Thursday, August 28, 2008
பும்ஸவனம் - சீமந்தம் படங்கள்
வீட்டிலே பும்ஸவனம் சீமந்தம் நல்லபடியா முடிஞ்சது.
கர்மா பத்தி அவ்ளோ எழுதினோமே அது தொடர்பா சில படங்களை போடலாமேன்னு தோணித்து. ஆற்காட்டார் பூந்து விளையாடிட்டார். ஹும்!
பெரியவங்க ஆசீர்வாதம் வாங்கிட்டு கர்மா ஆரம்பிக்கிறோம்.
---
இது உதகசாந்தி அபிஷேகம். உதகம் ன்னா தண்ணீர் என்பது அர்த்தம்.
---
பிரதிசர பந்தம். மஞ்சள் கயிற்றில -தேங்காய் மேலே பாருங்க- வாசுகி ஆவாஹனம். பக்கத்திலே குடத்திலே வருணன்.
--
ஹோமத்துக்கு எல்லாம் ரெடி
--
ரக்ஷை கட்டியாச்சு. காலைல வளைகாப்பு ஆயிடுத்து. வளையல்கள் கலர் புல்லா இருக்கு இல்லே?
--
ஆல மொக்கு நசுக்கி....
--
மூக்கிலே பிழியறாங்க.
~~~~
வகிடெடுக்க. இதுதான் முள்ளம் பன்றி முள்ளு + தர்ப்பை+ பேத்தி கிடைக்கததால ஆலங்கொத்து.
--
வகிடெடுக்கிறாங்க.
அவ்ளோதான் ஆச்சு! அப்புறமா பூச்சூடல்ன்னு நடந்தது. அதுக்குள்ள காமிரா மின்கல சக்தி தீந்து போச்சு!
நன்றி! பசங்களை மானசீகமா ஆசீர்வாதம் பண்ணுங்க!
Labels:
இரண்டாம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள்,
வளையல் படம் மட்டும் என் ஆபிஸ் கணிணில தெரியல, வீட்ல போய் பாத்துக்கறேன்.
தம்பதி சமேதரா, தம்பதிகளை ஆசிர்வாதம் பண்றது தான் பிளாக் ஆசிரியரா? :D
போன பதிவுல ஒரு சந்தேகம், இன்னும் 6 மாசத்துல தாத்தாவாகவோ பாட்டியாகவோ ஆக போறேன்! அப்படினு எழுதி இருக்கு. தாத்தா சரி, பாட்டி எப்படி..? புதசெவி. :))
வாழ்த்துக்கள்...:)
@ கவிநயா & மௌலி
நன்றி!
@ அம்பி,
ஆசீர்வாதம் பண்ணறது ர.ம வோட அப்பா அம்மா.
ஏன் த. ம வை காணோம்ன்னு ஏற்கெனவே திட்டு வாங்கியாச்சு!
:-))
அட, ஆம்மா! எப்படி பாட்டி ஆவேன்? ஹிஹிஹிஹி!
அட, நேத்திக்கே வந்துருக்கா?? தெரியலையே?? :P:P:P
அம்பி, பெண் குழந்தை பிறந்தால் பாட்டி ஆவார்னு நினைக்கிறேன், ஆண்குழந்தை பிறந்தால் தாத்தா, அந்த அர்த்தத்திலே சொல்லி இருக்கார் போலிருக்கு! :))))))))
//ஏன் த. ம வை காணோம்ன்னு ஏற்கெனவே திட்டு வாங்கியாச்சு! //
திட்டினது அவங்க தானே!! அப்போ சரி!
//தம்பதிகளை ஆசிர்வாதம் பண்றது தான் பிளாக் ஆசிரியரா? :D//
ஹிஹிஹிஹி!!!!!!!!!!!!
ஆகா, வாழ்த்துக்கள்.
அப்படியே எங்க சீமந்தத்தை ஞாபகப்படுத்திப் பார்த்தா - இங்கே உதகசாந்தி அபிஷேகம் பண்ணவே இல்லை.
:-( அதனால புண்ணியாவாசனத்திற்கு வாத்தியாரை மாத்திட்டோம்!
அப்புறம் ஆலமொக்கு, இந்தியாவில் இருந்து கொண்டு வந்திருந்தாங்க...
மூக்குப்பிழியும் போது, எப்படியாவது மூக்கில நுழைய வைக்கணும்ன்னு பிரயத்தனம் பண்ணினேன் பாருங்க!
