Wednesday, August 6, 2008
ஸமாவர்த்தனம்.
இப்படியாக வேத அத்தியயனம் பூர்த்தி ஆன பின் திருமணத்துக்கு ரெடிதான் ஆனாலும் இப்ப (தியரில) குருகுலத்திலதானே இருக்கிறார்? (ஆமாங்க, வேதம் படித்தவருக்கு மரியாதை கொடுக்கணும் இல்லையா? அதான் "ர்".)
வேத பாடம் பூர்த்தி செய்து ஸமாவர்த்தனம் செய்து கொள்கிறார்.
உடம்பு முழுவதும் சவரம் செய்துகிட்டு குளிச்சு, இடுப்பில இருக்கிற மேகலையை ஒரு பிரம்ஹசாரிகிட்டே கொடுப்பார். அவர் அதை தர்ப்பை புதரிலோ, அத்தி மரத்து கீழேயோ மறைச்சு வெச்சுடுவார். தண்டம், மான் தோல் எல்லாம் விட்டு விட வேண்டியது. வாசனை பொடி போட்டுகிட்டு ஜம்முனு குளியல். இது வரை இடுப்பில ஒரே ஒரு துண்டுதான் ; இப்ப ரெண்டு துணி உடுத்திக்கிறார். பூணூல் ஒரு ஜோடியா போட்டுக்கிறார். சந்தனம் பூசிகிட்டு, பூ வைச்சுகிட்டு, (ஆமாம், பூவேதான்) கண்ணுக்கு மையிட்டு கண்ணாடில முகம் பார்க்கணும்.
சுத்தமான இடத்திலேந்து அக்னி கொண்டு வந்து பிரஜாபதிக்கு சின்ன ஹோமம்.
ஆசார்யன் மங்கல சிராத்தமான புண்யாஹம் செய்துவித்து ஆசீர்வாதம் செய்து "போய் வாப்பா" ன்னு விடை கொடுத்துடுவார். மாணவர் பாதரக்ஷை (செருப்பு) போட்டுகிட்டு, குடை, தடி எல்லாம் எடுத்துக்கிட்டு கிழக்கு நோக்கியோ வடக்கு நோக்கியோ போய், அப்புறமா வீட்டுக்கு போவார்.
இதான் ஸமாவர்த்தனம்.
இது இப்ப நடக்கிற விதத்தை கேட்டா அட, இதுதானான்னு ஆச்சரியப்படுவீங்க.
இப்பதான் வேதம் படிக்கவே போகலையே. அதுக்கு பதிலா திருமணத்துக்கு முந்தின நாள் குறைந்த பட்ச வேத அத்தியயனம் செய்கிறதுன்னு பார்த்து இருக்கோம். அதெல்லாம் என்ன, எப்படி செய்யறாங்களோ, இப்ப திருமணத்து அன்னைக்கு காலை குளிச்சு புதுசா வேட்டி கட்டி, (இப்பதான் பஞ்சகச்சம்ன்னா என்னன்னு புரியும்) பூஜை முடிச்சு, "மாப்பிள்ளை" புது செருப்பு போட்டுகிட்டு, குடை, வாக்கிங் ஸ்டிக், பகவத்கீதை புத்தகம் எல்லாம் எடுத்துண்டு கிளம்பிடுவார். ம்ம்ம்ம்...... அதேதான் -காசி யாத்திரை. போகிற ஆசாமியோட நண்பர்கள் " இதாண்டா கடேசி சான்ஸ். தப்பிக்கனும்னா இப்பவே எங்களோட வந்துடு. தெரு முனைல கார் இருக்கு" ன்னு கலாட்டா பண்ணுவாங்க. நல்ல புத்திமதி சொன்னா இந்த காலத்துல யார் ஏத்துக்கிறாங்க? "மாப்பிள்ளை" இதை கேக்காம அசட்டு சிரிப்பு சிரிச்சுகிட்டே மாட்டிப்பார்! “மாமனார்" வழி மறிச்சு "பாத்தா நல்ல பிள்ளையா இருக்கேயே. என் பொண்ண கல்யாணம் பண்ணி தரேன். சமத்தா குடித்தனம் நடத்து" ன்னு சொல்லுவார். விதி யாரை விட்டது? மாப்பிள்ளையும் சரின்னு திரும்பிடுவார்.
இதான் இப்ப நடக்கிற ஸமாவர்த்தனம்.
Labels:
இரண்டாம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//மாப்பிள்ளை" இதை கேக்காம அசட்டு சிரிப்பு சிரிச்சுகிட்டே மாட்டிப்பார்! “மாமனார்" வழி மறிச்சு "பாத்தா நல்ல பிள்ளையா இருக்கேயே. என் பொண்ண கல்யாணம் பண்ணி தரேன். சமத்தா குடித்தனம் நடத்து" ன்னு சொல்லுவார். விதி யாரை விட்டது? மாப்பிள்ளையும் சரின்னு திரும்பிடுவார்.
இதான் இப்ப நடக்கிற ஸமாவர்த்தனம்.//
ada, ippo than puriyuthu!! :((((((( eththanai nalla vishayanggal sariya sollamal maraikkapattathu??????
