Pages

Tuesday, August 5, 2008

வேத விரதம்



நாற்பது சம்ஸ்காரங்கள்ல அடுத்தது வேத விரதம். எங்கேயோ கேள்வி பட்டா மாதிரி இருக்கு இல்ல? சாதாரணமா வேத படிப்புக்கு போகாதவங்க திருமணத்துக்கு முன்னால இதை செய்து கொள்ளறாங்க. ஆங்... விரதம்ன்னு சொல்வாங்களே..அதேதான். ஏன், எதுக்கு செய்கிறோம்னே தெரியாம போய்கிட்டு இருக்கிற கர்மாக்கள்ல இதுவும் ஒண்ணு. போகட்டும்.

உபநயனமான மாணவன் தினசரி சந்தியா உபாசனை, காயத்ரீ ஜபம், ஸமிதாதானம் என்கிற அக்னி கார்யம் செய்து வரணும். முதல் வருட உபாகர்மா என்கிற "ஆவணி அவிட்டம்" போன பிறகு வேதவிரதம் செய்து வேத அத்தியயனம் ஆரம்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுத்த நாள்ல மாணவன் ஸமிதாதானம் முடித்து பெரியவங்க அனுமதி வாங்கிகிட்டு செய்யணும்.

இந்த வேத விரதங்கள் நான்கு. ப்ராஜாபத்யம், ஸௌம்யம், ஆக்னேயம், வைச்வதேவம். அதாவது வேதத்தில் 4 பாகங்கள். ஒவ்வொன்றும் ஒரு தேவதையை ஒட்டி; ப்ரஜாபதி, சோமன், அக்னி, விச்வேதேவர்கள்.

இவற்றை ஒவ்வொண்ணா ஆரம்பிச்சு முடிக்கிறதும் உண்டு; ஆனால் வழக்கில் இல்லை. எல்லாத்தையும் சேர்த்து செய்வதுவும் உண்டு.

சங்கல்பம் செய்து, பிள்ளையாரை பூசித்து, செய்திருக்கக்கூடிய பாபங்களை தொலைக்க ஹிரண்ய தானம் (தக்ஷிணை) கொடுத்து; ஷவரம் செய்து கொண்டு குளித்து காண்டரிஷி தர்ப்பணம். (பிரம்ம யக்ஞம் முடித்து செய்கிறோமே அதேதான்).
மாணவன் இன்னும் வேதம் கற்கவில்லை, இல்லையா. அதனால ஹோமம் செய்ய இன்னும் அருகதை ஏற்படலை. அதனால் ஆசார்யன்தான் ஹோமம் செய்யப்போகிறார். மாணவன் அவரை தொட்டுக்கொண்டு இருப்பான். வேத மந்திரங்களை கண்டு கொடுத்த ரிஷிகளை குறித்து முதலில் தர்ப்பணம் ஆயிற்று. இப்போது ஹோமம் அவர்களை குறித்தே.

ஆரம்பித்த ஹோமத்தை ஆசாரியனே முடித்து வைப்பார். மாணவன் மந்திரங்கள் சொல்லி பின் துணியால் போர்த்துக்கொண்டு இருந்து சூரிய அஸ்தமனம் போதுதான் வீட்டில் பிரவேசிக்கணும். கண்ணை மூடிக்கொண்டு சிறிது நேரம் இருக்க வேண்டும்.
அன்று இரவு உறங்கி காலை எழுந்து வீட்டுக்கு வெளியே அக்னி, சூர்யன், பூர்ணகும்பம், ஆகாசம். மலை, கன்றுக்குட்டி எல்லாத்தையும் பார்த்து மந்திரங்கள் ஜபிக்க வேண்டும். பிறகு வேத பாடங்கள் தொடர்ந்து நடந்து முடிந்தபின் உத்சர்ஜனம் என்கிற கர்மா. இது முந்தைய கர்மா போலவே ஆனாலும் மந்திரங்கள் மாறும்.
( ஒரு ரிஷிகள் குழுவுக்கு ஹோமம் செய்து அவர்கள் கண்டு கொடுத்த மந்திரங்களை பயிற்சி செய்து, உத்சர்ஜனம் செய்து பின் அடுத்த ரிஷிகள் குழு குறித்து ஹோமம். இப்படியே நான்கும்.)

