Pages

Monday, August 4, 2008

உபநயனம்-4



நான்காம் நாள் பலாச கர்மா

மாணவன் மூன்று நாட்கள் அரிசியே பிக்ஷை எடுக்க வேன்டும். 4 ஆம் நாள் முதல் அன்ன பிக்ஷை. இதுவரை ஆபஸ்தம்பர் கூறியபடி கர்மாவுடைய வரிசையை பாத்தோம். இனி சொல்கிறது மற்றவர் எழுதியபடி.

கர்மா எது, எப்போ, எப்படி செய்யணும்னு கொஞ்சம்தான் வேதத்திலோ சாஸ்திரத்திலோ இருக்கும். முழு விவரங்கள் பாக்க கிருஹ்ய ஸூத்திரங்களைதான் பாக்கணும். அவரவர் ஸூத்திரப்படி கர்மாக்களை செய்யணும்.
அப்படி பார்க்கும்போது பலாச கர்மா சிலருக்கு இருக்கும்; சிலருக்கு இருக்காது.

4 ஆம் நாள் ஆசார்யனுடன் கிழக்கு அல்லது வடக்கு திசை சென்று ஒரு புரச மரத்தின் அடியில் 3 மண் திட்டுகள் செய்ய வேண்டும். முறையே பிரணவம், ஷ்ரத்தா தேவி, மேதா தேவி ஆகிய தேவதைகளை ஆவாஹனம் செய்து மந்திரங்களால் போற்றி முன் எடுத்துக்கிட்ட பலாச தண்டத்தை அங்கேயே விட்டுவிட்டு வேறு தண்டம் எடுத்துக் கொண்டு ஆசாரியனுடன் திரும்பணும்.

உபதேசம் செய்யப்போறவர் விசேஷமாக அதிக ஜபம் செய்து உபதேசம் செய்தால் நல்ல பலன் இருக்கும். அதுக்கு தனியா சங்கல்பமே இருக்கு.
இல்லாட்டா இருட்டுலேந்து இருட்டுக்கு போகிற மாதிரி ஆகிடும். அதனால் உபதேசம் செய்ய நல்ல குலத்திலே பிறந்து நல்ல அனுஷ்டானம் உள்ளவரை பார்த்து தேர்ந்து எடுக்கணும்.
சுமங்கலி பிரார்த்தனை முன் கூட்டியே தவறாமல் செய்யணும். சமாராதனையும் அவரவர் குல வழக்கப்படி செய்யணும். (சாதாரணமா அந்தணர்களுக்கு உணவளிக்கிறதுதான் சமாராதனை.)

அங்குரார்ப்பணம் என்பது புண்யாஹம் செய்து 5 பாலிகை கிண்ணங்களில் நெல், உளுந்து, எள்ளு, பச்சை பயறு, கடுகு ஆகியவற்றை மந்திர பூர்வமாக இட்டு பூஜை செய்தல். ஓஷதி ஸூக்தமும் சொல்லுவர். 5-7 சுமங்கலிகளும் ஜலம் தெளிப்பர். பின் தினசரி காலையும் மாலையும் ஜலம் தெளித்து பூஜை செய்து 5 ஆம் நாள் தேவதைகளை அனுப்பி வைத்து, நதியிலோ குளத்திலோ கரைத்துவிடுவர்.
பிரதிசர பந்தம் என்பது ரக்ஷை கட்டிக்கொள்ளல்.



14 comments:

திவாண்ணா said...

இத்தோட உபநயனம் முடிஞ்சது!
(appaataa)

Geetha Sambasivam said...

ada, ningaleva comment koduthundinga??????

Geetha Sambasivam said...

sari, sappadu illaiyaa?? :P

திவாண்ணா said...

நமக்கு நாமே திட்டம்!
இழுத்துக்கிட்டே போகுதுன்னு நினைக்கிறவங்களுக்காக போட்டேன்.

sury siva said...

உப நயனம் முடிந்தபின்னே, பூணுல் அணிந்து பிரும்மசர்யம் அனுசரிப்பேன்
என ஆசார்யனிடம் உறுதி அளித்தவன் பிறகு
சாஸ்த்ர சம்மதமான அனுஷ்டானங்கள், நித்ய கர்மாக்கள் என்னென்ன செய்யவேண்டும்
என என்பதையும் தொடர்ந்து எழுதவேண்டும்.

