Pages

Tuesday, August 19, 2008

ஹவிர், ஸோம யக்ஞங்கள்



அடுத்து ஹவிர் யக்ஞங்கள்
அக்னி ஆதானம், அக்னி ஹோத்ரம், தர்ச பூர்ணமாஸம், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யம், நிரூட பசுபந்தம், ஸௌத்ராமணி

சாதாரணமாக ஸோம யாகம் செய்த்வர்களே இதற்கு தகுதி உடையவர்கள்.
கார்ஹபத்யம், ஆஹவனீயம், தக்ஷிணாக்னி என 3 அக்னிகளை பெறுவது அக்னி ஆதானம் என்ற கர்மாவால். 2 நாள் ஆகும்.
முன் சொன்ன கர்மாவை செய்து பெற்ற மூன்று அக்னிகளையும் தினசரி காலையும் மாலையும் ஆராதிப்பது அக்னி ஹோத்ரம். பசும் பாலை காய்ச்சியோ, அரிசியாலோ ஹோமம்.
ஒவ்வொரு பிரதமை அன்றும் அரிசி மாவை வறுத்து (உண்மையில் நெல் குத்தி அரிசி செய்து குத்தி மாவாக்கி என்று கிரமம். இப்போது வசதிக்காக முன்னேயே மாவு செய்து அதையே மந்திரம் சொல்லி கர்மா செய்து கொண்டதாக ஆக்கிவிடுகிறார்கள். இதற்கு கல்பத்தில் அனுமதியும் இருக்கு.) நீர் விட்டு கிளறி இறக்கி புரோடாஸம் என்கிறதாக உருண்டை பிடித்து அதை ஹோமம் செய்வர். அமாவாஸை அடுத்து வருவதில் தயிரும் பாலும் கூட ஹோமம் உண்டு.
இவை தர்ச பூர்ண ஸ்தாலீபாகம் போல். இவற்றை இஷ்டி என்பர். எல்லா இஷ்டிகளுக்கும் இவையே முன் மாதிரி. இஷ்டின்னு எங்கேயோ கேட்டாப்பல இருக்கு இல்லை? ஆங்! தசரதர் புத்ர காமேஷ்டி பண்ணாரே!

அதே போல் புதிய அரிசி/ச்யாமை கொண்டு சிசிர ருதுவில் ஆக்ரேயண இஷ்டி.
சாதுர்மாஸ்யம் பல இஷ்டிகள் சேர்ந்த கர்மா.
நிரூட பசுபந்தமும் ஸௌத்ராமணியும் ஆண்டுக்கு ஒரு முறை செய்வன.

ஸோம ஸம்ஸ்தைகள் ("யாகங்கள்")
அக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், வாஜபேயம், அதி ராத்ரம், அப்தோர்யாமம்.
ஸோம யாகங்களையும் மிக சிலரே செய்கின்றனர். அதுவும் ஏழு ஸம்ஸ்தைகளையும் செய்பவர் அரிது.
ஸோம ரஸம் என்றால் ஏதோ மதுபானம் என்பது போல ஒரு மாயையை உண்டாக்கி இருக்கிறார்கள். ராமர் ஸோம பானம் செய்தார் என்றால் மதுபானம் செய்யவில்லை. ஸோம யாகம் செய்தார் என்றே பொருள்.
ஸோமலதை என்ற தெய்வீக மூலிகை கொடியை வாங்கி கசக்கி பிழிந்து ரஸம் எடுத்து அதை பல பாத்திரங்களில் எடுத்துக்கொண்டு விரிவாக ஹோமங்கள் செய்வர். இந்த ஸோம லதை கொடி நாளடைவில் கலிப்பிரவாகத்தில் காணாமல் போய் விட்டது. அதனால் அடுத்த திரவியமான பூந்திக்கொடிதான் இப்போது பயன்படுகிறது. (சாத்திரங்கள் வகுத்தவர்கள் மிக புத்திசாலிகள். இப்படி நடக்கலாம் என்று பல விஷயங்களை ஊகித்து எல்லாவற்றுக்கும் பிராயச்சித்தங்கள் சொல்லி இருக்கிறார்கள். இது அந்த புத்தகங்களை படிப்பவருக்குதான் விளங்கும். எல்லா ஹோமங்களுக்கும் பயன்படுத்த முக்கிய திரவியம் என்று ஒன்றும் அது கிடைக்காத பட்சத்தில் கௌண திரவியம் என்று ஒன்றும் சொல்லி இருக்கிறார்கள்.)

