மரணம் ஏற்படும்போது உள்ள நேரம், சம்பவம் முதலியதை முன்னிட்டு சில பிராயச்சித்தங்கள் உண்டு.
பிரேதத்தின் முன் தீவட்டி பிடித்து செல்ல சாஸ்திரத்தில் ஒரு பிரமாணமும் இல்லை. பேரன்மார்கள் நெய் தீவட்டி எடுத்து செல்வதாக வழக்கத்தில் இருக்கு. இப்படி அமையலைன்னா அதுக்கு வருத்தப்பட வேண்டாம் என்பதற்காக சொன்னேன்.
தேவையான சாமான்களை சேகரித்து எடுத்துக்கொண்டு அக்னி சட்டியை ஏந்திக்கொண்டு முன்னால் கர்த்தா முன்னால் போவார். இந்த தேவையான பொருட்களை எடுத்து போகிறவர்கள், பாடையை சுமப்பவர்கள் நீங்கலா, தாயாதிகள் மூத்தவர் முதலில் என்ற வரிசையில் போகணும். மற்றவர் அதன் பின்னாலே எந்த வரிசைல வேணும்னாலும் போகலாம்.
வீட்டுக்கு வெளியே பிரேதம் போன பின் வீட்டு ஸ்திரீக்களும் சிறுவர்களும் புழுதியை தலை தோளிலே பூசிக்கொள்ளணும். கேசத்தை பிரித்து விரித்த தலையோட இருக்கணும்.
இப்ப இந்த அமங்களமான தலை விரிகோலமே பாஷன் ஆகிவிட்டது.
மாயனம் போகும் வழியில் கால் பாகம் போன பின் அக்னியை கீழே வைத்து தெற்கே பிரேதத்தை இறக்கி வைத்து வலது பக்கம் வெந்த அரிசியை மண் கட்டிகள் மேலே வைத்து ஸ்த்ரீக்களும் (கீ அக்கா நோட் திஸ்!) தாயாதிகளும் மேல் துணியை வேறிடம் வைத்து, ஒரே துணியுடன் வலது பாதி சிகையை முடிந்து, வலது கைகளால் வலது துடைகளை தட்டிக்கொண்டு, இளையவன் முன் போக இடப்பக்கமா சுத்தி வருவர். (துடையை தட்டக்கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க இல்லை?) பிறகு இடது சிகையை முடிந்து வலதை பிரித்து வலப்பக்கமாயும் 3 முறை சுத்தி வருவாங்க. பின் கர்த்தா தெற்கு முகமாக உக்காந்து இடது புறமா மண்டி போட்டு 3 குவியலா மண் கட்டிகளை வைத்து அதன் மேலே எள்ளும் நீரும் விடுவார். அரிசியில் 1/3 எடுத்து மூன்றா பிரித்து 3 மண் கட்டிகள் மேலேயும் போட்டு தெற்கே ஒரு முறை போட்டு திருப்பி எள் நீர் இறைத்து விடுவர்.
இது போல 3 இடங்கள்ளே நின்னு இந்த விஷயத்தை செய்வர்.
இதற்குள்ளே மாயனத்துக்கு கிட்டே வந்திருப்பர். கடைசி முறை இதை செய்தபின் சரு இருந்த மண் பாத்திரத்தை சுக்கு நூறாக- தண்ணீர் தேங்காதபடி- உடைப்பர். (கொசுவுக்கு இடம் கொடுக்காம இருக்கவோ?!) நாலாம் முறை மௌனமாகவே தூக்கிக்கொண்டு தகனம் செய்கிற இடத்துக்கு போகணும். பிரேதத்தை தெற்கு தலையா இறக்கி வைத்துவிட்டு இன்னும் கொஞ்சம் வடக்கே போய் திரும்பணும்.
5 comments:
இப்போ வேன் போன்றவை வந்துட்டதால இந்த சடங்கினை மயானத்திலேயே, சிதையில் வைக்கும் முன்னர் செய்துவிடுகிறோமுன்னு நினைக்கிறேன்...
ஆமாம். நகரங்கள்ளே அதுதான் ப்ராக்டிகல்.
கீ அக்கா முன்னேயே ஒரு கேள்வி எழுப்பினாங்க. பெண்கள் மயானத்துக்கு போவதுண்டா? யாருமே இல்லத பட்சத்தில் அவர்களே கர்மாவை செய்யலாமா?
மயானத்துக்கு போவதுண்டு. பயந்துவிடப்போகிறார்களே என்று இப்போதெல்லாம் வருவதில்லை. ஆனால் இன்னும் வட ஆற்காடு பகுதிகளீல் பெண்கள் மயானத்துக்கு போவதை வழக்கமாக வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று அறிகிறேன்.
இது அந்திம கர்மா. அந்த்யேஷ்டி என்றே அக்னிஹோத்ரிகளுக்கு சொல்கிறார்கள்.
வேதத்துக்கு பெண்களுக்கு குறைந்த அதிகாரமே உள்ளதால் அவர்கள் இந்த கர்மாவை செய்வதற்கு இல்லை. வேறு தாயாதிகள் இல்லாத பட்சத்தில் வாத்தியாரே "பவர் ஆப் அடார்னி" ஆக தர்பையை வாங்கிக்கொண்டு செய்து விடுவார். தொடர்ந்துவரும் காரியங்களும் அப்படியே.
நீங்கள் சொல்லும் எல்லா சடங்குகளும் எங்கள் சமுதாயத்திலும் உண்டு. மௌலி சொன்னதைப் போல் ஊர்தியில் சென்று சுடுகாட்டிலேயே எல்லா சடங்குகளையும் செய்துவிடுவார்கள். பெண்கள் அந்த இடம் வரை வருவதுண்டு. பிரேத சம்ஸ்காரம் செய்யும் இடத்திற்கு வாத்தியாரும் கர்த்தாவும் இரண்டு மூன்று தாயாதிகளும் வீட்டு மாப்பிள்ளைகளில் மூத்தவர்களும் வருவார்கள். அந்த இடத்திலும் சில சடங்குகள் செய்து (கொழுக்கட்டைகளைப் போல் சிலவற்றை பிரேதத்தின் மீது வைத்து மந்திரங்கள் சொல்லி) கர்மாக்களை செய்வார்கள். 21 வருடங்களுக்கு முன்னர் தாயார் இறந்த போது நடந்தவற்றைக் கொண்டு சொல்கிறேன்.
vaangka kumaran
ஆமாம் எல்லா ஹிந்துக்களுக்குமே கர்மா பொதுவாகதான் இருக்கு. செய்கிற விதம் வேறுபடுது. இது இப்ப கையில இருக்கிற புத்தகங்கள் மூலமா தெரியுது.
என்ன வேறுபாடு எங்கிறத்துக்கு புத்தகங்கள் முழுமையா கிடைக்கலை. 1-2 மாசத்திலே கிடைக்கும்னு சொன்னாங்க. பார்க்கலாம்.
Post a Comment