Pages

Friday, August 8, 2008

விவாஹம் - 2



இதோ பொண்ணு திரும்ப வந்தாச்சு. அந்த புதுப்புடவை கட்டிக்க மந்திரம் உண்டு. அதை சொல்லி வெச்சுதான் உள்ளே அனுப்பினாங்க.

அடுத்து மாங்கல்ய தாரணம். முன் காலத்துல எல்லா சினிமாலேயும் இடம் பெற்ற "மாங்கல்யம் தந்துனானேன" என்ற இது வேத மந்திரம் இல்லை. ஸ்லோகம்தான். அதே போல மாங்கல்ய தாரணம் முக்கிய கர்மா இல்லே. அதுவும் எப்படியோ முக்கியத்துவம் வாங்கிடுத்து.

அப்புறம் பெண் இடுப்பிலே மந்திரம் சொல்லி தர்ப்பையால் ஆன கயிற்றை மூன்று முறை சுத்திவிடறாங்க. வரன் பெண்ணோட கையை பிடிச்சு அக்னிகிட்டே அழைச்சு வரார். புதுப்பாயில் வடக்கிலே வரனும் அவனுக்கு வலது புறமா பெண்ணும் உட்காரனும். அக்னி காரியம் ஆரம்பித்துவிட்டு ஹோமம் செய்ய போற பொரியை சுத்தி செய்து, பெண்ணை மந்திரிக்கிறார்கள். இங்கேதான் நாத்திகர் பலராலும் பலவிதமா விமர்சனம் செய்ய படுகிற ஸோம பிரதம: என்ற மந்திரம். (அதைப்பத்தி எழுத இது சரியான இடமில்லை. தேவையானால் வேறு இடம்/ நேரத்துல எழுதலாம்.)

வரன் கவிழ்த்த தன் வலது கையால் நிமிர்ந்துள்ள கன்னிகையின் வலது கரத்தை முழுதும் கட்டை விரலையும் சேர்த்து பிடிக்க வேண்டும். இதுக்கு 4 மந்திரங்கள். இப்படி கையை பிடிச்ச பிறகு அக்னிக்கு வடக்கிலே வரன் கன்னிகையின் வலது காலை தன் இடது கையால் தொட்டு கிழக்கே பார்த்தோ இல்லை வடக்கே பார்த்தோ 7 அடிகள் எடுத்து வைக்க வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் ஒரு மந்திரம். 7 அடிகள் ஒருத்தருடன் நடந்தால் அவர் நண்பன் ஆகிவிடுகிறார் என்பது சாஸ்திரம். (சாவித்திரி கதை தெரியும் இல்லையா?) இத்தனையும் செய்யும் போது வலது கையை விடவே கூடாது. இந்த சப்தபதீதான் திருமணத்தோட முக்கிய கர்மா. சட்டப்படிகூட.

அடுத்து அக்னியை வலம் வந்து அமர்ந்து ஹோமம் செய்ய வேண்டும். அதை முடித்துக்கொண்டு அக்னிக்கு வடக்கே வைத்து இருக்கிற அம்மி மேலே வரன் கன்னிகையோட வலது கையை பிடிச்சுக்கொண்டு; இடது கையால் பெண்ணோட வலது பாதத்தை, கால் கட்டை விரலை பிடித்து ஏற்றி வைக்கணும். அப்புறம் அக்னி முன் உட்கார்ந்து பெண்ணோட இரண்டு கரங்களையும் அஞ்சலியா பிடிச்சு வலது கையில கொஞ்சம் நெய் தடவி அதன் மேலே பொரி 2 முறை வைத்து மேலே கொஞ்சம் நெய் ஊற்றி அக்னியில் அவள் கையால் ஹோமத்தை வரன் செய்விக்க வேண்டும். இது சில விதங்கள்லே மாறானது. முதல்ல ஔபாஸனம் தவிர வேறு ஹோமங்கள் பெண்கள் நேரடியாக செய்வதில்லை. அதே போல கையாலும் செய்வதில்லை. பெண்ணோட தம்பிதான் பொரி எடுத்து போடணும் என்பதெல்லாம் பிற்சேற்கை. சாத்திரம் சொன்னதில்லை. அப்புறம் மந்திரம் சொல்லி அக்னியை மூணு முறை வலம் வந்து திருப்பி அம்மி மிதித்தல். இதே போல 3 முறை.

அடுத்து ஹோமத்தை பூர்த்தி செய்து தக்ஷிணை எல்லாம் கொடுத்து, ஆசீர்வாதம் எல்லாம் முடிஞ்சா கல்யாணம் முடிந்தது. எல்லாரும் சாப்பிட போகலாம் (மொய் எழுதிட்டு!).

13 comments:

ambi said...

