Pages

Thursday, August 7, 2008

விவாஹம்



விவாஹம் என்கிற கர்மா அடுத்தது.
இது வர ப்ரேக்ஷணை என்பதுடன் ஆரம்பிக்கிறது. அதாவது வேத பாடம் முடித்து வீடு திரும்பிய மாணவர் இரட்டைப்படை அந்தணர்களை தக்ஷிணை தாம்பூலம் எல்லாம் கொடுத்து மகிழ வைத்து "எனக்கு தகுந்த கன்னிகையை பெண் பார்த்து வாங்க" ன்னு வேண்டிக்கிறார். அவங்களும் சரின்னு போய் பெண்ணை தேடி கண்டு பிடித்து சம்பந்தம் பேசி "இன்ன இன்ன குலத்தில் வந்த இன்ன வரனுக்கு உங்க இன்ன இன்ன பெண்ணை".. "தர்ம பிரஜையின் பொருட்டு" கொடுக்கும்படி கோருவார்கள்.

கன்னிகையின் அப்பா "சோபனம்" ன்னு சொல்லி சம்மதிப்பார். அந்தணர்கள் திரும்பி வந்து தாங்கள் போன காரியம் நல்லபடி முடிந்ததை தெரிவிப்பாங்க. பிறகு கல்யாண ஏற்பாடுகள் நடந்து கன்யாதானம் நடக்கும்.

கன்யாதானம்

விக்னேஸ்வர பூஜை முடித்து பெண்ணின் தந்தை மஹாவிஷ்ணுவை திருப்தி படுத்த கன்யாதானம் செய்வதாக சங்கல்பம் செய்கிறார்.

விஷ்ணுவுக்கு பூஜை நடக்கிறது. விஷ்ணு எங்கே வந்தார்? மாப்பிள்ளைதான் விஷ்ணு. அப்படி பாவித்துதான் கன்யாதானம். அவருக்கு, ஆசனம் கொடுத்து, நல்வரவு சொல்லி, கையில் ஜலம் கொடுத்து, அவரோட பாதங்களை அலம்பி "இன்ன இன்ன குலத்தில் பிறந்த இந்த பெண்ணை இன்ன இன்ன குலத்தில் பிறந்து விஷ்ணு சொரூபமாக விளங்கும் 
உங்களுக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்கிறேன்"ன்னு 3 தரம் சொல்லுவார்.

கிழக்கே பாத்து பெண்ணோட அப்பா நிற்க வரன் மேற்கு நோக்கி நிற்க பெண்ணோட தாய் வடக்க பார்த்து நிப்பாங்க. பெண்ணை தகப்பனார் தாரை வார்த்து கொடுக்கிறார். வரனும் வாங்கிக்கிறார்.

பிறகு வரனும் பெண்ணும் புதுப்பாயில் உட்கார்ந்து அக்னி வளர்க்கிறார்கள்.

கன்னிகையின் அப்பா மதுபர்க்கதானம் செய்கிறேன் ன்னு சங்கல்பம் செய்கிறார். பாத பூஜை செய்து கையில் நீர் வார்த்து அதை அவர் கீழே விட்ட பின் மதுபர்க்கம் தானம் செய்கிறார். மதுபர்க்கம் ன்னா என்ன?

தயிரில் தேன் கலந்து ஒரு பழைய பித்தளை தட்டால மூடி எடுத்து வருவாங்க. அதுதான் மதுபர்க்கம். சிலர் நெய்யும் சேர்பதுண்டு. இன்னும் சிலர் பொரியும் சத்துமாவும் கூட கலப்பாங்க. மாப்பிள்ளை இன்னும் கொஞ்சம் தெம்பா கர்மா செய்யட்டுமே என்கிற நல்ல எண்ணமா இருக்கலாம்!

மாப்பிள்ளை அதை வாங்கி மந்திரம் சொல்லி சாப்பிடறார். 3 முறை. (இதுக்குத்தான் இடுப்பில கர்சீப் வெச்சுக்கன்னு சொல்லிகிட்டே இருப்பாங்க. மாப்பிள்ளைகள் எங்கே கேக்கிராங்க! அந்த நேரத்தில தேடரதுதான் வழக்கம்.) அப்படியே கொஞ்சம் தண்ணியும் கைல வாங்கி குடித்த பின் வரனுக்கு ஒரு பசு மாட்டை கொடுக்கிறாங்க. அதை அவர் ரொம்ப பெருந்தன்மையோட ப்ரீயா விட்டுடறார்.

