சிதை அடுக்க தகுதியான இடத்தை கர்த்தா புரசு / வண்னி கொத்துக்களால பெருக்கணும். (மந்திரம் உண்டு). சில்லரை நாணயம் ஏதேனும் நடுவில் வைத்து தர்ப்பைகளை பரப்பி தகுதியான காய்ந்த கட்டைகளால சிதையை அடுக்கணும். கிழக்கே சுத்தமான இடத்திலே அக்னியை வைத்து காரியம் ஆரம்பிக்கணும். சவத்தை பாடையிலிருந்து இறக்கி பின் பாடையை நாசம் செய்யணும். கை கால் கட்டுக்களை பிரிக்கணும். சிதை உள்பட எல்லாவற்றையும் நீர் தெளித்து பிரேதத்தை சிதை மீது வைப்பர்.
வாய், கண்கள், காதுகள், மூக்கு துவாரங்கள் ஆகியவற்றில் தங்க காசு வைப்பர். அல்லது நெய் விடுவர். தாயாதிகளும் கர்த்தாவும் பிரேதத்தின் வாயில் எள்ளும் அரிசியும் (கையை மரித்து) வைப்பர். பின் கர்த்தா அக்னியை மிச்சமில்லாமல் எடுத்து கொண்டு மந்திரம் சொல்லி கிழக்கில் மேற்கு முகமாக நின்று அக்னியை சிதையில் இடுவார்.
பிறகு வடக்கே வந்து தெற்கு நோக்கி மந்திரம் சொல்லுவார். பிறகு கிழக்கே பாத்து 9 ஹோமம். ஹோமம் செய்த கரண்டிகளை அக்னியில் போட்டுவிட்டு கிழக்கு நோக்கி உட்கார்ந்து ஜபம்.
இது முடிந்தா அனேகமா கர்மா முடிந்தது. மேற்கே வடக்கு நோக்கி கால்வாய் மாதிரி பூமியில் வெட்டி கல்லு, மண்ணு போட்டு, குடம் தண்ணீர் ஊத்தி, மந்திரம் சொல்லி -அதால எல்லா தாயாதிகளும் தலைல தெளிச்சுப்பாங்க. இது குளிக்கிறா மாதிரி. பிறகு வன்னி அல்லது பலாச கிளைகளை வடக்கு தெற்காக நட்டு அவற்றின் நடுவில தர்ப்பையால தோரணமா கட்டி அதன் கீழே தாயாதிகள் போவாங்க. இது சுத்தி செய்கிற கர்மா. அந்த கிளைகளை உடைச்சுபோட்டு, நீரை தொட்டு, சூரியனை துதித்து, சவத்தை பாக்காமல் விலகி முழுக்கு போட நீர் இருக்கிற இடத்துக்கு போகணும்.
வயதானவர்கள் துக்கத்துக்கான அடையாளங்களை கைக்கொள்ளுவர். கர்த்தா தெற்கு நோக்கி வணங்கி அந்தணர்களிடம் கர்மா நல்லபடியாக நடந்ததாக சொல்ல வேண்டும் என வேண்டி தக்ஷிணை கொடுத்து குளிக்கப்போவார். வீட்டுக்கு போய் அக்னியை பார்க்கிறது, நெய்/வேப்பிலை சாப்பிடறது, கல் மேல நிக்கிறது போல சம்பிரதாயங்களை ஸ்திரீக்கள் சொன்ன படி செய்து வீட்டுக்குள் போவர்.
இனி மேல் உள்ள இதன் தொடர்பான கர்மாக்களை இங்கே இப்ப பார்க்கப்போறதில்லை. அது ரொம்பவே பெரிசு. முதல்ல இவ்வளோ எழுதறதாவே இல்லை. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
இதில நடை பெறுகிற தவறுகளை பாத்துட்டு முடிச்சுக்கலாம்.
1. முதலில் சொன்னபடி காலம் கடந்து தகனம் செய்தல். காலம் கடந்தா பூத பிசாசங்கள் உடலை கொத்துகின்றனவாம். அதனால் துன்பம் ஏற்படும். கர்மாவும் சரியா செய்தது ஆகாது.
2. மாலைகளா போட்டு "அலங்காரம்" செய்கிறது.
3. சவம் போகிற பாதை எல்லாம் அந்த நேரத்துக்கு தீட்டு உண்டாகும். குறிப்பா கோவில்கள் சாத்தப்படணும். சவம் போன பிறகு சுத்தி கர்மா செய்தே நடை திறக்கனும். பல இடங்கள்ளே சன்னதி/ பிரகார தெருக்களிலேயே சவத்தை எடுக்காம காத்து இருக்கிறாங்க. வருமானத்துக்காக பாத்து கோவில்களையும் திறந்து விடறாங்க.,
4. நம்மில் 99.99% பேருக்கு சிகையே இல்லை. அப்ப எப்பவுமே தலைவிரி கோலமாதான் இருக்கோம். ஒரு பக்கம் பிரித்துங்கிற பேச்சுக்கே இடமில்லை.
