155.
நாலாம் பூமியில் வருமுன் மூன்றுபூ மியுமடைந்து நடந்து மாண்டோர்
மேலான பதமடைந்து பிறந்து மெள்ள மெள்ளவந்து வீடுசேர்வார்
மாலான பவத்தில் விழார் முதற்பூமி கிடைப்பதுவே வருத்த மைந்தா
காலான முதற்பூமி கைவந்தான் முத்தியுங்கை வந்த தாமே
நாலாம் பூமியில் வரு முன் மூன்று பூமியும் அடைந்து நடந்து மாண்டோர் மேலான பதமடைந்து பிறந்து மெள்ள மெள்ள வந்து வீடு சேர்வார். மாலான பவத்தில் விழார். முதற் பூமி கிடைப்பதுவே வருத்த மைந்தா காலான முதற் பூமி கை வந்தான் முத்தியுங் கை வந்ததாமே.
ஆன்மீக நாட்டம் ஒத்தருக்கு வருது. கஷ்டப்பட்டு முன்னே போறார். வயசாயிடுது. இறந்து போறார். இது வரைக்கும் அவர் கஷ்டப்பட்டது வீணா?
ஒத்தருக்கு நிறைய வயசான பிறகுதான் ஆன்மீக நாட்டமே வருது. நமக்கு வாழ்க்கையே வீணா போச்சு. ஆன்மீகத்தில இனிமே என்ன சாதிக்கப்போறோம் ன்னு அதைரியப்படலாமா? .
நாமும் எத்தனையோ நாளா சாதனை சாதனைன்னு நேரம் போக்கிக்கிட்டு இருக்கோம். என்னத்தை சாதிக்க முடிஞ்சது? ஒரு இஞ்ச் கூட முன்னேறினதா தெரியலையே. ஒண்ணும் பிரயோசனம் இல்லைன்னு டிப்ரெஸ் ஆகலாமா?
தேவையில்லை.
நாம இந்த உலகத்தை விட்டு போகிறப்ப காசு பணம் நகை நட்டு வீடு வாசல் தோட்டமெல்லாம் கொண்டு போக முடியாது. ஆனா இந்த ஆன்மீக முன்னேற்றத்தை கொண்டு போகலாம். விட்ட இடத்திலேந்து தொடரலாம்.முதல் மூன்று பூமிகளை மட்டும் அடைந்து 4 வது பூமியின் அப்பியாசம் இல்லாமல் மரணமடைந்தவர் மேலான சுவர்க்கம் முதலான பதவிகளை அடைந்து பின் நல்ல வம்சத்தில் பிறந்து நான்காம் பூமி முதலானவற்றை அடைந்து மோக்ஷம் பெறுவர். (நல்ல வம்சம்ன்னா மேலே ஆன்மீகத்தில முன்னேற நல்ல சூழ்நிலையை தரக்கூடிய குடும்பம்.) அவர்கள் மயக்கத்துக்கு காரணமான பிறவியை திருப்பியும் அடைய மாட்டார்.
அதனால முதல் படியான சுபேச்சை கைவருவதே பிரயாசை. அதுக்குத்தான் கஷ்டப்படணும். அது கிடைச்சாச்சுன்னா மற்றவற்றுக்கு சுலபமா போயிடலாம். மற்றவற்றுக்கு காரணமான அது வந்துவிட்டால் முத்தியே கிடைச்சதாகும்.
இதைத்தான் பகவானை நோக்கி ஒரு அடி எடுத்து வெச்சா அவன் நம்மை நோக்கி பத்தடி எடுத்து வைக்கிறான்னு சொல்கிறாங்களோ என்னவோ.
அப்பாடான்னு இருக்கு இல்லே?
4 comments:
ஆமாம்! :)
:-))
//அப்பாடான்னு இருக்கு இல்லே?//
அப்பாடா! :)))))))
அப்பாடா!
Post a Comment