வரனுக்கு இப்ப சாப்பாடு போடறாங்க. (இல்லை சமயத்துல அல்வா கொடுத்தாலும் கொடுத்துடுவாங்க. எல்லாம் நேரம்!)

அப்புறம் மேற்கொண்டு கர்மா. இப்பதான் வரன் முதல் முதலா பொண்ண பாக்கறார். தானே பாத்து மந்திரங்கள் சொல்கிறார்.
ரெண்டு பேரும் உக்காந்து விவாஹ சங்கல்பம் செய்யறாங்க.

கன்னிகைக்கு சில சுத்தி சம்ஸ்காரங்கள் நடக்குது. மாப்பிள்ளை மந்திரம் சொல்லி தர்ப்பை புல்லால புருவ மத்தியை தடவி மேற்கே போடுவார். இந்த நேரத்துல கன்னிகை "அப்பா அம்மாவை பிரியறோமே" ன்னு நினைச்சு கண்ணீர் விட்டா கூட பிராயச்சித்தத்துக்கு மந்திரம் உண்டு! அந்தணர்கள் கன்னிகைக்கு மந்திர "குளியல்" செய்து வைப்பர். தர்ப்பை புல்லால ஒரு பிரிமணை மாதிரி செய்து தலையில் வெச்சு மந்திரம் சொல்லி ஒரு சின்ன நுகத்தடியின் வலது ஓட்டைய பிரிமணை மேலே வைப்பாங்க. இன்னும் ஒரு மந்திரம் சொல்லி கொஞ்சம் தங்கமும் அந்த ஒட்டைல வைப்பாங்க. (சாதாரணமா தாலியையே வைக்கிறாங்க. அப்படிதான் செய்யணும்னு ஒண்ணும் இல்லை. மேலும் இப்ப சொல்கிறது எல்லாம் க்ருஷ்ண யஜுர் வேத ஆபஸ்தம்ப சூத்திரப்படி. சூத்திரங்களை பொருத்து நடைமுறை மாறும்.)

ஐந்து மந்திரங்கள் சொல்லி துளித்துளியா நுகத்தடி ஓட்டை வழியா மந்திர நீர் விடறாங்க. பிறகு புதுசா புடவை கொடுத்து உள்ளே போய் ஈரத்தை துடைச்சு கொண்டு புது புடவை அணிந்து வர அனுப்பறாங்க.

எல்லாரும் பொண்ணு திரும்பி வர வரை பொறுத்துக்கொண்டு இருக்கணும்.

7 comments:

ambi said...

//அவருக்கு, ஆசனம் கொடுத்து, நல்வரவு சொல்லி, கையில் ஜலம் கொடுத்து, அவரோட பாதங்களை அலம்பி//

ஆமா, ரொம்ப சங்கடமா இருந்தது. நெளிந்தேன்.


நீங்க சொல்றது எல்லாம் இப்ப நினைவுக்கு வருது. எனக்கு வெறும் தயிர் தான் குடுத்தாங்க. செம பசி. மார்னிங்க் டிபன்ல கேசரி சூப்பரா இருந்ததுனு என் தம்பி வந்து வயித்தெறிச்சல கிளப்பினான். :))

கர்ச்சீப் எல்லாம் என் சித்தி பக்கத்துல இருந்து குடுத்தாங்க. :)

கண்ணுக்கு மை இட்ட மாமி தான் பழி வாங்கிட்டாங்க. சந்ரமுகி லக லக ஜோதிகா மாதிரி ஆக்கிட்டாங்க. :p

மெளலி (மதுரையம்பதி) said...

//அப்படியே கொஞ்சம் தண்ணியும் கைல வாங்கி குடித்த பின் வரனுக்கு ஒரு பசு மாட்டை கொடுக்கிறாங்க. அதை அவர் ரொம்ப பெருந்தன்மையோட ப்ரீயா விட்டுடறார்.

வரனுக்கு இப்ப சாப்பாடு போடறாங்க.//

எனக்கு போட்டாங்க...என் கல்யாணத்தில் நான் தான் முதலில் சாப்பிட்டேன்...அதிலும் என் மாமனார்-மாமியாரே பரிமாறனர் :)

மறுபாதிக்கு போடல்லன்னு அப்பறமா கம்ளெயிண்ட் ரெஜிஸ்டர் ஆனது வேற கதை.

