151.
தத்துவத்தின் மனமுறைத்து மித்தையெலா மறத்தலசம் சத்தியாகும்
அத்துவிதா னந்தம்வருந் திரிபுடிபோம் பதார்த்தாபா வனைய தாகும்
வத்துநிலை யிருந்தபடி யிருந்தமவு னசுபாவந் துரிய மாகும்
இத்துரிய பூமியைமுன் றுரியாதீ தப்பதமென் றதுவுங் கேளாய்
தத்துவத்தில் மனம் உறைத்து மித்தை எலாம் மறத்தல் அசம்சத்தி (சங்கல்பம் அறல்) ஆகும். (5ஆம் பூமி) அத்துவிதானந்தம் வரும்; திரிபுடி போம்; பதார்த்தா பாவனை அதாகும்.(6ஆம் பூமி). வத்து நிலை இருந்தபடி இருந்த மவுன சுபாவம் துரியமாகும். (7ஆம் பூமி) இத்துரிய பூமியை முன் துரியாதீதப் பதம் என்றதுவுங் கேளாய்.
--
5. சம் சத்தின்னா விஷயங்களில பற்று வைக்கிறது.
அசம்சக்தின்னா விஷய சம்பந்தம் இல்லாம இருக்கிறது. அதாவது 4 ஆம் பூமியின் அப்பியாசத்தால பிரபஞ்சம் முதல் எல்லாத்தையும் அகண்ட பிரம்ம சொரூபமாக காண்கிற அபரோக்ஷ (மறைவில்லா) அனுபவம் அடைஞ்சு, சாக்ஷாத்காரம் தவிர மற்ற எல்லா விஷயங்களில் இருந்தும் சம்பந்தத்தை உணர்விலிருந்து நீக்குதல்.
6. பதார்த்த பாவனை என்பது வெளியும் உள்ளும் எவ்வித பொருட்களின் தோற்றரவும் இல்லாது இருத்தல். அதாவது சமாதி அப்பியாசத்தால் பிரம்மான்ம ஐக்கியம் பூரணமாகி திரிபுடி என்னும் "காண்பவன்- காணப்படுவது- காட்சி" என்ற மூன்றும் நீங்கி இரண்டற்ற ஆனந்தம் அடைதல்.
7. துரியம் என்பது சாக்கிரம், சொப்பனம், சுசுப்தி என்ற மூன்று அவஸ்தைகளுக்கும் அப்பாற்பட்டது. திரிபுடி ஒழிந்து, சாக்ஷாத்கார நிலையில் அழுந்தி, பூரண மௌனமாய்; தன்னாலும் பிறராலும் வெளிவராமல்; நிர் விகல்ப சமாதி அடைவதே துரியம் ஆகும். இந்த நிலைக்கு போனவர் தானாகவும் வெளி வர மாட்டார். பிறராலும் இவரை வெளிவரச்செய்ய முடியாது.
இந்த துரீயமே துரியாதீதம் எனப்பட்டது.
3 comments:
கொஞ்சம் ஸ்லோ டவுன் ப்ளீஸ்!
என்ன தான் வெறும் தியரி லெவல் தான்னாலும், துரீயமே துரீயாதீதம்னு சொல்றப்ப அடியைப் பிடியடா பாரத பட்டான்னு மறுபடியும் ஆரம்பத்துலேயிருந்து ஞாபகப் படுத்திக்க வேண்டியிருக்கும்போல இருக்கே:-(
//துரியம் என்பது சாக்கிரம், சொப்பனம், சுசுப்தி என்ற மூன்று அவஸ்தைகளுக்கும் அப்பாற்பட்டது. திரிபுடி ஒழிந்து, சாக்ஷாத்கார நிலையில் அழுந்தி, பூரண மௌனமாய்; தன்னாலும் பிறராலும் வெளிவராமல்; நிர் விகல்ப சமாதி அடைவதே துரியம் ஆகும். இந்த நிலைக்கு போனவர் தானாகவும் வெளி வர மாட்டார். பிறராலும் இவரை வெளிவரச்செய்ய முடியாது.
இந்த துரீயமே துரியாதீதம் எனப்பட்டது.//
நம்மளாலே எட்டமுடியாத ஒன்று என்ற வரையில் புரிஞ்சுக்கறேன். கிருஷ்ணமூர்த்தி சார் சொன்னாப்போல துரீயமே துரியாதீதம்????? குழப்புதே! :((((
மன்னிக்க! அடுத்த பதிவில இது விளங்கிடும்.இப்படி சஸ்பென்ஸ் வைக்கிறதை தவிர்க்கப்பார்க்கிறேன்.
இப்போதைக்கு துரியாதீதம்ன்னு ஒண்ணும் கிடையாதுன்னே வைச்சுக்கலாம். சிலர் அப்படி சொல்கிறது ஏன்னு அடுத்த பதிவு விளக்கும்.
Post a Comment