5. பலர் (எங்க ஊர்லே) அக்னியை பிரேதத்தின் மார்பிலே போடறாங்க. ஏன், என்ன பிரமாணம்ன்னு கேட்டா தெரியலை. இதுதான் வழக்கம் என்கிறாங்க. வெட்டியானை விசாரிச்சா ஐயர்மாரை தவிர எல்லாரும் கீழேதான் கொளுத்துவாங்க என்கிறான். அவர்கள் அந்தப்பக்கம் போன பின் வெட்டியானே ஒரு முஷ்டி தர்ப்பை/ வைகோலை கொளுத்தி கீழே வைக்கிறான். அப்ப எல்லாருக்கும் கொள்ளி போடறது வெட்டியான்தான். :-(
6. வெட்டியான் எல்லாத்திலேயும் காசு பாக்கத்தான் பார்கிறான். கொடுக்கிற காசுக்கு பொருட்கள் வாங்கறதில்லை. எப்படி குறைந்த அளவு விராட்டியிலே அதிக இடம் மூடறதுன்னு அவங்களை பாத்து தெரிஞ்சுக்கலாம். இதனால சவத்தை முழுக்க எரிக்க முடியாது. பின்னே? நாம போன பிறகு தேவையான அளவு கெரோசின் ஊத்தி எரிய விடுவாங்க. இது ரொம்பவே பாபம். பின்னே என்ன செய்கிறது?
எல்லாரும் வீட்டுக்கு உடனேயே போகணும்ன்னு இல்லை. தைரியமா இருக்கிற சிலர் நின்னு முடிகிறவரை பார்த்துவிட்டு போகலாம். ஏன் தைரியம்ன்னு சொல்கிறேனா? நெருப்பால தசைகள் எரிக்கப்படுகிறபோது தசைகள் சுருங்கும். அதனால கை கால்கள் மடங்கும் / நீளும். இது தெரியாதவங்க உசுர் இருக்கோ என்னவோன்னு பயந்து போயிடுவாங்க.
முடிந்தவரை தகனம் செய்கிற இடத்திலே புதுசா மணல் கொட்டி நிறைய மரக்கட்டை/ விராட்டி அடுக்கி சவத்தின் மேலே ஒரு கிலோ சர்க்கரையும் தூவி, கீழே நெருப்பு வைக்கணும். கர்மா முடிந்து இந்த நெருப்பை கர்த்தாவே சுற்றிலும் பரவ செய்யலாம். வெட்டியானிடம் முன்னேயே பேசி ஏற்பாடு செய்துகொண்டு அங்கேயே நின்று தகனம் பூர்த்தி ஆவதை பார்த்துப்போகலாம்.
3 comments:
பிரேதத்தை சுமப்பது, மற்றும் நீங்க சொல்லியது போல அது முழுவதும் பஸ்பமாகும் வரை இருந்து கவனிப்பது போன்றவற்றை இன்றும் சில இடங்களில் பார்க்க முடிகிறது...இவை மிகுந்த புண்ணிய பலன் கொடுக்கக் கூடியது என்று கூறக் கேட்டிருக்கிறேன்.
// குறிப்பா கோவில்கள் சாத்தப்படணும். சவம் போன பிறகு சுத்தி கர்மா செய்தே நடை திறக்கனும். பல இடங்கள்ளே சன்னதி/ பிரகார தெருக்களிலேயே சவத்தை எடுக்காம காத்து இருக்கிறாங்க//
அக்கம்-பக்கத்தில் ஏதேனும் மரணம் சம்பவித்தால் அருகில் உள்ள வீடுகளிலேயே, பிரேதம் கடந்த பின்னர் வாசலில் நீர் தெளிப்பதும், பிரேதம் இருக்கும் வரை வீட்டில் சமையல் செய்யாது இருந்ததும் அறிவேன். இப்போ யாருக்கும் இதில் எல்லாம் சிரத்தை இருப்பதில்லை. :(
//இனி மேல் உள்ள இதன் தொடர்பான கர்மாக்களை இங்கே இப்ப பார்க்கப்போறதில்லை. அது ரொம்பவே பெரிசு. முதல்ல இவ்வளோ எழுதறதாவே இல்லை. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//
ஏன் இங்கே பார்க்க போறதில்லை?...அதை எங்கே/எப்போது எழுதுவீர்கள்?
ஆஹா. உண்மைதான் மௌலி. பல விஷயங்கலை இழந்து கொண்டு இருக்கிறோம்.
//ஏன் இங்கே பார்க்க போறதில்லை?...அதை எங்கே/எப்போது எழுதுவீர்கள்?//
கர்மாக்கள் அதில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு ரொம்பவே ட்ரை! அதனால சுருக்கிட்டேன்.
அடுத்த சுற்று ஒன்று வருவதாக உத்தேசம் -இறை அருள் இருந்தால். அப்போ பாக்கலாம்.
Post a Comment