ணறவங்க தான் முண்ணனில வராங்க. :(//
துளசி டீச்சர் பாத்துக்கட்டும்.:-))
எதுல முன்னணின்னு யோசிச்சு அது நிஜமா முன்னணியான்னு யோசிச்சா சரியாயிடும்.
/அடக்கம் அமரருள் உய்க்கும்!னு இருந்தா அவனுக்கு சாமர்த்தியம் போதாது!னு சொல்லிடறாங்க. :(//
சொலட்டுமே, என்ன இப்போ? மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு பாத்துக்கிட்டே இருந்தா எப்படி? நாம் நமக்காக வாழனுமா? இல்லை மத்தவங்களுக்காகவா? நமக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்ய "மத்தவங்க" என்கிற நினைப்பு தடை ஆகக்கூடாது.
//என்ன செய்ய, பூக்கடைக்கும் விளம்பரம் தேவைபடுகிறதே இந்த காலத்துல. :))//
விளம்பரம் அளவு மீறினா டம்பம் இல்லையா அம்பி?
நல்லது திவா சார், நானும் நாரத பக்தி சூத்ரம் படித்ததில்லை. முன்பொருமுறை www.krishna.com இல் இருந்து ஆங்கில PDF ஆக கிடைக்க தரவிறக்கி வைத்த ஞாபகம், அவ்வளவுதான்!
Post a Comment