157.
பொல்லாத மிலேச்சருக்கும் விதேகமுத்தி தருஞான பூமியென்று
நெல்லாகி முளைக்குமெனைத் தண்டுலமாக் கியகுருவே நீர்சொன் னீரே
இல்லாளுங் குடும்பம்விட்டுச் சன்னியா சம்புகுந்தே காங்கியானோர்
அல்லாமன் முத்திபெறா ரென்றுசிலர் சொலுமயக்க மகற்று வீரே.
பொல்லாத மிலேச்சருக்கும் ஞான பூமி விதேக முத்தி தரும் என்று நெல்லாகி முளைக்கும் எனைத் தண்டுலம் (அரிசி) ஆக்கிய குருவே நீர் சொன்னீரே, இல்லாளும் குடும்பமும் விட்டுச் சன்னியாசம் புகுந்து ஏகாங்கியானோர் அல்லாமல் [மற்றவர்] முத்தி பெறார் என்று சிலர் சொல்லும் மயக்கம் அகற்றுவீரே.
--
முளைக்கக்கூடிய நெல்லில் இருந்து உமியை நீக்கி அரிசியாக்கியது போல அவித்தையாகிய அஞ்ஞானத்தால் மூடப்பட்டு இருந்த என்னை அஞ்ஞானம் நீக்கி பிரம்ம சொரூபமாகும்படி செய்த குருவே! இந்த ஞான பூமிகள் ஒன்று அல்லது இரண்டில் அப்பியாசம் உடையவர்களாக இருந்தால் அவர் மிலேச்சராக இருந்தாலும் ஞானிகளாக ஆவார்கள் என்றீர்களே. மனைவியையும் குடும்பத்தாரையும் விட்டு சன்னியாசி ஆனால் ஒழிய யாரும் முத்தி பெறார் என சிலர் சொல்கிறர்களே, அந்த சந்தேகத்தை நீக்க வேண்டும்.
--
உமியை நீக்கிவிட்டால் நெல் முளைக்க முடியாது. அப்படி பிறவி முளைக்காமல் அருளியதால் இந்த உவமை சொல்லப்பட்டது.
தெளிவாவே இருக்கு இல்லையா? இதை முன்னேயும் பாத்து இருக்கோம் - சன்னியாசியானாதான் முத்தியா?
4 comments:
//உமியை நீக்கிவிட்டால் நெல் முளைக்க முடியாது. அப்படி பிறவி முளைக்காமல் அருளியதால் இந்த உவமை சொல்லப்பட்டது.
தெளிவாவே இருக்கு இல்லையா? //
இதுவரைக்கும் சரி.
//இதை முன்னேயும் பாத்து இருக்கோம் - சன்னியாசியானாதான் முத்தியா?//
இங்கே தான் புரியலை! :(
அடுத்த பதிவிலே புரியும்.:-)
ம்ம்ம்ம்ம்ம்ம்...இப்பல்லாம் மீதியை வெள்ளித் திரையில் காண்கன்னு முன்னாட்களில் திரைப்படச் சுருக்கம் போட்டு விளம்பரம் பண்ணின மாதிரி,
இந்தப்பதிவின் விளக்கம் அடுத்த பதிவுல புரியும் [தொடரும்]:-((
ஏற்கெனெவே எடுத்த பிறவிகளில் என்ன நடந்தது, ஏன் நடந்ததுன்னு புரிஞ்சுக்கறதுக்கே, இன்னும் இன்னும்னு பிறவி எடுக்க வேண்டியிருக்கிற சூழ்நிலையில், தியரியாவது கொஞ்சம் சஸ்பென்ஸ் வைக்காம நேரடியா சொல்லக் கூடாதா?
மன்னிக்கணும். ஏறத்தாழ 5 பதிவுகள் ஒரே விஷயம் பத்தி பேசும்போது அத்தனையும் ஒண்ணா போட முடியலை. தவிர்க்கப்பார்க்கிறேன்.
Post a Comment