//இந்த சப்தபதீதான் திருமணத்தோட முக்கிய கர்மா. சட்டப்படிகூட.
//

எப்படி சட்டபடி..? புதசெவி.


//அம்மி மிதித்தல்//

நான் இதை அம்பி மிதித்தல்னு வாசிச்சுட்டு அரண்டு போயிட்டேன். :))

ambi said...

//எல்லாரும் சாப்பிட போகலாம் (மொய் எழுதிட்டு!).//

இதை கொஞ்சம் போல்ட் லெட்டர்ல போட்டு இருக்கலாம் நீங்க. :))

திவாண்ணா said...

//

எப்படி சட்டபடி..? புதசெவி.//

இந்து விவாஹ சமாசரங்கள் கோர்ட்டுக்கு போனா இந்த சப்தபதீதான் விவாஹமானதுக்கு நிரூபணமா ஆகும்.


//அம்மி மிதித்தல்//

நான் இதை அம்பி மிதித்தல்னு வாசிச்சுட்டு அரண்டு போயிட்டேன். :))//

அது தங்கமணியோட ரைட்ஸ்! நாங்க ஒண்ணும் செய்ய முடியாது!
:-))

மெளலி (மதுரையம்பதி) said...

அச்சச்சோ!!, சேஷ ஹோமம்/நாகவல்லி முடியாம எப்படி கல்யாணம் முடியும்?

ஓ அது நாலு நாள் ஔபாஸனம் செய்தபிறகுதான் சொல்லுவீங்களோ? :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//அப்புறம் பெண் இடுப்பிலே மந்திரம் சொல்லி தர்ப்பையால் ஆன கயிற்றை மூன்று முறை சுத்திவிடறாங்க//

ஆமாம், இதே மாதிரி உபநயனத்தில் வதுவுக்கும் உண்டு...

எதுக்கு பெயர் மெளஞ்சி தாரணம், உபநனத்துல வருவதுக்கு பெயரா, இல்லை திருமணப் பெண்ணுக்கு பண்ணுவதா, இல்லை ரெண்டுக்கும் இதே தான் பெயரா?.

உபனயனத்தில் இந்த மெளஞ்சியை 4 நாட்கள் கழித்து பலாச கர்மா பண்ணும் போதுதான் விசர்ஜனம் பண்ணினேன். இங்கே எப்படி என்று தெரியல்லையே? :-)

மெளலி (மதுரையம்பதி) said...

// அதே போல மாங்கல்ய தாரணம் முக்கிய கர்மா இல்லே. அதுவும் எப்படியோ முக்கியத்துவம் வாங்கிடுத்து.//

ஆமாம்...

//வரன் கவிழ்த்த தன் வலது கையால் நிமிர்ந்துள்ள கன்னிகையின் வலது கரத்தை முழுதும் கட்டை விரலையும் சேர்த்து பிடிக்க வேண்டும்.//

இப்படி பிடிக்கையில் முதலில் எப்படி பிடிக்கிறார்களோ அதைப் பொருத்து பல வியாக்கியானங்கள் கேள்விப் பட்டேன். அது பற்றி எழுதல்லையே?. :-)

//இத்தனையும் செய்யும் போது வலது கையை விடவே கூடாது. இந்த சப்தபதீதான் திருமணத்தோட முக்கிய கர்மா.//

ஆமாம்...என் ஆச்சார்யார் எனக்கு இட்ட கட்டளையில் இதுவும் ஒன்று. யாராவது கை குடுக்க வந்தால் கவனிக்காதே...கர்மா முடிந்த பின் சென்று விளக்கிக்கொள் என்று கூறிவிட்டார்..(இதனால் அன்பு பாதிக்கப்படவில்லை) :-)

//தம்பிதான் பொரி எடுத்து போடணும் என்பதெல்லாம் பிற்சேற்கை. //

பொரியிட்ட மைத்துனனுக்கு மோதிரம் போட வேண்டாமா, அதுக்குத்தான் :-)

இன்னுமொரு முக்கியமானது....திருமணத்தில் பையன் வீட்டு ஆச்சார்யருக்குத்தான் வேலை அதிகம் 90% செய்து வைப்பவர் அவர்தான் (பெண் வீட்டு வாத்தியார், பெண்ணுக்கு நாமகர்மா, ஜாதகர்மா, நாந்தீ ஆகியவற்றுடன் சரி)...ஆகவே அவருக்கு நல்லவிதமா ஆச்சார்ய சம்பாவனை பண்ணனும்....புடவை-வேஷ்டி கட்டி வராகன் எல்லாம் தந்துடுங்க :-)

Geetha Sambasivam said...

எல்லாரும் சாப்பிட போகலாம் (மொய் எழுதிட்டு!).

