Pages

Monday, August 18, 2008

பாக யக்ஞங்கள்


மேலே பாக யக்ஞங்கள் 7.

அஷ்டகா, ஸ்தாலீபாகம், பார்வணம், ஆக்ரஹாயணீ, சைத்ரீ, ஆச்வயுஜீ.

சரூ சமைத்து யக்ஞங்கள் செய்கிறதாலே பாக யக்ஞங்கள். நள பாகம், பீம பாகம்... சரி.

இவை அத்தனையுமே ஒபாஸன அக்னியை பிரதானமாக உடையவை. அதாவது ஔபாஸனம் செய்கிறவர்தான் செய்ய முடியும்.

மாக மாதத்தில் அஷ்டகா முதலிய சிராத்தங்கள் செய்யணும்; அதற்கு முன் இரவு ஔபாஸனம் முடிந்த பின் ஒரு வகை அடை செய்து அஷ்டகா என்கிற தேவதைக்கு ஹோமம். மீதியை அடுத்த நாள் செய்கிற அஷ்டகா சிராத்தத்தில் வரிக்கிற 8 அந்தணருக்கும் கொடுப்பர்.நவமி சிராத்தத்தில் 5 அந்தணர்களை வரித்து சிராத்தம். அன்வஷ்டகை சிராத்தத்துக்கு பதில் ஔபாஸன அக்னியில் தயிரை கைகளால் ஹோமம் செய்வர்.

ஸ்தாலீபாகம்
ஒவ்வொரு பிரதமை அன்றும் ஔபாஸன அக்னியில் அரிசியை சமைத்து அதனால் ஹோமம். இந்த ஸ்தாலீபாகம் செய்ய தெரிந்தவர் எல்லா ஹோமங்களையும் செய்ய முடியும். ஏன் என்றால் மற்ற ஹோமங்களின் வரிசை கிரமத்துக்கு இதுவே ஆதாரம். இது தெரிந்து விசேஷ ஹோமத்தில் என்ன வேறுபாடு என்று தெரிந்தால் போதும்.

பார்வணம்:
இதை மாஸி சிராத்தம் என்றும் சொல்வர். ஸ்தாலீபாகம் எல்லா ஹோமத்துக்கும் முன் மாதிரியாக இருப்பது (ப்ரக்ருதி) போல எல்லா சிராத்தங்களுக்கும் இதுவே முன் மாதிரி. தகப்பனார் உயிரோடு (ஜீவ பித்ரு) இருப்பவர் செய்ய தேவை இல்லை. இதுதான் அமாவாஸை தர்ப்பணமாக வேற உரு எடுத்து இருக்கு.

ஸ்ராவணீ:
ஸர்ப்பபலி என்றும் சொல்வர். ஆவணி மாத பௌர்ணமியில் செய்வர். அன்று இரவு சரு, நெய் ஹோமம் செய்து, பலாஸ பூக்களை இரு கைகளாலும் ஹோமம் செய்து; புற்று இருக்குமிடத்திலோ சுத்தமான இடத்திலோ அரிசி மாவு கோலம் போட்டு ஸர்ப்ப மந்திரங்கள் சொல்லி போற்றுவது; இதை மார்கழி பௌர்ணமி வரை செய்வர். இது ஸர்ப்ப தோஷங்களுக்கும் சாந்தியாகும்.

ஆக்ரஹாயணீ:
ஸர்ப பலியை மார்கழி பௌர்ணமியில் பூர்த்தி செய்வது. அதே போன்றது.

ஆச்வயுஜீ:
புது அரிசியில் /சியாமை தான்யத்தால் பாகம் செய்து ஸ்தாலீபாக ஹோமம். சிசிர ருதுவில் செய்வர். கார்த்திகை பௌர்ணமி முக்கிய காலம்.

பாக யக்ஞங்களின் சிறப்பே ஹவிர்/ ஸோம யக்ஞங்களை போல இல்லாமல் சுலபமாக செய்யக்கூடியவை. அப்படி இருந்தும் இவை வழக்கொழிந்து போய் விட்டன.


17 comments:

Geetha Sambasivam said...

//சரூ சமைத்து யக்ஞங்கள் செய்கிறதாலே பாக யக்ஞங்கள். நள பாகம், பீம பாகம்... சரி.//

விளக்கம் ப்ளீஸ்!! "சரூ" சமைத்து??????? புரியலையே?

திவாண்ணா said...

களைந்த அரிசி இட்டு நீர் ஊற்றி கொதித்து வேகவிடறதுதான்.
வடிகட்டுவதில்லை. அவ்வளவே. சாதாரணமா இதுக்கு. "ஹவிஸ்" ன்னு பேர் வெச்சுட்டாங்க. ஹோமம் செய்கிற எல்லாமே ஹவிஸ்தான்

Geetha Sambasivam said...

//களைந்த அரிசி இட்டு நீர் ஊற்றி கொதித்து வேகவிடறதுதான்.
வடிகட்டுவதில்லை. அவ்வளவே. சாதாரணமா இதுக்கு. "ஹவிஸ்" ன்னு பேர் வெச்சுட்டாங்க. ஹோமம் செய்கிற எல்லாமே ஹவிஸ்தான்//

அட, ஆனால் ஹவிஸ் என்றால் பால் சேர்க்கணும் இல்லை?

திவாண்ணா said...

அவசியம் இல்லை.

ambi said...

//அதாவது ஔபாஸனம் செய்கிறவர்தான் செய்ய முடியும்.
//

சரி, அப்ப நான் சுண்டல் வாங்கிண்டு கிளம்பறேன்.(But read the full post) :))

//"சரூ" சமைத்து??????? புரியலையே?
//

@கீதா மேடம், இதெல்லாம் சமையல் சம்பந்த பட்டது, நீங்க போயிட்டு சாம்பு மாமாவை இந்த பக்கம் அனுப்புங்க. :p

மெளலி (மதுரையம்பதி) said...

