அந்திம கர்மா
இது வரை பார்த்த எல்லாமே ஒருவன் தானே செய்ய வேண்டியவை. தன் நலம் இல்லாமலே வாழ்ந்து கடேசில தன் உடம்பையும் அர்ப்பணம் செய்யணும். ஆனால் உசுரோட இருக்கறப்ப எப்படி செய்யமுடியும்? அதனால இறந்த பின் அவரோட மகன் செய்யணும்.
இது அவரவர் ஆசாரம், க்ருஹ்ய ஸூத்திரம் பொருத்து பல நாட்கள் செய்வது. 13 நாட்கள் கருட புராணத்துல சொல்லி இருக்கு.
இது அத்தனையும் இங்கே போடுவதா உத்தேசம் இல்லை. கருட புராண பதிவு ஒண்ணு அப்பப்ப எழுதிகொண்டு இருக்கேன். அது பூர்த்தியான பிறகு சொல்லறேன். அதில பல விஷயங்கள் வரும்.
இங்கே சாதாரணமா நடக்கிற தப்புகளை மட்டுமே சொல்லி மேலோட்டமா கர்மாவை பாத்து போக உத்தேசம். அதே சமயம் கீ அக்கா எழுப்பின "பெண்கள் அந்திம காரியம் செய்யலாமா?” என்ற விஷயத்துக்கும் பதிலை பாத்துடலாம்.
ஒருவர் இறந்த பின்னால என்ன நடக்கும் என்பது ரொம்பவே சிக்கலான புரிந்து கொள்ள முடியாத விஷயம். இதை நான் சொல்லலை. யமதர்மன் நசிகேதன்கிட்டே சொன்னார். நசிகேதனோ விடாப்பிடியா தெரிஞ்சுக்கணும்ன்னு இருந்தார். யமன் ஏதேதோ ஆசையெல்லாம் காட்டிப்பார்த்தார். நிறைய பொருள், பொன், மங்கை, பணியாளர்கள் எல்லாம் தரேன்னு லஞ்சம் கொடுக்கப்பார்த்தார். எதுக்கும் நசிகேதன் அசையலை. அதனாலதான் நமக்கு கடோபனிஷத் கிடைச்சது.
இறந்தபின் என்ன ஆகும்கிறது பிலாஸபி. அது இப்ப இங்கே வேண்டாம். கர்மாவை மட்டுமே பார்ப்போம். பின்ன ஏன் இங்கே சொன்னேன்னா, இது முழுக்க முழுக்க நம்பிக்கை அடிப்படையில சிரத்தையோட செய்ய வேண்டிய காரியம். இதை விஞ்ஞான ரீதியிலே பாத்தா குழம்பும். அதை நினைவு படுத்தறேன்; அவ்வளோதான்.
மரண தருவாய்லே இருக்கோம் என்று தெரிந்தவன் குளித்து, நெற்றிக்கிட்டு கொண்டு, புண்யாஹம் என்கிற சுத்தி கர்மா செய்து துளசீ நீரோ, கங்கை நீரோ அருந்தி, சுத்தனாகி இறைவன் சன்னிதியிலோ நதிக்கரையிலோ பெரியோர் அனுமதி பெற்று, பிராயச்சித்தங்கள் செய்து கொள்ள வேண்டும். அட, சாக கிடக்கிறவன் எப்படி இந்த மாதிரி செய்ய முடியும்னா, சக்தி இடம் தர வரை என்று அர்த்தம். குளிக்க முடியாதா? மந்திர நீரை தலையில் தெளிச்சுக்கலாம். இப்படி முடிந்தவரை இதை செய்து கொள்ள வேணும். ஒண்ணுமே முடியாது என்றால் புத்திரன் செய்யணும்.
என்ன பிராயச்சித்தம்? காவேரி குளியல்தான். (காவேரி கரைவாசிங்க காலரை தூக்கி விட்டுக்கோங்கப்பா!) ஆனா இது வேற செய்ய சக்தி இல்லாதவங்களுக்கு. சக்தி உள்ளவர் (பணம் இருக்கிறவங்கன்னு பொருள்) சக்திக்கு ஏற்ப தச தானங்கள் செய்யணும்.
பசு, பூமி, எள், தங்கம், நெய், வஸ்திரம், தான்யம், வெல்லம், வெள்ளி, உப்பு - இவைதான் அந்த 10 பொருட்கள். பூமி கொடுக்க சக்தி இல்லைன்னா சந்தனக்கட்டை கொடுப்பது வழக்கம். வேறு ஏதாவது செய்ய தோணித்துன்னா அதையும் செய்யணும். தீட்டுன்னாக்கூட இதை செய்ய அனுமதி இருக்கு. இப்படி தானம் செய்கிறவங்க சிரமம் இல்லாம யமலோகம் போவாங்களாம். (யமலோகம்? ஆமாம். எல்லாருமே இங்க போய் அடென்டண்ஸ் கொடுத்துட்டுதான் மத்த இடத்துக்கு போகணும்.)
3 comments:
ஒரு சின்ன கேள்வி, இந்த கர்மா இறந்தவர் வேதத்தை, (அ), சூத்திரத்தை பொருத்து மாறுபடுமா?
ஆம் எனில் எப்படி என்பதை ஆங்காங்கே தொட்டுச் செல்ல வேண்டுகிறேன்.
ஆமாம். நிச்சயம் வேறுபடும். ஆனா அடிப்படைல ஒண்ணுதான். சில நுணுக்கங்களே வேறுபடும். தொட்டு போகணுமா? கொஞ்சம் பிரச்சனைதான். அவ்வளவு விரிவா தெரியவும் தெரியாது. பாக்கலாம்.
//. அவ்வளவு விரிவா தெரியவும் தெரியாது. பாக்கலாம்.//
மிக விரிவாக வேண்டாம் திவாண்ணா...எங்கு வேறுபாடு, எப்படி வேறுபடுகிறதுன்னு சொன்னா போறும்.. :) ....காரணம் எல்லாம் வேண்டியதில்லை..
Post a Comment