//நல்ல புத்திமதி சொன்னா இந்த காலத்துல யார் ஏத்துக்கிறாங்க? //
இந்த பதிவு எல்லாம் ஒரு ஒன்னேகால் வருஷத்துக்கு முன்னாடி வந்திருக்கபடாதா? :))
இதுல இந்த முகம் பார்க்க கண்ணாடி சீர் கொடுக்கறது, மாமியார் மை தீட்டுவதெல்லாம் விட்டுடீங்களே? :-)
ஸமாவர்த்தனம் வரை நான் என்வீட்டிலேயே செய்துவிட்டு அப்பறமாத்தான் காரைக்குடி சென்றேன். :-)
இதன் காரணமாக சிலர் இந்த வைபவத்தில் கலந்துக்க முடியல்லன்னாலும், கர்மா ஒழுங்காக நடந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
மறுநாள் நீங்க சொன்ன கூத்துக்கள் எல்லாம் வெகு விமர்சையாக நடந்தது :-)
//ada, ippo than puriyuthu!! :((((((( eththanai nalla vishayanggal sariya sollamal maraikkapattathu?????? //
என்னவோ நடக்குது, மர்மமா இருக்குது!
//இந்த பதிவு எல்லாம் ஒரு ஒன்னேகால் வருஷத்துக்கு முன்னாடி வந்திருக்கபடாதா? :)) //
:-))))))))))
பிரெண்டு யாரும் புத்திமதி சொல்ல இல்லாம போயிட்டாங்களா? :-))
பரவாயில்லை அம்பி. சம்சாரத்திலே இறங்கியாச்சு. அப்புறம் என்ன என்ஜாய்!
//இதுல இந்த முகம் பார்க்க கண்ணாடி சீர் கொடுக்கறது, மாமியார் மை தீட்டுவதெல்லாம் விட்டுடீங்களே? :-)//
ஓ மாமியார்தான் மை தீட்டுவாங்களா? தெரியாது!
// ஸமாவர்த்தனம் வரை நான் என்வீட்டிலேயே செய்துவிட்டு அப்பறமாத்தான் காரைக்குடி சென்றேன். :-)//
அப்படி செய்யறதுதான் சரி.
// இதன் காரணமாக சிலர் இந்த வைபவத்தில் கலந்துக்க முடியல்லன்னாலும், கர்மா ஒழுங்காக நடந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.//
லௌகீகத்தையே பாத்தா ஒரு கர்மாவும் ஒழுங்கா நடக்காது.
// மறுநாள் நீங்க சொன்ன கூத்துக்கள் எல்லாம் வெகு விமர்சையாக நடந்தது :-)//
:-)))))))))))))))
கூத்தேதான். சின்ன வயசில எதுக்கு வாக்கிங் ஸ்டிக் ன்னு ரொம்ப யோசிச்சு இருக்கேன்.
:-))
//பூணூல் ஒரு ஜோடியா//
அதற்கப்புறம், இரண்டு, மூன்றாக ஆவது எப்போது?
குழந்தை பிறந்த அப்புறம்ன்னு நினைத்திருந்தேன், ஆனா அப்படியும் இல்லை போலும்!
//ஓ மாமியார்தான் மை தீட்டுவாங்களா? தெரியாது!//
மாமியார் இல்லைனு நினைக்கிறேன். ஏன்னா எனக்கு என் மாமி (தாய்மாமாவின் தங்கமணி) தான் மை தீட்டினார். :))
//குழந்தை பிறந்த அப்புறம்ன்னு நினைத்திருந்தேன், ஆனா அப்படியும் இல்லை போலும்!
//
@ஜீவா, சீமந்தம் போதே இரண்டு மூன்றாகி விடுகிறது. நான் பூணூல் ஜோடிய சொன்னேன். :))
//சீமந்தம் போதே இரண்டு மூன்றாகி விடுகிறது.//
ஒரு ஆமாம் மட்டும் போட்டுக்கறேன் :-)
Blogger ஜீவா said...
//பூணூல் ஒரு ஜோடியா//
அதற்கப்புறம், இரண்டு, மூன்றாக ஆவது எப்போது?
குழந்தை பிறந்த அப்புறம்ன்னு நினைத்திருந்தேன், ஆனா அப்படியும் இல்லை போலும்!
இதில் கொஞ்சம் குழப்பம் இருக்கு. தெளிவு படுத்தி கொண்டு சொல்றேன்.
August 7, 2008 2:24 AM
Blogger ambi said...
//ஓ மாமியார்தான் மை தீட்டுவாங்களா? தெரியாது!//
மாமியார் இல்லைனு நினைக்கிறேன். ஏன்னா எனக்கு என் மாமி (தாய்மாமாவின் தங்கமணி) தான் மை தீட்டினார். :))
செய்ய வேண்டியது மாமியார்தான். இந்த சமாசாரங்களிலே நிறையவே குடும்ப வழக்க வேறுபாடுகள் உண்டு.
Post a Comment