Pages

Tuesday, August 12, 2008

விவாஹம் -சில குறிப்புகள்



போன பதிவுகள்ள பாத்த அத்தனை அங்கங்கள்லேயும் எது இருக்கோ இல்லையோ 5 முக்கியமானவை.
வாங்நிச்சயம், கன்யாதானம், வரன் பூஜிக்கப்பட்டு கன்னியை ஏற்றுக்கொள்ளுதல், கைப்பிடித்தல், சப்தபதீ.

அது சரி யார் இதை எல்லாம் இப்படின்னு முடிவு பண்ணாங்க?

ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்திலே 85 வது சூக்தத்தில் ஸோமன் என்கிற தேவன் விவாஹம் செய்து கொள்கிறதைப்பத்தி சொல்லி இருக்கு. ஸூர்யை என்பவளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு இரண்டு அச்வினீ தேவர்களையும் ஸவிதாவின் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். ஸவிதா கன்னிகாதானம் செய்ய ஒப்புக்கொண்டார். பிறகு சூரியனுடைய வீட்டுக்கு ஸோமன் சென்றான். அங்கு மிக மதிப்புடன் வரவேற்றனர். பிறகு அக்னி சாட்சியாக ஸூர்யையை கைப்பிடித்தான்.

இதையேதான் நாம் பின் பற்றி வருகிறோம்.

கன்யாதானம் செய்பவர் சங்கல்பம் செய்யும்போது "முன் 10 தலைமுறைகளிலும் பின் 10 தலைமுறைகளிலும் இந்த தலைமுறையிலும் ஆக 21 தலைமுறைக்கு இக்குலத்தினரின் ஆனந்தம் நிலையாக இருக்க வேண்டும்" என மஹாவிஷ்ணுவை பிரார்த்திக்கிறார். அதனால் மஹாவிஷ்ணுவே மாப்பிள்ளை வடிவில் வந்து கன்னிகையை ஏற்பதாக எண்ணி அவருடைய பாதங்களை பூஜிக்கிறார்.
“பொன் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த கன்னிகையை மகாவிஷ்ணு சொரூபமாகிய உமக்கு தானம் செய்கிறேன். பித்ருக்கள் கரையேறவும் பிரம்மலோகத்தை அடையவும் விரும்பி இந்த தானத்தை செய்கிறேன். இதற்கு இந்த உலகை தாங்கும் தேவதைகள் சாட்சி என்று கன்னிகாதானம் செய்பவர் கூறுகிறார்.

கன்னிகையை சுத்தி செய்யும் கர்மாவான நுகத்தடி ஓட்டை வழியாக நீர் வார்த்தல் குறித்து ஒரு கதை உள்ளது.

அத்ரி மகரிஷியின் பெண்ணான அபலா பிரம்மஞானி. தன் உடலில் இருந்த தோல் வியாதியின் காரணமாக திருமணம் ஆகாமல் இருந்தாள். அவள் இந்திரனை குறித்து தவம் இருந்தாள். சந்தோஷமடைந்த இந்திரன் தன் தேரின் நுகத்தடி துவாரத்தின் வழியாக நீர் விட்டு அவளுடைய ரோகத்தை சரி செய்தான். அவளும் சூரியனுக்கு ஒப்பான காந்தி உடையவளாகவும், தோஷம் இல்லாதவளாகவும் ஆனாள். (ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் போது மிதந்து வந்த ஸோம லதையை கடித்து இந்திரனுக்கு சேரட்டும் என்று நினைத்து அதன் ரசத்தை துப்பினாள் என்று கதை உண்டு.) ரிக் வேதத்தில் கூறப்பட்ட இந்த கதையில் அபலா செய்த ஸ்தோத்திரத்தில் இருந்து இந்த இடத்தில் கூறும் மந்திரங்கள் எடுக்கப்பட்டு உள்ளன.

கைப்பிடிக்கும்போது "நான் உன்னை கைப்பிடிப்பது நல்ல மக்களை பெற்று, வெகுகாலம் வாழ்ந்து, கிழத்தனம் வந்த போதும் அன்பு குறையாமல் மங்களமான கிருஹதாஸ்ரம தர்மத்தை கடை பிடிப்பதற்காக" என்று வரன் சொல்லுகிறார்.


சீதா கல்யாணத்திலும் ஜனகர் ராமனிடம் " இந்த சீதா என்ற என் பெண் உன் "ஸஹதர்மசாரீ" என்கிறார்.

5 comments:

ambi said...

புதிய கதை இன்று தெரிந்து கொண்டேன்.

கீதா மேடம் பதிவதில் நான்கில் ஒரு பங்கு தான் இங்கு பதிவா வருது. இத தான் ரத்ன சுருக்கம்னு சொல்வாங்க போலிருக்கு. :p

திவாண்ணா said...

@ அம்பி.
இதுக்குத்தான் பசங்களுக்கு கதை சொல்லனும்கிறது. உங்க பையனுக்கு சொல்லுவீங்கதானே?

ஆமாம், நேத்து தூக்கம் வரலியா? கீதா அக்காவை வம்புக்கு இழுக்கிறீங்க?
:-))
ராமாயணம் பதிவு போடுவதுக்கும் மத்ததுக்கும் வித்தியாசம் இருக்கும்தானே?

Geetha Sambasivam said...

@திவா, அது என்ன, அம்பிக்கு மட்டும் உடனே பதில்?? போகட்டும், என்னைக் கொஞ்சம் சப்போர்ட் பண்ணி இருக்கிறதாலே, ஒண்ணும் சொல்லலை! நோ ஸ்மைலி!!!!!!!!

மெளலி (மதுரையம்பதி) said...

//ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்திலே 85 வது சூக்தத்தில் ஸோமன் என்கிற தேவன் விவாஹம் செய்து கொள்கிறதைப்பத்தி சொல்லி இருக்கு//

அப்படியா?

சரி, யஜூர் வேதத்தில் என்ன சொல்லியிருக்கு?...ஏன் அதை நாம பின்பற்றுவதில்லை?. ஏதாச்சும் வித்தியாசம் இருக்கா?. கொஞ்சம் சொல்லுங்களேன்.

திவாண்ணா said...

@கீதா அக்கா
ம்ம்ம்ம்
இப்படி சப்போர்ட் பண்ணா கூட ஏன் அம்பிக்கு மட்டும்......... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

@ மௌலி
தெரியலையே! கேட்கிறேன். தெரிந்த வரை திருமண கிரமம் பத்தி குறிப்பா ஏதும் இல்லை.
மந்திரங்கள் பொதுவா ஏகாக்னி காண்டத்திலேந்து வருது.

வியாசர் பாகுபடுத்தியதுக்கு பிறகுதானே 4 வேதம். அதுக்கு முன்னேயே ஆரம்பித்து இருக்கலாம்.