:-)
மூக்குபிழிதலின் தத்துவம் என்னான்னா, குழந்தை கருப்பையின் இணைப்பிலிருந்து தானா பிரிய உதவும் - அப்படின்னு சொல்லறாங்க இங்கே:
http://www.trsiyengar.com/id156.shtml
@ ஜீவா
//இங்கே உதகசாந்தி அபிஷேகம் பண்ணவே இல்லை.//
:-(
//அப்புறம் ஆலமொக்கு, இந்தியாவில் இருந்து கொண்டு வந்திருந்தாங்க...//
பரவாயில்லையே! கருத்தா செஞ்சு இருக்காங்க./ இருக்கீங்க.
//மூக்குப்பிழியும் போது, எப்படியாவது மூக்கில நுழைய வைக்கணும்ன்னு பிரயத்தனம் பண்ணினேன் பாருங்க!
:-) //
இங்கே சப்போர்ட் பண்ண அம்மா நல்லாவே பண்ணாங்க. படத்தை பாருங்க. இம்மி கூட அசைய முடியாது. முதுகுல தாங்கிக்கொண்டு, உடம்பை பின்னால சாய்ச்சு, தலையையும் சாய்ச்சு, மூக்கின் நுனில விரலால மூக்கை தூக்கி கொடுத்து இருக்காங்க. உண்மையில இதை பாத்த பிறகுதான் இதை ப்ளாக் ஆ போடனும்னு தோணிச்சு.
//மூக்குபிழிதலின் தத்துவம் என்னான்னா, குழந்தை கருப்பையின் இணைப்பிலிருந்து தானா பிரிய உதவும் - அப்படின்னு சொல்லறாங்க இங்கே://
பாத்தேன். எந்த அடிப்படையில சொல்லறார்ன்னு தெரியலை.
கர்ப்பம் தெரிந்த உடனே செய்கிற கர்மா. ஏனோ 8 ஆம் மாசத்துக்கு வழக்கில போயிடுத்து. அதயே அவர் எழுதி இருக்கார். இப்படி சில தவறுகள். மேல் தகவல் இருந்தா சொல்லுங்கன்னு எழுதி இருக்கார். செய்யலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்.
அவருக்கு ஒரேயடியா மெயில் வர ஆரம்பிச்சுடுத்து போல இருக்கு. இ மெயில் ஐடி யை எடுத்துட்டார்!
//அவருக்கு ஒரேயடியா மெயில் வர ஆரம்பிச்சுடுத்து போல இருக்கு. இ மெயில் ஐடி யை எடுத்துட்டார்!/
:-( அடப்பாவமே!
படங்களைப் போட்டது - Impressive ஆக இருந்தது!
அப்புறம், பன்றிமுள் - என் தங்கையின் சீமந்தத்திற்காக வாங்கியது - இதற்கு பயன்பட அதை அவர் கொண்டு வந்திருந்தார்.
வகிடு எடுத்தபின், அதை தூக்கிப் போட்டு விட வேண்டுமாமே, வீட்டில் வைத்திருக்கக் கூடாதாமே!
அப்புறம், சீமந்தத்தின்போது, தான்யங்களை பச்சை மண்ணோடு பிசைந்து, சுமங்கலிகள் ஐந்துபேர் அவற்றை ஐந்து பிண்டங்களாக பிரித்து வீட்டின் ஈசான மூலையில் மண்ணில் வைத்திவிடச் சொன்னார். அவை நன்றாக வளர தண்ணீர் விடவும் சொன்னார்.
இப்போது அந்த தானியங்கள் செடியாக முளைத்து, காய்த்தும் இருக்கிறது. மொச்சை போன்ற அவற்றை பயன்படுத்தலாமா தெரியவில்லை!
சீமந்த விருந்து சாப்பிட்ட அலுப்பு இன்னும் தீரலையா?? இல்லாட்டி இன்னிக்கு போஸ்ட் இல்லையா???
ஜீவா மன்னிக்கணூம். இது எப்படி மிஸ் ஆச்சுன்னு தெரியலை. தாமதமா பப்ளிஷ் பண்ணி இருக்கேன்.
//இப்போது அந்த தானியங்கள் செடியாக முளைத்து, காய்த்தும் இருக்கிறது. மொச்சை போன்ற அவற்றை பயன்படுத்தலாமா தெரியவில்லை! //
தாராளமா பயன்படுத்தலாம். தப்பில்லை.
Post a Comment