திரும்பித் திரும்பி மொய்யாஆஆஆஆஆ?? இல்லைனா நோ சாப்பாடு?? ஓகே, சாப்பாடு வேண்டாம் போங்க! :P

//ஓ அது நாலு நாள் ஔபாஸனம் செய்தபிறகுதான் சொல்லுவீங்களோ? :-)//

எங்களுக்கு இப்படித் தான் நடந்தது!

Geetha Sambasivam said...

//இந்த சப்தபதீதான் திருமணத்தோட முக்கிய கர்மா.//

இப்போ நடக்கிற கல்யாணங்களிலே தான் மாங்கல்ய தாரணம் மட்டுமே முக்கியமாப் போகிறதாலே, இப்போ எல்லாம் முதலிலேயே ஒரு பத்துநிமிடம் இது பற்றிய ஒரு சிறு சொற்பொழிவே கொடுக்கிறாங்க! சப்தபதி தான் இந்து திருமணச் சட்டத்தின்படி முக்கியமான ஒன்று என்பது பலருக்கும் தெரிவதில்லை. மாங்கல்யதாரணமே போதும்னு நினைக்கிறாங்க! :)))))

Geetha Sambasivam said...

//முன் காலத்துல எல்லா சினிமாலேயும் இடம் பெற்ற "மாங்கல்யம் தந்துனானேன" என்ற இது வேத மந்திரம் இல்லை.//

இப்போவும் பல சினிமாக்களில் வருது. இன்னும் சிலர் இது முக்கியமான மந்திரம்னே நினைக்கிறாங்க.

திவாண்ணா said...

//இங்கேதான் நாத்திகர் பலராலும் பலவிதமா விமர்சனம் செய்ய படுகிற ஸோம பிரதம: என்ற மந்திரம்.//

கீதா அக்கா இந்த லிங்க் அனுப்பி இருக்காங்க. 2 வருஷம் முன்னே அவங்க ப்ளாக்லே போட்டது.

http://sivamgss.blogspot.com/2006/07/92.html

திவாண்ணா said...

மதுரையம்பதி said...

அச்சச்சோ!!, சேஷ ஹோமம்/நாகவல்லி முடியாம எப்படி கல்யாணம் முடியும்?

ஓ அது நாலு நாள் ஔபாஸனம் செய்தபிறகுதான் சொல்லுவீங்களோ? :-)//

அதே!


Blogger மதுரையம்பதி said...

//அப்புறம் பெண் இடுப்பிலே மந்திரம் சொல்லி தர்ப்பையால் ஆன கயிற்றை மூன்று முறை சுத்திவிடறாங்க//

ஆமாம், இதே மாதிரி உபநயனத்தில் வதுவுக்கும் உண்டு...

எதுக்கு பெயர் மெளஞ்சி தாரணம்?

, உபநனத்துல வருவதுக்கு..

// இல்லை திருமணப் பெண்ணுக்கு பண்ணுவதா,//

இதுக்கு யோத்ரம் என்று பெயர்.

// உபனயனத்தில் இந்த மெளஞ்சியை 4 நாட்கள் கழித்து பலாச கர்மா பண்ணும் போதுதான் விசர்ஜனம் பண்ணினேன். இங்கே எப்படி என்று தெரியல்லையே? :-)//

ஜயாதி முடிந்தது மந்திரம் சொல்லி விசர்ஜனம். விட்டுப்போச்சு.


Blogger மதுரையம்பதி said...


//வரன் கவிழ்த்த தன் வலது கையால் நிமிர்ந்துள்ள கன்னிகையின் வலது கரத்தை முழுதும் கட்டை விரலையும் சேர்த்து பிடிக்க வேண்டும்.//

// இப்படி பிடிக்கையில் முதலில் எப்படி பிடிக்கிறார்களோ அதைப் பொருத்து பல வியாக்கியானங்கள் கேள்விப் பட்டேன். அது பற்றி எழுதல்லையே?. :-)//

யாராச்சும் கொடி தூக்குவாங்களோன்னுதான்.
:-))
அது ஆபஸ்தம்பரோட அபிப்பிராயம் மட்டுமே. அதனால விட்டுட்டேன்- யாரான கேட்டா சொல்லிக்கலாம்னு.
பெண் குழந்தை மட்டும் வேண்டுமானால் கட்டை விரலை விட்டு மத்த நாலையும் பிடிக்கணும்.
ஆண் குழந்தை மட்டும் வேணும்னா கட்டை விரல் மட்டுமே. இரண்டும் வேண்டும்னா ஐந்தையும்.