//அந்தணர்கள் கன்னிகைக்கு மந்திர "குளியல்" செய்து வைப்பர். //

இது அந்தணர்கள் மந்திரம் சொல்ல, திருப்பிச் சொல்லி வரனே பெண்ணுக்குச் செய்வது...சரிதானே திவாண்ணா?

கிருத்திகா ஸ்ரீதர் said...

இந்த சுத்தி சம்ஸ்காரங்கள்ள ஒன்னுதானா நாமகரணமும்?

திவாண்ணா said...

வலை இணைப்பு சரியா இல்லை. அப்புறமா பதில்கள்.

Geetha Sambasivam said...

//வரனுக்கு இப்ப சாப்பாடு போடறாங்க.//


ம்ஹும், ப.த. கொடுக்கலை எங்க வீட்டுக் கல்யாணங்கள் எதிலும்!!!! :P :P :P

திவாண்ணா said...

ambi said...

//அவருக்கு, ஆசனம் கொடுத்து, நல்வரவு சொல்லி, கையில் ஜலம் கொடுத்து, அவரோட பாதங்களை அலம்பி//

<< ஆமா, ரொம்ப சங்கடமா இருந்தது. நெளிந்தேன்.>>

தண்ணி ரொம்ப சில்லுன்னு இருந்ததோ?
:-))

நீங்க சொல்றது எல்லாம் இப்ப நினைவுக்கு வருது. எனக்கு வெறும் தயிர் தான் குடுத்தாங்க. செம பசி. மார்னிங்க் டிபன்ல கேசரி சூப்பரா இருந்ததுனு என் தம்பி வந்து வயித்தெறிச்சல கிளப்பினான். :))

கர்ச்சீப் எல்லாம் என் சித்தி பக்கத்துல இருந்து குடுத்தாங்க. :)>>

மலரும் நினைவுகள்!

<< கண்ணுக்கு மை இட்ட மாமி தான் பழி வாங்கிட்டாங்க. சந்ரமுகி லக லக ஜோதிகா மாதிரி ஆக்கிட்டாங்க. :p>>

ஹிஹி!

August 8, 2008 10:04 AM

Blogger மதுரையம்பதி said...

<< இது அந்தணர்கள் மந்திரம் சொல்ல, திருப்பிச் சொல்லி வரனே பெண்ணுக்குச் செய்வது...சரிதானே திவாண்ணா?>>

ஆமாம்.

August 8, 2008 1:24 PM

Blogger கிருத்திகா said...

இந்த சுத்தி சம்ஸ்காரங்கள்ள ஒன்னுதானா நாமகரணமும்?

இல்லையக்கா!
ஜாதகர்மா, நாமகரணம் எல்லாம் அந்த அந்த காலத்திலே செய்கிறது. முன்னேயே சொல்லி இருக்கேன்.
முன்னேயெல்லாம் வீட்டு வாத்தியார் இருப்பார். அவர் என்ன என்ன செய்தோம்னு நினைவு வெச்சுகொண்டு இருப்பார்.
இப்பெல்லாம் ஆள் மாகிட்டே இருக்கிறதால கர்மா நடந்துதா இல்லையான்னு தெரியாம செய்யாம இருந்தா குற்றம்ன்னு செய்து விடராங்க. நமக்குதான் என்ன செய்கிறாங்கன்னு புரியாதே. அதனால முன்னால செய்தாச்சான்னு சொல்ல தெரியலை. அவர்களும் கேக்கிறதில்லை.


August 8, 2008 5:38 PM

Blogger கீதா சாம்பசிவம் said...

//வரனுக்கு இப்ப சாப்பாடு போடறாங்க.//


ம்ஹும், ப.த. கொடுக்கலை எங்க வீட்டுக் கல்யாணங்கள் எதிலும்!!!! :P :P :P
??? பத?
பசு தானம்? தேங்காயை மந்திரம் சொல்லி உருட்டி விட்டு இருப்பாங்க.

Geetha Sambasivam said...

//ப.த. கொடுக்கலை//

பச்சைத் தண்ணீர் கூடக் கொடுக்கலைனு அர்த்தம்! :)))))) இது புரியலை???? நான் வேறே எதுவும் சொல்லலை! :))))))))