அதாவது காப்பி ரைட்ஸ் அக்னாலெட்ஜ் செய்கிறது போல அந்த அந்த வேத பாகத்தை பாடம் கேட்குமுன் அந்த மந்திரங்களை பிரபஞ்சத்திலேந்து கிரகித்து நமக்கு கொடுத்த ரிஷிகளுக்கு தர்ப்பணம், ஹோமம் செய்து திருப்தி செய்து பிறகு வேதம் கற்க வேண்டும். அந்த பாட பகுதி முடிந்த பின்னே அவருக்கு ஒரு நன்றி சொல்வது போல மீண்டும் தர்ப்பணம், ஹோமம்; அப்புறம் அடுத்த ரிஷிக்கு இதேபோல. இப்படியாக 4 பாகங்களையும் முடிக்க வேண்டும். இப்போதெல்லாம் வேத பாட சாலைகளில் கூட இந்த கிரமத்தில் பாடங்கள் நடக்கலை.
--
இப்போது நடப்பது: திருமணத்துக்கு முன்னே நமக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் வாத்தியார் எதோ செய்து வைக்க; வேத பாடம் சொல்ல வேண்டிய இடம் வரும் போது சொல்லி வைக்காமல்; "அப்பா! நாங்க வேதம் சொல்கிறோம். நீ கேட்டுக்கொண்டு இரு. அல்லது காயத்ரீ ஜபம் பண்ணிக்கொண்டு இரு"ன்னு சொல்லிட்டு அவங்க ஜபம் செய்ய அப்போதான் வருகிற ஒவ்வொரு உறவினரும் "அலோ" சொல்லி திருமணம் செய்து கொள்ள போகிறவரோட கை குலுக்கி சிரித்து பேச; இதெல்லாம் பாத்து நொந்துபோய் வாத்தியார்கள் வேத ஜபத்தை முடித்துக்கொள்ள, "ஒண்ணரை மணியாவது ஆகணுமே! எப்படி அதுக்குள்ள" ன்னு சிலர் முறைக்க; பெரும்பாலானவர்கள் அப்பாடா முடிஞ்சதுன்னு சந்தோஷப்பட ...போதும், வேணாம். சூரி சாருக்கு பிபி எகிறிடும். :-(

சிரத்தை இருப்பவர் வேத அத்தியயனம் செய்தவரானால், குறைந்தது வேத அத்தியயனம் பூர்த்தி ஆனபின் இந்த நான்கையும் செய்ய வேண்டும். இதைப்பத்தி முக்காலே மூணு வீசம் பேருக்கு தெரியலை என்பதால்தான் இப்படி விவரம் எழுதுகிறேன்.

வேத அத்தியயனம் செய்யாதவர் இப்போதாவது முன்திட்டமிட்டு ஒரு முழு நாளை ஒதுக்கி முழு கர்மாவையும் செய்ய வேண்டும்.

அதாவது ஒவ்வொரு காண்ட ரிஷிக்கும் ஹோமம் செய்து அந்த வேத பாகம் (குறைந்த பட்சம் எவ்வளவுன்னு கணக்கு இருக்கு) சொல்லச்சொல்ல திருப்பி சொல்லி, -அதாவது வேத அத்தியயனம் செய்கிறோம்- பின் பூர்த்தி ஆனதும் அடுத்த ரிஷிக்கு- இப்படி 4 கும் செய்து பிறகு வ்ரத உத்சர்ஜனம் செய்ய வேண்டும். காலை 6 மணிக்கு ஆரம்பித்தால் மதியம் 3 மணிக்கு முடிக்கலாம். அல்லது நிதானமா 2,3,4 நாட்கள்ள செய்யலாம்.
--
இப்படியாக வேத அத்தியயனம் பூர்த்தி ஆன பின் திருமணத்துக்கு ரெடி!


9 comments:

Geetha Sambasivam said...

//இப்படியாக வேத அத்தியயனம் பூர்த்தி ஆன பின் திருமணத்துக்கு ரெடி!//

இது திருமணத்துக்கு முதல்நாள் செய்யப் படும் விரதமா???? அல்லது பூணூல் போட்டதும் பையர் கத்துக்க வேண்டிய ஒன்றா??? வேத அத்யயனம் என்றால் இது மட்டுமேவா?? அன்று ஒருநாள் ஆசாரியார் சொல்றபடி செய்தால் போதுமானதா? அப்புறம் "நாந்தி" என்று பண்ணுவது பற்றியும் ஒண்ணும் வரலை இதுவரைக்கும். உபநயனத்துக்கு முன்னேயும் நாந்தி உண்டு. அதேபோல் திருமணத்துக்கு முதல்நாளும் நாந்தி உண்டு(திருநெல்வேலிக்காரங்க பண்ண மாட்டாங்க)இது வேறே, விரதம் வேறேயா????

ambi said...

//பெரும்பாலானவர்கள் அப்பாடா முடிஞ்சதுன்னு சந்தோஷப்பட //

மொய் பணத்தை குடுத்துட்டு (கீதா மேடம், உங்களுக்கு இல்ல இது)அடிச்சு பிடிச்சு பந்தில போய் உட்கார, கான்ட்ராக்ட் காரர் கடனேனு பறிமாற...

சரி, சரி, இப்ப உங்களுக்கு எகிறட போகுது. ;)))

இவ்ளோ விலாவரியா இருக்கும்னு எதிர்பாக்கலை.

திவாண்ணா said...

//இது திருமணத்துக்கு முதல்நாள் செய்யப் படும் விரதமா????//
அட, அதேங்க. சொல்லி இருக்கேனே!