8 comments:

Geetha Sambasivam said...

//கௌண திரவியம் என்று ஒன்றும் சொல்லி இருக்கிறார்கள்.)//

???????????????/

மெளலி (மதுரையம்பதி) said...

//மூன்று அக்னிகளையும் //

தனித்தனியாக வைத்திருக்க வேண்டுமா?.

தர்ச பூர்ண ஸ்தாலீபாகம் - ஸ்தாலீபாகம் என்ன வேறுபாடு?...
இந்த பதிவு கொஞ்சம் குழப்புது..
நீங்க சொன்ன புரோடாஸம் தர்ச பூர்ண ஸ்தாலீபாகத்துக்கு மட்டுந்தானா?...மற்ற எந்த ஹோமங்களிலும் உண்டா??.

ஆமாம், கெளண திரவியங்கள் பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

Geetha Sambasivam said...

கௌண திரவியம் என்று ஒன்றும் சொல்லி இருக்கிறார்கள்.)

கெளண-gouna=secondary??????ம.கு. தாங்கலை, ராத்திரி தூக்கம் வராது போல் இருக்கு! :P

திவாண்ணா said...

கௌண = secondary சரிதான். முக்கிய திரவியம் கிடைக்காட்டா கௌண திரவியம். நிம்மதியா தூங்குங்க!

திவாண்ணா said...

/மூன்று அக்னிகளையும் //

தனித்தனியாக வைத்திருக்க வேண்டுமா?.

முன் காலத்தில் தனித்தனியா வைத்து இருந்தாங்க. அது பராமரிப்பு கொஞ்சம் கஷ்டமானதால ரிஷிகள் அந்த அந்த வேளைக்கு கார்ஹபத்ய அக்னியிலேந்து எடுத்து மூணும் உண்டாக்கிக்க ரூட் போட்டு கொடுத்து இருக்காங்க.

// தர்ச பூர்ண ஸ்தாலீபாகம் - ஸ்தாலீபாகம் என்ன வேறுபாடு?...//
தர்சம் என்பது அமாவாஸை. அதை அடுத்த பிரதமை தர்ச ஸ்தாலீபாகம் செய்யணும். பூர்ண அதே மாதிரி பௌர்ணமி, அதை அடுத்து...
இதெல்லாம் இல்லாம ஆக்னேய ஸ்தாலீபாகம் (திருமணம் முடிஞ்சு) போல பல உண்டு. ஸ்தாலீபாகம் என்பது பொதுவான பேர்.

//இந்த பதிவு கொஞ்சம் குழப்புது..//

சாரி..

// நீங்க சொன்ன புரோடாஸம் தர்ச பூர்ண ஸ்தாலீபாகத்துக்கு மட்டுந்தானா?...மற்ற எந்த ஹோமங்களிலும் உண்டா??.//

புரோடாஸம் ஸ்தாலீபாகத்திலே இல்லை. இஷ்டியில் உண்டு. ஸ்பா லே சரு. இஷ்டிலே புரோடாசம்.

ambi said...

//இப்படி நடக்கலாம் என்று பல விஷயங்களை ஊகித்து எல்லாவற்றுக்கும் பிராயச்சித்தங்கள் சொல்லி இருக்கிறார்கள்.//

உண்மை தான்.

பதிவை படிச்சாச்சு. நிறைய அவுட் ஆப் சிலபஸ். என்ன செய்ய, தூக்கம் வரலைன்னு எல்லாம் ஜல்லி அடிக்க தெரியலை எனக்கு. :))

மெளலி (மதுரையம்பதி) said...

////இந்த பதிவு கொஞ்சம் குழப்புது..//

சாரி..//

எதுக்கு சாரி?, என் அறியாமையால் நான் குழம்பியிருக்கேன்...அஷ்டே!

மற்றபடி பதில்கள் படிச்சப்பறம் கொஞ்சம் புரிந்த மாதிரி இருக்கு...:)

திவாண்ணா said...

அட என்ன அம்பி இந்த பதிவுகள்ல வர பல விஷயங்கள் நமக்கு அவுட் ஆப் சிலபஸ்தான். அதுக்காக..??
உங்களுக்கு தூக்கம் வராம இருக்க வேற காரணங்கள்தான் இருக்கே? இது வேற வேணுமா?
:-))