சமீபத்தில் உப நயன நிகழ்ச்சி ஒன்றில் பிக்ஷை போடுவது ஏதோ
ஒரு நூறு பேர் போட்டார்கள். இதைப்பற்றிய சரியான தகவலை
எடுத்துச் சொன்னபோது ஏதோ அவர்கள் பிக்ஷை போடுவது
எனக்குப் பிடிக்கவில்லைபோல என்று நினைத்திருக்கிறார்கள்.

காயத்ரி மந்த்ர உபதேசம் செய்யப்படும்போது ஒரு பட்டு வஸ்திரத்திற்குள்
தன்னையும் தன் பிள்ளையையும் மூடிக்கொண்டு மந்திரம் சொல்கிறார்கள்.
தான் சொல்லும் மந்திரம் விழுவதற்காக சாஸ்திரிகளும் அதற்குள் புகுந்து
கொள்கிறாள். பிள்ளையைப் பெற்ற தாயும் அதனுள். அவள் உள்ளே
நுழைவதைப் பார்க்கும் தந்தையின் தாயும் ( அதாவது உபனயனம் செய்து
வைக்கப்படும் பிள்ளையின் பாட்டி) உள்ளே புகுந்து கொள்கிறார்க்ள்.
இதற்கு என்ன தாத்பர்யம் என்று கோவில் மணி மாதிரி டாண், டாண்
என அடிக்கிறார்போல் விளக்க வேண்டும்.

இந்த காலத்தில் ஆசாரியன் ஸ்தானத்தில் வருபவர்களும்
இது பற்றிய தகவல்கள் அதிகம் தெரியாதவர்களாகவே இருக்கின்றனர்.

உங்களது கட்டுரை முழுவதும் முடிந்தபின்னே ஒரு புத்தகமாக
வெளியிட்டாலும் நல்லது.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

திவாண்ணா said...

// ஆசார்யனிடம் உறுதி அளித்தவன் பிறகு
சாஸ்த்ர சம்மதமான அனுஷ்டானங்கள், நித்ய கர்மாக்கள் என்னென்ன செய்யவேண்டும்
என என்பதையும் தொடர்ந்து எழுதவேண்டும்.//
தொடர்வது அதுவே ஐயா!

// சமீபத்தில் உப நயன நிகழ்ச்சி ஒன்றில் பிக்ஷை போடுவது ஏதோ
ஒரு நூறு பேர் போட்டார்கள். இதைப்பற்றிய சரியான தகவலை
எடுத்துச் சொன்னபோது ஏதோ அவர்கள் பிக்ஷை போடுவது
எனக்குப் பிடிக்கவில்லைபோல என்று நினைத்திருக்கிறார்கள்.//

ஹும்! என்ன செய்வது? ஒன்றும் தெரியாமல் இப்படி செய்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். இது கூட பரவாயில்லை. சதாபிஷேகத்தில் குஞ்சு குளுவான் முதல் எல்லாரும் வயசான கிழ தம்பதிகளுக்கு சில்ல்ல்ல்ல்ல் தண்ணீரில் "அபிஷேகம்" செய்வதை என்ன சொல்ல! பாவமாயிருக்கும். :-(

//காயத்ரி மந்த்ர உபதேசம் செய்யப்படும்போது ஒரு பட்டு வஸ்திரத்திற்குள்
தன்னையும் தன் பிள்ளையையும் மூடிக்கொண்டு மந்திரம் சொல்கிறார்கள்.
தான் சொல்லும் மந்திரம் விழுவதற்காக சாஸ்திரிகளும் அதற்குள் புகுந்து
கொள்கிறாள். பிள்ளையைப் பெற்ற தாயும் அதனுள்.//
மனைவி என்பவள் தனி entity இல்லை. புருஷனுடனேயே சேர்ந்தவள். அவள் இல்லாமல் அவன் இல்லை; அவன் இல்லாமலவள் இல்லை. ஆகவே இது வரை சரியே.
// அவள் உள்ளே
நுழைவதைப் பார்க்கும் தந்தையின் தாயும் ( அதாவது உபனயனம் செய்து
வைக்கப்படும் பிள்ளையின் பாட்டி) உள்ளே புகுந்து கொள்கிறார்க்ள்.//

அட, பார்த்ததில்லையே! இது சரியில்லை. அவருக்கு அங்கு வேலை இல்லை.