//சாதாரணமா வேத படிப்புக்கு போகாதவங்க திருமணத்துக்கு முன்னால இதை செய்து கொள்ளறாங்க. ஆங்... விரதம்ன்னு சொல்வாங்களே..அதேதான்..//

//இப்போது நடப்பது: திருமணத்துக்கு முன்னே நமக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் வாத்தியார் எதோ செய்து வைக்க...//

// அல்லது பூணூல் போட்டதும் பையர் கத்துக்க வேண்டிய ஒன்றா??? //

ஆமாம். வேத அத்தியயனம் இப்ப யாரும் முனைந்து செய்வதில்லை. அதனால திருமணம் ஆகி ஆஸ்ரம தர்மம் மாறுவதுக்குள்ள பூர்த்தி செய்யணூமே? அதனால் இப்படி ஷார்ட் கட் ஆகிவிட்டது.

// வேத அத்யயனம் என்றால் இது மட்டுமேவா?? அன்று ஒருநாள் ஆசாரியார் சொல்றபடி செய்தால் போதுமானதா? //

இது மட்டுமே இல்லை. அது வேத பாடம் ஆரம்பிக்க அந்த அந்த ரிஷிகளோட அனுக்கிரகம் பெறத்தான். இதுக்கு அப்புறம் வேத பாடங்கள் சொல்லிக்கணும். ஒரு ரிஷி குழுவோட பாடங்கள் முடிந்தா உத்வாசனம் செய்துவிட்டு அடுத்த ரிஷி குழுவோட பாடங்களை அவங்களுக்கு ஹோமம் செய்து ஆரம்பிக்கனும்.
வேத பாட காலம்தான் வ்ரத காலம்.

//அப்புறம் "நாந்தி" என்று பண்ணுவது பற்றியும் ஒண்ணும் வரலை இதுவரைக்கும். உபநயனத்துக்கு முன்னேயும் நாந்தி உண்டு. அதேபோல் திருமணத்துக்கு முதல்நாளும் நாந்தி உண்டு... யா????//

.இது வேறே, விரதம் வேறேதான்.
நாந்தீ சிராத்தம் சிரத்தங்களை பத்தி பேசறப்ப பேசியாச்சே! எல்லா சுப கர்மாக்கள் முன்னேயும் அது உண்டு. நாந்தீன்னு சொல்கிறது நாந்தீ சிராத்தம்தான்.

திவாண்ணா said...

//சரி, சரி, இப்ப உங்களுக்கு எகிறட போகுது. ;)))//

எகிறாது அம்பி, பழகி போச்சு. பிபி பிரச்சினையும் இல்லை.
:-))

//இவ்ளோ விலாவரியா இருக்கும்னு எதிர்பாக்கலை.//

அதுக்குத்தானே எழுதறேன். :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//வேத அத்தியயனம் செய்யாதவர் இப்போதாவது முன்திட்டமிட்டு ஒரு முழு நாளை ஒதுக்கி முழு கர்மாவையும் செய்ய வேண்டும்.//

நான் 2 நாட்கள் பண்ணினேன்...நான் பண்ணினேன்னு சொல்றதை விட, எங்கப்பாவும், ஆச்சார்யரும் பண்ணி/பண்ண வைத்தார்கள்... :-)

Geetha Sambasivam said...

//இவ்ளோ விலாவரியா இருக்கும்னு எதிர்பாக்கலை.//

அதுக்குத்தானே எழுதறேன். :-)//

சுருக்கமா இருக்கேன்னு நினைச்சா, இப்படி ஒரு சப்போர்ட்டா?? :P:P:P

திவாண்ணா said...

mmm!கீஅக்கா எழுதினா அதுக்கு நேர்மாறா அவங்க சிஷ்யர்கள் சப்போர்ட் பண்றாங்க.
:-))
அவங்க அவங்க கடமையைஒழுங்கா செய்யறாங்க போல இருக்கு!
:-)))))
நேரம்!
மௌலி தொடர்ந்து என்னை ஆச்சரியத்துல ஆழ்த்தறார். மிக்க மகிழ்ச்சி! அவரோட அப்பாவுக்கும் ஆச்சாரியனுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

//மௌலி தொடர்ந்து என்னை ஆச்சரியத்துல ஆழ்த்தறார். மிக்க மகிழ்ச்சி!//

என்ன திவாண்ணா, இப்போவேஇப்படிச் சொல்லிட்டீங்க?. பின்னர் வரும் சில விஷயங்களிலும் உங்களை ஆச்சர்யப்படுத்த இருக்கிறேன். :)

//அவரோட அப்பாவுக்கும் ஆச்சாரியனுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.//

என் ஆச்சார்யனுக்கு உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன். அவரிடம் உங்களது இந்த நமஸ்காரங்களை தெரிவிச்சுடறேன். :-)

அப்பாவிடம் தெரிவிக்க இயலாது :(

திவாண்ணா said...

//பின்னர் வரும் சில விஷயங்களிலும் உங்களை ஆச்சர்யப்படுத்த இருக்கிறேன். :)//
படுத்துங்க படுத்துங்க! சந்தோஷம்தான்.

//அப்பாவிடம் தெரிவிக்க இயலாது :( //
தெரியும். அதனாலதான் நமஸ்காரங்களை சொல்லுங்க ன்னு எழுதலை.