//சியாமை தான்யத்தால்//

எங்கே கிடைக்கும்?.

திவாண்ணா said...

மைலாப்பூர் டப்பா செட்டி கடைல இது மாதிரி விஷயங்கள் எல்லாமே கிடைக்கும். வட இந்தியால சாதாரணமா கிடைக்கும்ன்னு நினைக்கிறேன்.

Geetha Sambasivam said...

மெளலிக்கு சியாமை என்று எழுதியதால் புரியவில்லையா??? அல்லது சாமைதான் சியாமை என்று நான் புரிஞ்சுக்கிறது தப்பா???

மெளலி (மதுரையம்பதி) said...

அஷ்டகா/அன்வஷ்டகா எல்லாம் பித்ரு தர்பணங்களில் வருமே (ஷண்ணவதி)..அந்த நாட்களும் இதுவும் ஒன்றுதானா?

அப்படின்னா, இந்த யக்ஞங்களைச் செய்பவர், இதுக்கு முன் அதை செய்து அப்பறமா இதைச் செய்வரா? இல்லை இரண்டும் ஒன்றுதானா?...ஹோமத்திற்கு பதிலாக தர்பணம் அப்படின்னு ஆனதில் இதுவும் ஒன்றா?

திவாண்ணா said...

கீ அக்கா, ரெண்டும் ஒண்ணுதான்.

@மௌலி
நாட்கள் ஒண்ணுதான்.
ஷண்ணவதி சிராத்தம்தான்.
அது கஷ்டம்ன்னு தர்பண ரூபமாகிவிட்டது. நீங்க சொன்னது சரி.

மெளலி (மதுரையம்பதி) said...

//மெளலிக்கு சியாமை என்று எழுதியதால் புரியவில்லையா??? அல்லது சாமைதான் சியாமை என்று நான் புரிஞ்சுக்கிறது தப்பா???//

நான் சியாமை/சாமை எதையும் பார்த்ததில்லை, ஏன்னா நான் ஒரு ஷாமம் ஆன ஆளு.. ஹிஹிஹி
ஆனா ஷியாம் தெரியும் :)

மெளலி (மதுரையம்பதி) said...

அண்ணா,

இன்னுமொரு கேள்வி....அடுத்த வருட ஆரம்பத்தில் இருந்து ஷண்ணவதி தர்பணங்கள் பண்ணலாமுன்னு இருக்கேன்...அது பற்றி மேலும் அறிய, தெரிந்து கொள்ள ஏதாவது புத்தகம் உங்களிடம் இருக்கா?.. தனி மெயிலில் சொன்னாலும் சரி. :)

திவாண்ணா said...

ரொம்ப சந்தோஷம்.
ஆனா கொஞ்சம் யோசிச்சு செய்யுங்க மௌலி.
தர்ப்பணம் வரும் நாட்கள்ல அதை அபரான்ன காலத்துல செய்து முடிச்சுதான் தேவ பூஜை, மற்ற தேவ காரியங்கள்.மேலும் அறிய விஷயங்கள் சேகரிச்சுடலாம். முக்கியமா சங்கல்பங்கள்.
சரிப்படுமான்னு பாருங்க. ரைட்டுன்னா உதவ நான் ரெடி.

மெளலி (மதுரையம்பதி) said...

//தர்ப்பணம் வரும் நாட்கள்ல அதை அபரான்ன காலத்துல செய்து முடிச்சுதான் தேவ பூஜை, மற்ற தேவ காரியங்கள்.மேலும் அறிய விஷயங்கள் சேகரிச்சுடலாம். முக்கியமா சங்கல்பங்கள்.
சரிப்படுமான்னு பாருங்க. ரைட்டுன்னா உதவ நான் ரெடி.//

ஆமாம் நீங்க சொல்வது சரி....எல்லா தர்பணங்களும் அபரான்ன காலத்தில் தான் செய்ய வேண்டியிருக்கு...அந்த நாட்களில் நான் தேவ பூஜையை கொஞ்சம் சுருக்கிக்கத்தான் செய்யறேன்..
பித்ரு கார்யம் மெயின் இல்லையா...நித்யவதியை கொஞ்சம் மாற்றிக்கலாம் அப்படின்னு சொல்லிக் கேட்டு/பார்த்திருக்கேன்.

இன்னும் ஒன்று, இப்போது பண்ணறது கஷ்டமென்றால் இன்னும் வயதாக-ஆக இதெல்லாம் கைவராமலே போயிடும் அப்படின்னு ஒரு பயம். முடிந்தவரை பண்ணிடனும் அப்படின்னு நினைக்கிறேன்....தவறில்லையே?..

திவாண்ணா said...

மௌலி ரொம்பவே சந்தோஷம்! நீங்க நினைக்கிறது சரிதான். மனிதன் சக்தி உள்ள போதே நல்ல விஷயங்களை செய்துடணும். எப்ப ஆரம்பிக்கிற உத்தேசம்ன்னு சொல்லுங்க.

மெளலி (மதுரையம்பதி) said...

அப்பா ஆப்திகம் முடியட்டும் (டிசம்பர்ல வருது)அண்ணா...மாஹாலயம் 16நாள் தர்பணமும் பண்ணி ஒரு முன்னோட்டம் விட்டுக்கறேன்.. :).
தமிழ் வருஷப் பிறப்போடு ஆரம்பிக்கலாம் என்று எண்ணம்...

திவாண்ணா said...

@மௌலி
நல்லது. அப்புறமா நினைவூட்டுங்க!