//இந்த காலத்தில் ஆசாரியன் ஸ்தானத்தில் வருபவர்களும்
இது பற்றிய தகவல்கள் அதிகம் தெரியாதவர்களாகவே இருக்கின்றனர்.//

தெரியாதவரும் இருக்கிறார்கள். உலகுக்கு தகுந்தாற்போல மாற்றி செய்து கொண்டு போகிறவர்களும் இருக்கிறார்கள்.
தெரியாதவர்களுக்கு நல்வழி காட்ட எளிய புத்தகங்கள் இருக்கின்றன. தமிழ் + நாகரியில். பயன்படுத்த தோன்றனுமே! நான் இப்போ ரெபர் செய்வது அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தைதான்.

// உங்களது கட்டுரை முழுவதும் முடிந்தபின்னே ஒரு புத்தகமாக
வெளியிட்டாலும் நல்லது.//

நாராயணா!

Geetha Sambasivam said...

// அவள் உள்ளே
நுழைவதைப் பார்க்கும் தந்தையின் தாயும் ( அதாவது உபனயனம் செய்து
வைக்கப்படும் பிள்ளையின் பாட்டி) உள்ளே புகுந்து கொள்கிறார்க்ள்.//

ithu unmaithan, தாத்தா, பாட்டி வரவேண்டாம் என்றால் அவங்களுக்குக் கோபமும் வருது!! என்ன செய்ய முடியும்??? அந்தப் புரோகிதர் தான் சொல்லவேண்டும். உங்க பிள்ளைக்கு நீங்க செய்ததே, உங்க பேரனுக்கு உங்க பையர் செய்யறார்னு. இது நானும் பார்த்திருக்கேன். :(((((((((((((((((((((( அதே போல் வரிசையில் நின்று பிக்ஷை போடுவதும், மறுத்தால் தப்பாய் நினைக்கிறாங்க. மேலும் பிக்ஷை போடும்போது தேங்காயோ, வெள்ளிக்காசு இல்லாட்டியும் குறைந்த பட்சமாய் ஒரு முழுக்காசாவது வைத்துக் கொள்ளவேண்டும். எவ்வளவோ அனாவசியமாச் செலவு செய்கின்றவர்கள் அதை வச்சுக்கிறதே இல்லை, புரோகிதரிடம் இருந்தே காசை வாங்கி, அந்த ஒரே காசையே 100 பேரும் திரும்பத் திரும்ப வைத்துக் கொண்டு போடுவதும் நடக்கிறது. நாமே நமக்கு அவமரியாதை செய்து கொள்கின்றோம். சொ.செ.சூ.

Geetha Sambasivam said...

ம்ம்ம் இதுக்குப் போட்ட கமெண்ட் எல்லாம் காக்காய் தூக்கிண்டு போயிடுத்தா?? அதிலேயும் பூணூலுக்கு அப்புறமா சாப்பாடு உண்டானு கேட்டிருந்தேன், அதுவும் வரலை! :(((((((((

திவாண்ணா said...

சாரி சாப்பாடுதானே? நிச்சயம் உண்டு. மொய் எழுதினா மட்டும்ன்னு யாரோ சொல்ற, மாதிரி இருக்கு!

Geetha Sambasivam said...

//மொய் எழுதினா மட்டும்ன்னு யாரோ சொல்ற, மாதிரி இருக்கு!//

அப்படின்னா????? :P

திவாண்ணா said...

அதானே! மொய் ன்னா என்ன? பொய் தெரியும். மொய்?
:-))))))))))

கிருத்திகா ஸ்ரீதர் said...

மிகவும் அருமையான எளிமையான விளக்கங்கள். தொடர்ந்து படித்து வந்தாலும் பின்னூட்டம் எதுவும் இட்டதில்லை.. ஆனாலும் இதை இங்கே பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது. சென்ற மே 2007 என் மகனுக்கு உபநயனம் செய்வித்தோம் அப்போது எங்களுக்கு அதன் தாத்பரியங்கள் முழுவதும் அடங்கிய புத்தகத்தை தேடி படித்து அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலில் தேடத்தேட முழுமையான விளக்கங்களோடு எந்த ஒரு புத்தகமும் கிடைத்த பாடில்லை அதனால் சிறுகச்சிறுக பல புத்தகங்களில் இருந்த் விஷயங்களை சேகரித்து நாங்களே ஒரு கையேடு போல பிரிண்ட் செய்து உபநயனத்திற்கு வந்த அனைவருக்கும் விநியோகித்தோம். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் நம்முடைய பல கர்மாக்கள் இப்படித்தான் விளக்கம் சொல்ல ஆளின்றி அழிந்து கொண்டு வெறும் சடங்காகிப்போனது. அதை டாகுமெண்ட் செய்யவேண்டும் என்ற ஆவல் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் தாங்கள் அதை மிகவும் செம்மையாக செய்வது கண்டு மிக்க மகிழ்ச்சி.