//இத்தனையும் செய்யும் போது வலது கையை விடவே கூடாது. இந்த சப்தபதீதான் திருமணத்தோட முக்கிய கர்மா.//

// ஆமாம்...என் ஆச்சார்யார் எனக்கு இட்ட கட்டளையில் இதுவும் ஒன்று. யாராவது கை குடுக்க வந்தால் கவனிக்காதே...கர்மா முடிந்த பின் சென்று விளக்கிக்கொள் என்று கூறிவிட்டார்..(இதனால் அன்பு பாதிக்கப்படவில்லை) :-)//

எங்க குடும்பத்தில இதை சுமார் 20 வருஷம் முன்னால என் நீஸ் கல்யாணத்தில் ஆரம்பித்து வைத்தேன். இப்பல்லாம் வாத்தியார் ஒரு சின்ன லெக்சரே கொடுக்கிறார். நல்ல விஷயம்.

//தம்பிதான் பொரி எடுத்து போடணும் என்பதெல்லாம் பிற்சேற்கை. //

பொரியிட்ட மைத்துனனுக்கு மோதிரம் போட வேண்டாமா, அதுக்குத்தான் :-)
:-))

// இன்னுமொரு முக்கியமானது....திருமணத்தில் பையன் வீட்டு ஆச்சார்யருக்குத்தான் வேலை அதிகம் 90% செய்து வைப்பவர் .... எல்லாம் தந்துடுங்க :-)//
நடை முறையிலே நீங்க சொல்கிறது சரிதான். இருந்தாலும் காலாகாலத்திலே செய்யாத விரதம் ஸமாவர்த்தனம் எல்லாம் சேர்ந்து கொண்டதாலதான் வேலை அதிகம். அதையெல்லாம் தள்ளிட்டு பாத்தா ஒண்ணேதான்.

August 8, 2008 6:16 PM

Blogger கீதா சாம்பசிவம் said...

எல்லாரும் சாப்பிட போகலாம் (மொய் எழுதிட்டு!).

// திரும்பித் திரும்பி மொய்யாஆஆஆஆஆ?? இல்லைனா நோ சாப்பாடு?? ஓகே, சாப்பாடு வேண்டாம் போங்க! :P //

அம்பி என்னடான்னா போல்ட் டா எழுதலைன்னு புகார். அவர் மொய்யையே நினைச்சுகிட்டுஇருக்கார். நீங்க என்னடான்னா சாப்பாட்டையே நினைச்சுகிட்ட் இருக்கீங்க. :-))
இல்லைனா நோ சாப்பாடுன்னு சொல்லவே இல்லையே! ஆசீர்வாதம் பண்ணா போதும்.

//ஓ அது நாலு நாள் ஔபாஸனம் செய்தபிறகுதான் சொல்லுவீங்களோ? :-)//

// எங்களுக்கு இப்படித் தான் நடந்தது!//
சரிதான்!

August 9, 2008 12:49 PM

Blogger கீதா சாம்பசிவம் said...

//இந்த சப்தபதீதான் திருமணத்தோட முக்கிய கர்மா.//

இப்போ நடக்கிற கல்யாணங்களிலே தான் மாங்கல்ய தாரணம் மட்டுமே முக்கியமாப் போகிறதாலே, இப்போ எல்லாம் முதலிலேயே ஒரு பத்துநிமிடம் இது பற்றிய ஒரு சிறு சொற்பொழிவே கொடுக்கிறாங்க!

நல்ல முன்னேற்றம்!

மெளலி (மதுரையம்பதி) said...

//நடை முறையிலே நீங்க சொல்கிறது சரிதான். இருந்தாலும் காலாகாலத்திலே செய்யாத விரதம் ஸமாவர்த்தனம் எல்லாம் சேர்ந்து கொண்டதாலதான் வேலை அதிகம். அதையெல்லாம் தள்ளிட்டு பாத்தா ஒண்ணேதான்//

உண்மைதான்.. :-)

குமரன் (Kumaran) said...

இந்த லாஜ ஹோமத்தின் போது உடன்பிறந்தவன் (தம்பியோ அண்ணனோ உடன்பிறந்தார் முறை உள்ள ஒருவனோ) பொரியை எடுத்துப் பெண்ணின் குவிந்த கரத்தில் வைக்க வேண்டும் என்ற வழக்கம் எப்படி வந்தது? கோதை நாச்சியாரும் 'அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கைவைத்து பொரிமுகம் தட்டக் கனா கண்டேன்' என்று தான் சொல்கிறார். அவருடைய அண்ணன் தம்பிகளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

http://godhaitamil.blogspot.com/2005/12/84.html

நாச்சியாரும் தாலி கட்டுவதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. ஆனால் மங்கல நாணைப் பற்றி சிலப்பதிகாரம் சொல்கிறது. அந்தணர் முன் நின்று நடத்திய அந்த திருமணத்தில் மங்கல நாண் இருந்திருக்கிறது. அதனால் தாலி கட்டுவது வைதிக மரபா தமிழர் மரபா என்று தெளிவாகத் தெரியவில்லை. :-)