திவாண்ணா said...

கிருத்திகா வாருங்கள், நல்வரவு!

//மிகவும் அருமையான எளிமையான விளக்கங்கள்.//
நன்றி
// தொடர்ந்து படித்து வந்தாலும் பின்னூட்டம் எதுவும் இட்டதில்லை.. ஆனாலும் இதை இங்கே பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது.//

ஆஹா!

// சென்ற மே 2007 என் மகனுக்கு உபநயனம் செய்வித்தோம் அப்போது எங்களுக்கு அதன் தாத்பரியங்கள் முழுவதும் அடங்கிய புத்தகத்தை தேடி படித்து அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலில் தேடத்தேட முழுமையான விளக்கங்களோடு எந்த ஒரு புத்தகமும் கிடைத்த பாடில்லை அதனால் சிறுகச்சிறுக பல புத்தகங்களில் இருந்த் விஷயங்களை சேகரித்து நாங்களே ஒரு கையேடு போல பிரிண்ட் செய்து உபநயனத்திற்கு வந்த அனைவருக்கும் விநியோகித்தோம். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் நம்முடைய பல கர்மாக்கள் இப்படித்தான் விளக்கம் சொல்ல ஆளின்றி அழிந்து கொண்டு வெறும் சடங்காகிப்போனது. அதை டாகுமெண்ட் செய்யவேண்டும் என்ற ஆவல் எனக்கு எப்போதும் உண்டு.//

இது போல பல இடங்களில் முயற்சிகள் நடக்க வேண்டும். இந்த காலத்தில் விவரம் தெரியாமல் யாரும் எதையும் ஒப்புக்கொள்ள தயாரில்லை. நம்பிக்கை அப்புறம் வைக்கிறார்களா என்பது வேறு விஷயம். முடிந்த வரை கர்மாக்களோட தாத்பர்யம் தெரிந்து செய்யணும். அதுக்கு ஏதாவது ஒரு ஏற்பாடு செய்யணும்.

// ஆனால் தாங்கள் அதை மிகவும் செம்மையாக செய்வது கண்டு மிக்க மகிழ்ச்சி.//

நன்றி.
நீங்க எதை பார்த்து எழுதினீங்க? 40 சம்ஸ்காரங்கள் என்று ஒரு புத்தகம். பல விஷயங்கள் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் வெளியிட்ட கையேடு பிரதி இருக்கா? அனுப்பி வைக்க முடியுமா? முடியும் என்றால் உங்க பதிவுல என் முகவரியை தரேன்.
எப்படியாவது பையரை சமிதாதானம் செய்ய வையுங்க. நிச்சயம் நல்ல முன்னேற்றம் தெரியும்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

தாரளமா அனுப்பலாம். என் மின்னஞ்சல் முகவரியில் தங்கள் முகவரியை தெரிவிக்கவும். நாங்கள் பிரிண்ட் செய்தது என்பதால் பிரிண்டுக்கு முந்தைய பி.டி.எப் பக்கங்களும் உள்ளது அதை தங்களுக்கு மின்னஞ்சலும் செய்யலாம். எது உசிதம் என்று சொன்னால் அதன் படி செய்யலாம். நான் பல்வேறு புத்தகங்களை ஒருங்கிணைத்து செய்ய முயன்றோம். அதில் பெரும்பாலும் பங்கு வகித்தது.
01. கடலங்குடியின் மந்தர விதானம் (விதானம் என்றுதான் நினைக்கிறேன்).
02. இராமகிருஷண மடத்தின் வெளியீட்டாக வந்திருந்த உபநயனம் என்கிற புத்தகம்.
03. வேறு சில இணையப்பக்கங்களில் இருந்து எடுத்த குறிப்புக்கள் (இவை பெறும்பாலும் ஆங்கிலத்திலேயே அமைந்திருந்தது (அந்த சமயத்தில்)
04. அஹோபிலம்.காம் இருந்தும் சில விஷயங்களைத்தொகுத்துக்கொண்டோம்...

முதல் முயற்சி.. சிறு முயற்சி.. ஏதோ ஓரளவிற்கு திருப்திகரமாக வந்ததில் சந்தோஷமாயிருந்தது.